ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 35
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 35
நிகழ்ச்சி எண்: 0053

வாசியுங்கள்

மீண்டும் இந்த ஊடகத்தின் மூலமாய் உங்களை சந்திப்பதற்காக மகிழ்ச்சி அடைகிறோம் / கர்த்தரை துதிக்கிறோம். இந்த ஊடகத்தில் இந்த நிகழ்ச்சியை கவனித்து கொண்டிருக்கிற நீங்கள் ஒருவேளை தவிர்க்க முடியாத காரணத்தினால் தொடர்ந்து கேட்க முடியவில்லை என்றாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் மற்றும் ஒரு நேரத்திலே இதை நீங்கள் கேட்க முடியும்.

ஆதியாகமம் 34-ஆம் அதிகாரத்தைப் படித்த பிறகு, “பெனியேலில் யாக்கோபின் வாழ்க்கை மாறியது” என்று நான் சொன்னது ஒரு பெரிய தவறு என்று நீங்கள் நினைக்கலாம். உண்மைதான், 34-ஆம் அதிகாரத்தில் நடந்த நிகழ்வுகளில் பெரிய மாற்றங்கள் எதையும் நாம் பார்க்கவில்லை. ஆனால், அங்கே ஒரு மாற்றம் நிகழ்ந்தது என்பதுதான் உண்மை.
பெனியேலில் யாக்கோபுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஒரு “திருப்புமுனை” (crisis experience) என்று சொல்ல முடியுமா? என்பது சிலருடைய கேள்வி.. ஏனென்றால், அப்படிப்பட்ட ஒரு அனுபவம் இல்லையென்றால் ஒருவரிடம் மாற்றமே இல்லை என்று பலர் மிகைப்படுத்திப் பேசுகிறார்கள். அது உண்மையல்ல. சிலருக்குத் தங்கள் வாழ்க்கையில் ஒரு அற்புதமான திருப்புமுனை அனுபவம் இருக்கலாம், அதை அவர்கள் நினைவுகூரலாம். ஆனால் பலருக்கு அப்படிப்பட்ட அனுபவம் இல்லாமலேயே இருக்கலாம், அல்லது அவர்கள் அதை ஒரு முக்கியமான விஷயமாகக் கருதாமல் இருக்கலாம்.
ஆனால் யாக்கோபு பெனியேலுக்கு வந்தபோது, அவரிடம் ஒரு பிரம்மாண்டமான மாற்றம் ஏற்பட்டது. பிறந்தது முதல் பெனியேல் வரை யாக்கோபின் வாழ்க்கை எப்படி இருந்தது? சுயநலம் நிறைந்ததாகவும், மாம்சத்தின் பிடிவாதம் கொண்டதாகவுமே இருந்தது — அதுதான் யாக்கோபு. ஆனால் பெனியேலில் உண்மையில் என்ன நடந்தது? அங்கே அவனது “சுயம்” சரிந்து விழுந்தது. காற்று இறங்கிய டயர் போல ஆகிப்போனார். இருந்தாலும் 34-ஆம் அதிகாரத்தில் நடந்த காரியங்களை நாம் கவனிக்கும் பொழுது, அவர் இன்னும் முழுமையாக விசுவாசத்தில் நடக்கத் தொடங்கவில்லை என்பதையே காட்டுகின்றன.
ஏசா அங்கிருந்து புறப்பட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பியவுடனேயே, யாக்கோபு தன் குடும்பத்தைச் சாலேம் (Shalem) நகருக்கு அழைத்துச் சென்றார். இது ஒரு மிக மோசமான முடிவாகும். யாக்கோபு அப்போதும் தன்னுடைய சொந்த புத்திசாலித்தனத்தையே நம்பிக் கொண்டிருந்தார். அங்கே தீனாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். அவளுடைய உடன் பிறந்த சகோதரர்களான சிமியோனும் லேவியும், இதற்குக் காரணமான அந்த இளவரசனிடம் சென்றார்கள். அவன் தீனாளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய போதிலும், அவர்கள் அவனைக் கொலை செய்தார்கள். யாக்கோபின் மகன்கள் அங்கே நடத்திய அந்தப் படுகொலைகள், இன்றும் நம் தேசத்தில் நடைபெறும் கொலைகளை விட விடப் பயங்கரமானவை. அவர்கள் வீட்டிற்குத் திரும்பிய போது யாக்கோபு அவர்களிடம், “இந்தத் தேசத்து மக்களிடையே என் பெயரை நீங்கள் கெடுத்துவிட்டீர்கள் – (நாற்றமெடுக்கச் செய்துவிட்டீர்கள்)” என்றுதான் சொன்னார்.
யாக்கோபு சீகேமிலுள்ள சாலேம் நகரில் தங்கியது ஒரு துயரமான முடிவு என்று பல வேத ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்; நானும் அதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு கேள்வி உண்டு: யாக்கோபு பெத்தேலுக்குச் செல்லத் தயாராக இருந்தாரா? தேவன் அவருக்குக் கொடுக்கவிருந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தாரா? இல்லை. 34-ஆம் அதிகாரத்தில் நடந்த கொடூரமான சம்பவங்கள் அனைத்தும், ஒரு மனிதன் தனது மாம்சத்தின் பலத்தால் நடந்துகொண்டிருந்ததன் விளைவே ஆகும். அவரிடம் இருந்த ‘சுயம்’ அல்லது பெருமை குறைந்திருந்தது உண்மைதான், ஆனால் கடவுள் மீது தெளிவான விசுவாசம் இன்னும் அவரிடம் தென்படவில்லை.
பெத்தேலுக்குத் தொடர்ந்து செல்லும் விசுவாசம் அவரிடம் இல்லாததால்தான், அவர் சாலேமிலேயே தங்கிவிட்டார். அவருடைய வாழ்க்கையில் நடந்த இந்தத் துயரமான சம்பவங்கள், அவர் தனது சொந்தக் குடும்பத்திலேயே ஒரு சிறந்த தலைவராக இல்லை என்பதைக் காட்டுகின்றன. அவர் வகிக்க வேண்டிய சரியான பொறுப்பை அவர் வகிக்கவில்லை. அவர் எந்த விதத்திலும் ஒரு ஆவிக்குரிய மாவீரராக (spiritual giant) அப்போது இருக்கவில்லை. அந்த பதினொரு மகன்களையும் வழிநடத்துவது என்பது உண்மையில் யாக்கோபுக்கு மிகவும் கடினமான, அவர் தயாராக இல்லாத ஒரு வேலையாகவே இருந்தது. இந்தத் துயரமான சம்பவத்திற்குப் பிறகுதான், யாக்கோபு இப்போது தன் வாழ்க்கையில் கடவுளின் கரத்தை உணரத் தொடங்குகிறார். முன்பே எடுத்திருக்க வேண்டிய சரியான முடிவை அவர் இப்பொழுதுதான் எடுக்கிறார்.
ஆதியாகமம் 35:1
‘1தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். ‘
…………………….
இப்போது கர்த்தர் யாக்கோபை மீண்டும் பெத்தேலுக்கு அழைக்கிறார். இந்தச் சோகமான அனுபவத்திற்குப் பிறகு, அவர் அங்கே செல்லத் தயாராகிவிட்டார். கவனித்துப் பார்த்தால், இதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டுச் செல்ல அவருக்குப் போதுமான விசுவாசம் இருக்கவில்லை. ஆனால் இப்போது, யாக்கோபு தனது குடும்பத்தில் ஒரு ஆவிக்குரிய தலைவராகப் பொறுப்பெடுக்க தொடங்குகிறார்.
பாருங்கள், ஆதியாகமம் 35:2
‘2அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக் கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். ‘
……………………..

யாக்கோபு தன் குடும்பத்தாரிடம் சில காரியங்களைச் செய்யும்படி கூறுகிறார். முதலாவதாக, “உங்களிடத்திலிருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போடுங்கள்” என்கிறார். இதைக் கேட்கும்போது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. யாக்கோபு ராகேல் மற்றும் லேயாளோடு தப்பி வந்தபோது, ராகேல் தன் தந்தையின் வீட்டிலிருந்த சிலைகளைத் திருடிக்கொண்டு வந்ததை நீங்கள் நினைவுகூரலாம். ஒட்டகத்தின் மேல் ஏறி அமர்ந்தபோது, அந்தச் சிலைகளைச் சுமைகளுக்கு அடியில் வைத்து அதன் மேலேயே அவள் உட்கார்ந்து கொண்டாள். யாக்கோபுக்கு அந்த நேரத்தில் இது தெரியாது. அதனால்தான் அவர் லாபானிடம் பேசும்போது, தன்னிடம் அந்தச் சிலைகள் இல்லை என்று மிகவும் நேர்மையாகக் கூறினார். லாபானிடம் அவர் உண்மையாகப் பேசிய ஒரு சில தருணங்களில் இதுவும் ஒன்று. அவை அங்கே இருப்பது அவருக்குத் உண்மையாகவே தெரிந்திருக்கவில்லை.
அந்தச் சிலைகள் இருப்பது யாக்கோபுக்கு தெரிய வந்த பொழுது, யாக்கோபு அவற்றை உடனே அகற்றியிருப்பார் என்றுதான் நாம் அனைவரும் நினைத்திருப்போம். ஏனென்றால், அவர் உயிருள்ள மெய்யான தேவனைப் பற்றி அறிந்திருந்தார்; அவரோடு நேரடித் தொடர்பும் (encounter) வைத்திருந்தார். ஆனால், அவர் அந்தச் சிலைகளை அகற்றவில்லை. இப்பொழுது பார்க்கும்போது, அவருடைய முழு குடும்பமே அந்த அந்நிய தெய்வங்களை வணங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்கிறோம். முதல் முறையாக, யாக்கோபு இப்போது ஆவிக்குரிய தலைமைத்துவத்தை ஏற்கிறார்; “இந்த அந்நிய தெய்வங்களை, இந்த உண்மையற்ற தெய்வங்களை அகற்றிப்போடுங்கள்” என்று கூறுகிறார். இப்பொழுது அவர்கள் செய்ய வேண்டிய முதல் காரியம், தவறானவற்றைத் தள்ளிவிடுவதுதான்.
இன்றும் வாரத்தில் ஆறு நாட்கள் வேறு ஏதோ ஒரு தெய்வத்திற்குச் சேவை செய்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஆண்டவருக்குச் சேவை செய்ய முயற்சிப்பவர்கள் அநேகர் இருக்கிறார்கள். பல கிறிஸ்தவர்கள், ஏன் விசுவாசத்தில் உறுதியாக இருப்பதாகச் சொல்பவர்கள் கூட, தங்களுக்குள் சில அந்நிய தெய்வங்களை வைத்திருக்கிறார்கள். நம்மை படைத்த கடவுளுக்கு கொடுக்க வேண்டிய முதலிடத்தை எந்த ஒரு பொருளுக்கோ அல்லது மனிதனுக்கோ நாம் கொடுப்போம் என்றால் அதுதான் நம்முடைய தெய்வமாகி விடுகிறது. இப்படி இருக்கும் பொழுது, ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் தங்களுக்கு ஏன் ஒரு எழுச்சியான அனுபவம் கிடைப்பதில்லை என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனே சகோதரியே, கர்த்தரை அறிந்திருக்கிற நீங்களும் உங்கள் அந்நிய தெய்வங்களை அகற்றி எறிய வேண்டும். உங்கள் வாழ்வில் அந்த தெய்வம் எதுவென்று எனக்குத் தெரியாது. அது ஒருவேளை ‘பேராசை’யாக இருக்கலாம். விசுவாசியாக இருக்கும் பல தொழிலதிபர்கள் பணத்தின் பின்னாலேயே ஓடுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமை ஆண்டவருக்குக் கொடுக்கும் அர்ப்பணிப்பை விட, பணத்தைச் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். பிறகு, தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் என்ன குறை?? என்று யோசிக்கிறார்கள். நீங்கள் முதலில் தேவனைச் சந்தித்த அந்த ‘பெத்தேலுக்கு’ மீண்டும் வர விரும்பினால், உங்கள் வாழ்க்கையில் உள்ள தவறான காரியங்களை முதலில் அகற்றிப்போட வேண்டும்.
அடுத்ததாக யாக்கோபு, “சுத்திகரியுங்கள்” என்று கூறுகிறார். ஒரு விசுவாசிக்கு இதன் அர்த்தம் தன் பாவங்களை அறிக்கை செய்வதாகும். உங்கள் வாழ்க்கையில் உள்ள பாவத்தை நீங்கள் சரி செய்ய வேண்டும். கடந்த வாரம் முழுவதும் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதை அப்படியே மறந்துவிட்டுச் சபைக்கு வர முடியாது. நீங்கள் சபைக்கு வரும்போது குளித்துவிட்டு, நறுமணத் திரவியம் (deodorant) பூசிக்கொண்டு வருகிறீர்கள்; ஆனால் நம் சபைகளில் “ஆவிக்குரிய உடல் நாற்றம்” வீசுகிறது. ஏனென்றால் அங்கே பாவ அறிக்கை இல்லை, சுத்திகரிப்பு இல்லை. “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கைசெய்தால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” / /(1 யோவான் 1:9). நாம் பாவத்தை அறிக்கை செய்ய வேண்டும். அவர் மன்னிப்பார், ஆனால் நாம் அறிக்கை செய்ய வேண்டியது அவசியம்.
மேலும் “உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள்” என்றும் அவர் கூறுகிறார். அதாவது, பழைய ஆடைகளை எறிந்துவிடுங்கள். வேதாகமத்தில் “வஸ்திரங்கள்” (Garments) என்பது நமது பழக்கவழக்கங்களைக் குறிக்கிறது. ஒரு குதிரை வீரர் அல்லது ஒரு கால்பந்து வீரர் தங்களுக்குரிய சீருடையை அணிந்திருப்பதைப் போல, தேவனுடைய பிள்ளையும் தான் யார் என்பதையும், தான் யாருக்குச் சொந்தமானவர் என்பதையும் வெளிப்படுத்தும் விதத்தில் ஆடை அணிய வேண்டும், அதாவது வாழ்க்கை நடத்த வேண்டும். நீங்கள் கர்த்தருக்குரிய பழக்கவழக்கங்களை அணிந்திருக்கிறீர்களா? உங்கள் அலுவலகத்திலோ, பள்ளியிலோ அல்லது அக்கம் பக்கத்திலோ நீங்கள் மற்றவர்களிடமிருந்து சற்றே வித்தியாசமானவர் என்பதற்கான அடையாளம் இருக்கிறதா? நீங்கள் ஒரு குறிப்பிட்ட (சீருடையை அணிந்திருக்கிறீர்கள்) அதாவது குறிப்பிட்ட பழக்கத்தை உடையவர்களாக இருக்கிறீர்கள் . யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்பிய அந்த நாளில்தான், அவர் கடவுளுக்காக வாழத் தொடங்கினார். அதுவரை அவர் அப்படி வாழவில்லை என்றே சொல்லலாம். இப்போது அவர், “நாம் பெத்தேலுக்குத் திரும்புவோம்” என்கிறார்—நாமும் செய்ய வேண்டியது அதுவே. பெத்தேல் என்பது நாம் முதல் முதலில் பூரணமாய் தேவனை நம்பி அவருடைய கரத்திலே நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்த நிலை.
ஆதியாகமம் 35:3
‘3நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான். ‘
…………………..
ஆபிரகாமும் ஈசாக்கும் பலிபீடங்களை அமைத்தார்கள்; இப்போது யாக்கோபும் ஒரு பலிபீடத்தை அமைக்கப்போகிறார்—அதற்காகத் தேவனுக்கு ஸ்தோத்திரம். இதன் மூலம் அவர் தேவனுக்கு ஒரு சாட்சியாக விளங்குவார்.
“எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு ..” என்று அவர் கூறுகிறார். யாக்கோபு இங்கே எதை நினைவு கூர்கிறார் என்றால், தான் ஒரு வாலிபனாக வீட்டை விட்டு ஓடி வந்தபோது, வீட்டின் நினைவோடும் தனிமையோடும் பெத்தேலுக்கு வந்த அந்த நாளைத்தான் இப்பொழுது நினைவு கூறுகிறார். அன்று தேவன் அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தார். தேவன் அவரிடம், “நான் உனக்கு உண்மையுள்ளவனாயிருப்பேன்” என்று சொல்லியிருந்தார். பல வருடங்கள் கடந்துவிட்டன, தேவன் சொன்னபடியே அவருக்கு உண்மையுள்ளவராகவே இருந்தார். இப்போது தேவன் அவரிடம், “நீ மீண்டும் பெத்தேலுக்குப் போக வேண்டும். நீ எங்கே தொடங்கினாயோ, அந்த இடத்திற்கே திரும்பிப் போக வேண்டும். அங்கிருந்துதான் நீ ஆரம்பிக்க வேண்டும்” என்று கூறுகிறார்.
ஒரு அரைகுறையான, தரம் குறைந்த கிறிஸ்தவ வாழ்க்கையை நாம் வாழ்ந்து கழிக்கும் வருடங்கள் முற்றிலும் வீணானவை என்பதை நாம் உணர வேண்டும். தேவன் இஸ்ரவேல் புத்திரர்களை எகிப்திலிருந்து வெளியேறி, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்லும்படி அழைத்தார். தேவன் அவர்களுக்குத் தரிசனமாகி, அந்தத் தேசத்திற்குள் போகச் சொன்னார்; ஆனால் அவர்கள் போகவில்லை. நாற்பது ஆண்டுகள் அவர்கள் வனாந்தரத்தில் அலைந்து திரிந்தார்கள். பிறகு, தேவன் யோசுவாவுக்குத் தரிசனமாகி, “தேசத்திற்குள் போ” என்றார். தேவன் எங்கே விட்டாரோ, அங்கிருந்தே மீண்டும் தொடங்கினார். அவர்கள் அந்த நாற்பது ஆண்டுகளை வீணடித்திருந்தார்கள்.
இன்றும் எத்தனை பேர் கிறிஸ்தவர்களாகத் தங்கள் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்? தெரியுமா? இங்கே நமக்காக எத்தனை மகத்தான ஆவிக்குரிய பாடங்கள் இருக்கின்றன! இல்லையா. உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் நம்மில் சிலர் அப்படியே யாக்கோபைப் போலத்தான் இருக்கிறோம்; அதனால்தான் இந்தச் செய்தி இன்று நமக்கு மிகப்பொருத்தமாக இருக்கிறது. அவர் தன்னை “யாக்கோபின் தேவன்” என்று சொல்லிக்கொள்வதற்காகத் தேவனுக்கு நன்றி! அதை நான் நேசிக்கிறேன்! அவர் யாக்கோபின் தேவனாக இருப்பாரானால், அவர் நம்முடைய தேவனாகவும் இருப்பார்—அது எவ்வளவு அற்புதம்! உண்மையாகவே இந்த அதிகாரம் நமக்கு ஒரு பெரிய ஊக்கத்தைத் தருகிறது.
ஆதியாகமம் 35:4
‘4அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப் போட்டான். ‘
அந்தக் காலத்தில் காதணிகள் என்பவை வழிபாட்டு முறையோடு தொடர்புடையவையாக இருந்தன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் — இதைப் பற்றி வேதாகமத்தில் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்தக் காதணிகள் அவர்கள் பிற தெய்வ வழிபாடு செய்பவர்கள் (idolaters) என்பதற்கான அடையாளமாக இருந்தன, எனவேதான் அவர்கள் அவற்றை அகற்றுகிறார்கள்.
“யாக்கோபு அவைகளைச் சீகேமுக்கு அருகிலிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் புதைத்துப்போட்டான்.” யாக்கோபு அவற்றை முற்றிலும் ஒழித்துக்கட்டினார். என்றாவது ஒருநாள் எடுத்துப் பார்ப்போம் என்று பரணில் போட்டு வைக்கவில்லை / அவர் அவற்றை எங்காவது பத்திரப்படுத்தி வைக்கவில்லை — மாறாகப் புதைத்துவிட்டார். இனி ஒரு புதிய வாழ்க்கை தொடங்கப்போவதால், பழையவை அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்.
ஆதியாகமம் 35:5-7
‘5பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள். 6யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள். ‘

‘7அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான். ‘
………………………
முன்பு யாக்கோபு அந்த இடத்திற்கு “பெத்தேல்” (Beth-el) என்று பெயரிட்டிருந்தார், அதற்கு “தேவனுடைய வீடு” என்று பொருள். இப்போது அவர் அதை “ஏல்-பெத்தேல்” (El-beth-el) என்று அழைக்கிறார், அதற்கு “தேவனுடைய வீட்டின் தேவன்” என்று பொருள். இது யாக்கோபின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சியைக் காட்டுகிறது.
ஆதியாகமம் 35:8
‘8ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று. ‘
…………………
இந்த நேரத்தில் தெபொராள் யாக்கோபுடன் இருந்ததால், ரெபெக்காள் ஏற்கனவே மரித்திருக்கக்கூடும் என்று நாம் கருதுகிறோம்; அவருடைய மரணம் எப்போது நிகழ்ந்தது என்று வேதாகமம் நமக்குக் கூறவில்லை. பாவம் யாக்கோபு, அவர் மீண்டும் ஒருபோதும் தன் தாயைப் பார்க்கவே இல்லை. இதில் சோகமான விஷயம் என்னவென்றால், அவர் தன் தாயைப் பார்க்காததை விட, அந்தத் தாய் தன் மகனை மீண்டும் பார்க்கவே இல்லை என்பதுதான். / / —ஏனென்றால் அவள் அவரைச் சில காலம் தானே தள்ளிப்போயிருக்கச் சொன்னாள். அந்தச் செவிலித்தாய் (தெபொராள்) ஒருவேளை ரெபெக்காளது மரணச் செய்தியை யாக்கோபிடம் கொண்டு வந்து அவனுடனே தங்கிவிட்டிருக்கலாம்—இப்போது அவளும் மரித்துப்போகிறாள்.

ஆதியாகமம் 35:9
‘9யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து: ‘
………………….
இத்தனை ஆண்டுகளும் தேவன் யாக்கோபை நல்வழிப்படுத்தவே / அதாவது அவரைப் பக்குவப்படுத்தவே முயற்சி செய்து கொண்டிருந்தார். யாக்கோபு ஒரு வாலிபனாக பெத்தேலுக்கு வந்தபோது தேவன் அவரை எங்கே சந்தித்தாரோ, சரியாக அதே இடத்திலிருந்து மீண்டும் தொடங்குகிறார். மாமா லாபானுடன் அவர் கழித்த அந்த ஆண்டுகள், பல விதங்களில் வீணடிக்கப்பட்ட ஆண்டுகளே ஆகும்.

ஆதியாகமம் 35:10-11

’10இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார். 11பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள். ‘
…………………
நான் சர்வவல்லமையுள்ள தேவன்.” ஞாபகம் இருக்கிறதா?? தேவன் இதைத்தான் ஆபிரகாமிடமும் சொல்லியிருந்தார்.

ஆதியாகமம் 35:12
’12நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி, ‘
………………………..
தேவன் இந்தத் தேசத்தை அவர்களுக்குத் தருவதாக வாக்குறுதி அளிப்பது இது மூன்றாவது முறையாகும்—முதலில் ஆபிரகாமுக்கு, பிறகு ஈசாக்குக்கு, இப்போது யாக்கோபுக்கு. இந்த மனிதர்கள் ஒவ்வொருவரிடமும் ஆண்டவர் இதை இரண்டு அல்லது மூன்று முறை சொல்ல வேண்டியிருந்தது; சொல்லப்போனால், ஆபிரகாமிடம் அவர் பலமுறை இதைக் கூறினார்.
ஆதியாகமம் 35:13-15
’13தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார். 14அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணையையும் வார்த்தான். 15தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான். ‘
………………………..
பானபலியைக் (drink offering) குறித்த முதல் குறிப்பு இங்கேதான் காணப்படுகிறது. லேவியராகமப் புத்தகத்தில் ஐந்து விதமான பலிகள் சொல்லப்பட்டுள்ளன, ஆனால் பானபலி அவற்றில் ஒன்றாகக் குறிப்பிடப்படவில்லை. உண்மையில், அதைப் பற்றி எந்த ஒரு கட்டளையும் அங்கே கொடுக்கப்படவில்லை, ஆனால் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெளிப்படையாகப் பார்த்தால், இது மிகவும் பழமையான பலிகளில் ஒன்றாகும்; இன்றைய விசுவாசிகளுக்கு இது மிகவும் அற்புதமான ஒரு அர்த்தத்தைத் தருகிறது. பானபலி என்பது மற்ற பலிகளின் மீது ஊற்றப்படுவதாகும், அது நீராவியாக மேலே எழும்பிவிடும். பிலிப்பியர்களிடம் பவுல் பேசும்போது, தன் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று விரும்பினார்—அதாவது, ஒரு பானபலியைப் போல கர்த்தருக்காக அது ஊற்றப்பட வேண்டும் என்பதே அவர் விருப்பம்.
ஆதியாகமம் 35:16
’16பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று. ‘
……………………
ராகேலுக்கு ஏற்கனவே யோசேப்பு என்ற ஒரு மகன் இருந்தான், ஆனால் இப்போது அவளுக்கு இரண்டாவது மகன் பிறக்கிறான்.

ஆதியாகமம் 35:17-18

’17பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். 18மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும் போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான். ‘
………………
இது எவ்வளவு அற்புதமான ஒரு விஷயம்—ராகேலின் மரணம் அல்ல, மாறாக இந்தச் சம்பவம் நடந்த விதம். அவள், “இவனை ‘என் துக்கத்தின் மகன்’ (Ben-oni) என்று அழையுங்கள்” என்றாள். ஆனால் யாக்கோபு அந்தச் சிறுவனைப் பார்த்து, “நான் என் அன்பிற்குரிய ராகேலை இழந்துவிட்டேன், இந்தச் சின்னஞ்சிறுவன் அப்படியே அவளைப் போலவே இருக்கிறான்; அதனால் இவனை பென்யமீன், அதாவது ‘என் வலது கரத்தின் மகன்’ என்று அழைப்பேன்” என்று கூறினான். யாக்கோபு ராகேலின் மகன்கள் மீது தனிப்பாசம் (partiality) வைத்திருந்தார்.
பதான்-அராமில் இருந்த அந்த ஆண்டுகளில், யாக்கோபின் வாழ்க்கையில் மாம்சத்தின் கிரியைகளும் சுயநலமும் அதிகமாகக் காணப்பட்டாலும், ராகேல் மீது அவர் கொண்டிருந்த அன்பு மட்டுமே ஒரு உன்னதமான விஷயமாக இருந்தது. அவர் ராகேலை நேசித்தார் என்பதில் சந்தேகமே இல்லை. அவர் அவளிடம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருந்தார். அவளுக்காக எதையும் செய்ய அவர் தயாராக இருந்தார்; தன் தகப்பனிடமிருந்து அவள் திருடி வந்த சிலைகளை தொடர்ந்து அவள் வைத்திருப்பதை அவர் அனுமதித்தது கூட அதனால்தான் என்று சொல்லலாம். லேயாளோ அல்லது வேறு யாராவதோ அப்படிச் செய்திருந்தால் அவர் அனுமதித்திருக்க மாட்டார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் ராகேலிடம் மிகவும் கனிவாக இருந்தார். அவள் ஏற்கனவே யாக்கோபுக்கு யோசேப்பைப் பெற்றெடுத்திருந்தாள், இப்போது பென்யமீனைப் பெற்றெடுக்கிறாள். அவளுடைய இரண்டாவது மகன் பிறக்கும்போதுதான் அவள் மரணமடைந்தாள். அவனுடைய உயிர் அவளுடைய மரணத்திற்குக் காரணமானது. இது யாக்கோபின் இதயத்தை மிகவும் நொறுக்கிவிட்டது.
மற்ற பத்து மகன்களும் யாக்கோபுக்கு எந்தவிதமான மகிழ்ச்சியையும் தரவில்லை. பல மனைவிகளை வைத்திருப்பது பாவம் என்பதைத் தேவன் ஒவ்வொரு நாளும், ஒரு நாளின் இருபத்தி நான்கு மணி நேரமும் அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருந்தார் என்று நான் நினைக்கிறேன். அவருக்கு அவர்கள் எல்லாரும் தேவையில்லைதான். இருப்பினும், தேவன் எல்லாவற்றையும் தன் சித்தத்திற்குள் மாற்றியமைக்கிறார் (overrule). (அவர் உங்கள் வாழ்க்கையிலும் என் வாழ்க்கையிலும் அவ்வாறே செய்கிறார். அதற்காக நாம் அவருக்கு நன்றி சொல்லலாம்!) ஆனால், இந்த பலதார மணத்தை தேவன் அங்கீகரிக்கவில்லை என்பதை உண்மைகள் வெளிப்படுத்துகின்றன. யோசேப்பின் மாற்றாந்தாய் சகோதரர்கள் அவனை நடத்திய விதத்திலேயே இது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
யாக்கோபு யோசேப்பையும் பென்யமீனையும் நேசித்தார்; உண்மையைச் சொல்லப்போனால், மற்ற சிறுவர்கள் பொறாமை கொண்டிருந்தார்கள். அவர் யோசேப்பிடம் அப்படிப்பட்ட பட்சபாதத்தைக் (partiality) காட்டியிருக்கக் கூடாது. ஏனெனில், தன் சொந்த வீட்டிலேயே பட்சபாதத்தின் விளைவுகளை அவர் அனுபவித்திருந்தார்— அது எத்தகைய சிக்கல்களை உண்டாக்கியது என்பது அவருக்குத் தெரியும். அவர் தன் அன்பிற்குரிய ராகேலை இழந்துவிட்டார், ஆனால் அவரிடம் பென்யமீன் இருந்தான். அந்தச் சிறுவன் ராகேலுக்கு “துக்கத்தின் மகனாக” இருந்தது உண்மையாக இருந்தாலும், யாக்கோபால் அவனை “பெனோனி” என்று அழைக்க முடியவில்லை. அவன் யாக்கோபுக்குத் துக்கத்தின் மகன் அல்ல; அவன் அவருடைய வலது கரத்தின் மகன், அவருடைய ஊன்றுகோல், அவருடைய தள்ளாத வயதில் அவர் சாய்ந்துகொள்ளும் ஆதாரமாக இருந்தான். இதை நாம் புரிந்துகொள்வது அவசியம், ஏனென்றால் பிற்காலத்தில் யாக்கோபு அனுபவிக்கப் போகும் பெரும் துக்கத்தைப் புரிந்துகொள்ள இது நமக்கு உதவும். இவை அனைத்திற்கும் அடிப்படை யாக்கோபு செய்த பாவத்திலேயே இருக்கிறது. நண்பரே, நம் வாழ்க்கையில் உள்ள தவறுகளைத் தேவன் அங்கீகரிப்பதில்லை. நாம் அவற்றிலிருந்து தப்பித்துவிடலாம் என்று நினைக்கிறோம், ஆனால் யாக்கோபு தப்பிக்க முடியாதிருந்தது போலவே நாமும் தப்பிக்க முடியாது என்பதை புரிந்து கொள்வோம்.
ஆதியாகமம் 35:19
’19 ராகேல் மரித்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் பண்ணப்பட்டாள். ‘
……………………
ராகேலின் கல்லறை (Rachel’s Tomb) பெத்லெகேமுக்கு அருகில் உள்ளது. இன்றும் இது ஒரு புனிதமான இடமாகக் கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகப் யாத்ரீகர்கள் இந்த இடத்தைத் தரிசித்து வருகின்றனர்.

ஆதியாகமம் 35:20

’20அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள் வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண். ‘
……………………..
ஆதியாகமப் புத்தகத்தை எழுதிய மோசே, அவர் வாழ்ந்த காலத்தில் ராகேலின் கல்லறை ஒரு அடையாளச் சின்னமாக இருந்ததைக் குறிப்பிடுகிறார். வியப்பிற்குரிய விஷயம் என்னவென்றால், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்த பின்னரும், இன்றும் பெத்லெகேமுக்கு அருகில் அந்த இடம் “ராகேலின் கல்லறை” என்று அடையாளப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
ஆதியாகமம் 35:21
’21இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான். ‘
…………………
22 முதல் 26 வரையிலான வசனங்களில், யாக்கோபுக்கு அவருடைய வெவ்வேறு மனைவிகள் மூலம் பிறந்த மகன்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில், யோசேப்பும் பென்யமீனும் தான் அந்தப் பிள்ளைகளில் சிறந்தவர்களாக (outstanding) இருந்தனர். மற்றவர்கள் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தேவன் பலதார மணத்தை (plurality of wives) ஆசீர்வதிப்பதில்லை என்ற உண்மையை இது மீண்டும் நிரூபிக்கிறது. யாக்கோபின் குடும்பம் அந்த உண்மையை நமக்குத் தெளிவுபடுத்தும் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். இதற்கு மாமா லாபான் தான் பொறுப்பு என்றாலும், யாக்கோபும் அதற்கு உடந்தையாகவே இருந்தார்..

ஆதியாகமம் 35:28-29
ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து, 29பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.’
யாக்கோபு மீண்டும் இந்தத் தேசத்திற்குத் திரும்பிய பிறகு, அவர் தன் சகோதரன் ஏசாவைச் சந்தித்த ஒரே சந்தர்ப்பம், அவர்கள் இருவருடைய தந்தை ஈசாக்கின் மரணமாகத்தான் இருக்கும் என்று சொல்லலாம்..
இந்த அதிகாரம் மரணங்களால் நிறைந்திருப்பதை நீங்கள் கவனித்தீர்களா? முதலில், ரெபெக்காளது செவிலித்தாய் தெபொராளின் மரணம். இதன் மூலம் ரெபெக்காளின் மரணமும் இங்கே சூசகமாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன் பிறகு, அன்பிற்குரிய ராகேலின் மரணம். இறுதியாக, இந்த அதிகாரம் ஈசாக்கின் மரணத்துடன் முடிவடைகிறது.
ஆதியாகமம் 35-ஆம் அதிகாரம் வரிசையான மரணங்களோடு முடிவடைவது சோகமாகத் தோன்றலாம், ஆனால் இந்த அதிகாரம் கற்றுத் தரும் ஆவிக்குரிய பாடங்களையும் நாம் மறந்து போகக்கூடாது.
ஒரு புதிய ஆரம்பத்திற்கு முன்னால் பழையவை முடிவுக்கு வர வேண்டும். யாக்கோபு “பெத்தேல்” (தேவனுடைய வீடு) என்ற நிலைக்கு உயரும்போது, அவருடைய பழைய வாழ்க்கையோடு தொடர்புடைய மனிதர்களும், கடந்த காலத்தின் அடையாளங்களும் மறைந்து போகிறார்கள். இது நம்முடைய ஆவிக்குரிய முதிர்ச்சியைக் குறிக்கிறது—நம்மிடம் உள்ள பழைய சுபாவங்கள் மடியும்போதுதான், புதிய கிருபை பிறக்கிறது.
ஏசாவும் யாக்கோபும் பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்தபோது ஒருவரையொருவர் கொலை செய்யத் துணிந்தார்கள். ஆனால் இப்போது, தங்கள் தந்தையின் மரணப்படுக்கையில் இருவரும் இணைந்து அவரை அடக்கம் செய்கிறார்கள். மரணமும் இழப்பும் மனிதர்களைப் பணிவடையச் செய்கின்றன. இங்கே ஈசாக்கின் மரணம், பகையை மறந்து சகோதரர்கள் மீண்டும் இணைவதற்கான ஒரு புள்ளியாக மாறுகிறது. என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனே சகோதரியே உங்கள் குடும்பத்தில் யாரோடது மனஸ்தாபத்தில் இருக்கிறீர்களா உங்கள் குடும்பத்தில் ஏற்படும் ஒரு மரணம் உங்கள் உறவை சரி செய்ய ஆண்டவர் கொடுக்கிற தருணம் என்பதை மறந்து போகாதீர்கள். இந்த காலகட்டத்தில் அதை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால் இயேசுவின் வருகையில் நீங்கள் மற்றவர்களை மன்னிக்காத ஒருவராய் நிற்க வேண்டியது இருக்கும் .
மனிதர்கள் மரிக்கிறார்கள், ஆனால் தேவன் கொடுத்த வாக்குத்தத்தம் ஒருபோதும் மரிப்பதில்லை. ஆபிரகாம் மரித்தார், ஈசாக்கும் இப்போது மரித்துவிட்டார். ஆனால் தேவன் ஆபிரகாமுக்குச் சொன்ன அதே வார்த்தைகளை இப்போது யாக்கோபுக்கு உறுதிப்படுத்துகிறார்.
தெபொராள், ராகேல், ஈசாக்கு என ஒவ்வொரு மரணமும் யாக்கோபுக்கு வாழ்வின் நிலையாமையை உணர்த்தியது. இது நமக்குச் சொல்லும் செய்தி இதுதான்: நம்முடைய அன்பிற்குரியவர்கள் நம்மை விட்டுப் போகலாம், ஆனால் “யாக்கோபின் தேவன்” என்றும் நம்முடனே இருக்கிறார். அவர் நம்மை எங்கே சந்தித்தாரோ, அங்கிருந்து நம்மைப் பூரணமாக்கும் வரை கைவிடுவதில்லை. இந்த நம்பிக்கையோடு கர்த்தரை துதிப்போமா?

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top