ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் வேதாகமத்தின் ஊடாக
நூல் : ஆதியாகமம்
பகுதி : ஆதியாகமம் 1 அறிமுகம் (தொடர்ச்சி.)
நிகழ்ச்சி : #0012
வாசியுங்கள்
TTB -0012 D – ஆதியாகமம் 1:1B
பிரியமானவர்களே இந்த நாளிலும் இந்த ஊடகத்தின் மூலமாய் உங்களை சந்திக்க கிடைத்த வாய்ப்பிற்காக கர்த்தரை துதிக்கிறேன்.
இன்றுமுதல் ஆதியாகமத்தின் முதல் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம்
இங்கே பிரபஞ்சம் எப்படி படைக்கப்பட்டது என்பதை கவனியுங்கள்.
வாசிக்கிறேன் ஆதி. 1:1
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்
………………..
இதுவரை சொல்லப்பட்ட மிக ஆழமான அறிக்கைகளில் இது மிகவும் சிறப்பான ஒரு வாக்கியம் என்று சொல்லலாம். ஆனால் நாம் வாழும் இந்தக் காலத்தில் இது நிச்சயமாகவே சவால் நிறைந்த ஒரு அறிக்கை என்பதையும் நாம் அறியமுடியும் . இந்த வசனமே உண்மையான சிருஷ்டிப்பின் ஒரே பகுதி என்று திட்டமாய் கூறமுடியும். மேலும் ஆதியாகம புத்தகத்தில் மனிதனும் விலங்குகளும் சிருஷ்டிக்கப்படுவதைக் குறித்தும் நாம் வாசிக்கிறோம். இதுவே சிருஷ்டிப்பின் சரித்திரம். ஆனால் இது மிகக் குறுகிய ஒரு அறிக்கைதான் என்பதை நாம் மறுக்க முடியாது.
பால் பெல்லமி என்பவர் ஒரு தின பத்திரிகையின் முக்கிய ஆசிரியராக இருந்தார். ஒருநாள் இரவில் அடுத்த நாள் செய்தித்தாளுக்காக உடன் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு இணை ஆசிரியர் முக்கியமில்லாத செய்திக்கு, நீண்ட செய்தி என்பது போல ஒரு தலைப்பு கொடுத்திருந்தார். அதை கவனித்த பொறுப்பில் இருந்த இந்த ஆசிரியர் இந்த செய்தியின் நீளத்தை குறைத்துக் கொள் என்று சொல்லிவிட்டு, ஆதியாகமப் புத்தகத்தில் படைப்பின் சரித்திரமே 282 சொற்களிலே சொல்லப்பட்டிருக்கிறது என்று கூறினாராம். அதற்கு அந்த இணை ஆசிரியர் இன்னும் யாராவது இன்னும் சில நூறு வார்த்தைகளை படைப்பை குறித்து எழுதி இருந்தால் இப்பொழுது நடைபெறும் பல விவாதங்களில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கலாம் என்று பதில் கூறினார். ஆம் உலகத்தின் படைப்பைக் குறித்து நமக்கு மிகவும் குறைவான காரியங்களை சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் நமக்கு தேவையான அனைத்தும் இதில் அடங்கி இருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு.
இந்தப் பகுதியை அவர் நமக்குக் கொடுக்கும்போது அவருக்கு மனதில் என்ன எண்ணம் இருந்தது என்று ஒரு கேள்வி வருகிறது. இங்கே ஆதியாகமத்தின் ஆசிரியரின் நோக்கம் என்ன? புவியியலை கற்பிப்பது அவரது நோக்கமா??…. இந்த வேத பகுதியைக்குறித்து அதிகமான விவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன.
சில காலங்களுக்கு முன்பு கலிபோர்னியாவில், அவர்களது மாநில கல்வி வாரியம், அறிவியல் புத்தகங்களில் பரிசுத்த வேதம் சொல்லும் சிருஷ்டிப்புக் கோட்பாட்டை சேர்க்க தீர்மானித்தது. உண்மையை சொல்வதானால், அதில் நாம் மகிழ்ச்சியடைய முடியாது. ஏனென்றால் இது அங்கே கற்பிக்கும் ஆசிரியர்களின் தன்மை சம்பந்தப்பட்டது. கிறிஸ்தவ பின்னணியும், வேதத்தின் பின்னணியும் கொண்ட போதுமான ஆசிரியர்கள் அங்கே இல்லை. மேலும் பொது பள்ளி ஆசிரியர்களில் மிகக் குறைவானவர்களே வேதம் கூறும் சிருஷ்டிப்புக் நிகழ்ச்சியை உண்மையில் கற்பிக்க தயாராக இருந்தார்கள்.
கலிபோர்னியா டேவிஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியரும் பட்ட மேற்படிப்பு பிரிவின் டீனுமான டாக்டர் ரால்ஃப் ஜிரார்ட்,, “சிருஷ்டிப்புக் கோட்பாடு” கொக்கு பற்றி கற்பிப்பதைப் போலவே அர்த்தமுள்ளது என்று கருத்து தெரிவித்தார் என்று பத்திரிகையால் மேற்கோள் காட்டப்பட்டார். இனப்பெருக்கம் பற்றிய அறிவியல் பாடத்தில் கொக்குக் கோட்பாட்டையும் குறிப்பிட வேண்டுமா என்றும் கேட்டார். மிக சுவாரசியமான விஷயம் என்னவென்றால், கொக்குக் கோட்பாடு வேதத்தில் ஒரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை, ஆனால் சிருஷ்டிப்பு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. ரால்ஃப் அவரது ஒப்பீடு முற்றிலும் நியாயமற்றது. ஏனென்றால் வேதபுத்தகம் இனப்பெருக்கம் விஷயத்தில் உண்மையை கையாள்கிறது. நீங்கள் உங்கள் வேதத்தை கவனமாக வாசித்தால், கொக்குக் கோட்பாட்டின் கருத்தை ஒருபோதும் பெற முடியாது! எனவே இந்த மனிதர் சொல்வது நிச்சயமாக பொருத்தமற்றது. ஆனால் இது வேதத்துக்கு எதிரான மிக விரோத மனோபாவத்தை வெளிப்படுத்துகிறது. இந்த மனிதர் தனது குறிப்பிட்ட துறையான உயிரியல் பற்றி நிறைய தெரிந்திருக்கலாம், ஆனால் கடவுளின் வார்த்தை பற்றி மிகக் குறைவாகவே தெரிகிறது என்பது அவர் கொடுத்த அறிக்கையின் வகையிலிருந்து மிகத் தெளிவாகவே தெரிகிறது.
படைப்பைப் பற்றிய பிரச்சினை எல்லாவற்றையும் விட அதிக வன்முறை போன்ற சர்ச்சை, பயங்கரமான கோட்பாடுகள், மற்றும் பரந்த கருத்து வேறுபாடுகளைத் தூண்டுகிறது. இதில் எப்பொழுதும் மனிதர்களின் ஊகங்கள் சேர்க்கப்படுகின்றன. அதன் விளைவாக எழும்பிய குரல்களின் குழப்பம், கடவுளின் தெளிவான குரலை மூழ்கடித்துவிட்டது என்று கூடச் சொல்லலாம். உண்மையில், இரு தீவிர குழுக்கள் பிரச்சினையை மிகவும் மங்கலாக்கியிருக்கின்றன. அவர்களின் அனுமானங்களும் உறுதிப்பாடுகளும் புரிந்துகொள்ளுதலின் நீரை சேறாக்கியிருக்கின்றன என்றும் சொல்லலாம்.
ஒரு குழு ஆணவமான விஞ்ஞானிகளால் ஆனது. உயிரியல் மற்றும் தத்துவ ரீதியான பரிணாம வளர்ச்சியே உண்மை என்று அனுமானிக்கின்றனர். அவர்களின் அனுமான அடிப்படை “அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு”, என்று சொல்லப்படுகிறது. அடுத்த குழு இளமையும் பெருமையும் கொண்ட இறையியலாளர்களால் ஆனது, கடவுள் எப்படி செய்தார் என்று தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறிக்கொள்கிறார்கள். அவர்கள் அறிவியலையும் வேதத்தையும் சமரசம் செய்யும் ஏதோ திறமையான கோட்பாடு பற்றி அறிந்தவர்களாக எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். கடந்தகால வேதாகம விளக்கவுறையாளர்களை இவர்கள் குள்ளர்களாக ஒன்றும் தெரியாதவர்களாக இகழ்ச்சியுடன் பார்க்கிறார்கள்.
நான் சற்று முன் கூறிய இரு குழுக்களும் யோபுவிடம் கர்த்தர் இறுதியாக தோன்றியபோது சொன்ன வார்த்தைகளை கருத்தில் கொள்ள வேண்டும். கர்த்தர் யோபுவிடம் கேட்ட கேள்வி என்ன?? வாசிக்கிறேன் (யோபு 38:4)
‘நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. ‘
…………………
. வேறு வார்த்தைகளில், சொல்ல வேண்டும் என்றால்,, “பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி நீ பேசுகிறாய், ஆனால் நான் பூமியின் அஸ்திபாரத்தை போடும்போது நீ எங்கே இருந்தாய் என்பது கூட உனக்குத் தெரியாது!” என்று கடவுள் அவனிடம் கேட்கிறார்.
உலகம் எப்படி தொடங்கியது என்பதற்கு பல கோட்பாடுகள் இருக்கின்றன, ஆனால் அவை அனைத்தையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: ஒன்று சிருஷ்டிப்பு, மற்றொன்று ஊகம். எல்லா கோட்பாடுகளும் இந்த இரு பிரிவுகளில் ஒன்றில் அடங்கும்.
பரிணாமக் கோட்பாடு என்பது இன்று பல வேறுபட்ட கோட்பாடுகளால் ஆனது, கடந்தகால மற்றும் இக்காலத்தின் மிக புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் சிலர் பரிணாமத்தை நிராகரிக்கின்றனர். எனவே பரிணாமக் கோட்பாட்டை 2டும் 2டும் = 4 போன்ற அறிவியல் அறிக்கையாக குறைத்துச் சொல்ல முடியாது. ஆனால், ஆதியாகமம் 1 இல் உள்ள சிருஷ்டிப்பின் சரித்திரம், விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். கடவுள் அதை அப்படி ஆக்கியிருப்பது மிக சுவாரசியமானது. விசுவாசத்தால் மட்டுமே உலகில் யாரும் அதை ஏற்றுக்கொள்ள முடியும். எபிரெயருக்கு எழுதினவர் சொல்வதை கவனியுங்கள்: எபி. 11:1–3
‘விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள். விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். ‘
……………………. எனவே இன்றும் பெரிய பிரச்சினை இருக்கிறது. எதுவுமில்லாததிலிருந்து ஏதோ ஒன்று எப்படி வந்தது? அதற்கு பதிலை அடைய ஒரே வழி விசுவாசம் அல்லது ஊகம். ஊகம் மிகவும் அறிவியல் இல்லாதது.
இந்த பிரபஞ்சத்தின் படைப்பை குறித்து இப்போது சில கோட்பாடுகளை பார்ப்போம். அறிவியல் பதிலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அறிவியல் பதில் என்ன என்று கேட்க வேண்டும்? அடுத்து எந்த அறிவியல் பற்றி பேசுகிறோம்? 1806 ஆம் ஆண்டில், பேராசிரியர் லையல் என்பவர் தலைமையின் கீழ், பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் வேதாகமத்துக்கு எதிரான 80 க்கும் குறையாத புவியியல் கோட்பாடுகளை பட்டியலிட்டது, ஆனால் இன்று அவற்றில் ஒன்றுகூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
கடவுள் ஆதியாகமம் புத்தகத்தை எழுத பயன்படுத்திய மனித மனிதர், மோசே. இன்று அவர் – சிருஷ்டிப்புக் கதை பற்றிய எல்லா குழப்பங்களையும் பார்த்து சிரிப்பார் என்று நினைக்கிறேன், ஏனென்றால் அவர் அதை அறிவியல் கணக்காக கொடுக்க நோக்கம் கொண்டு எழுதவில்லை. அப்படி என்றால் வேதம் எழுதப்பட்ட நோக்கம் என்ன?? எல்லா வேதாகமத்தின் நோக்கத்தையும் பவுல் சொல்கிறார்: கவனியுங்கள் வாசிக்கிறேன்.
(2 தீமோ. 3:16–17)
‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.’………….
வேதாகமத்தில் சிருஷ்டிப்பைப் பற்றி வெறும் 34 வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதியாகமம் 1ஆம் அதிகாரம் முதலாம் வசனம் முதல் 2ஆம் அதிகாரம் 3ஆம் வசனம் வரை மட்டுமே மிகக் குறுகியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு சில முக்கியமானக் காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
முதலாவது, வேதாகமத்தின் நோக்கம் நீதியை போதிப்பது:
அது உங்களுக்கு புவியியல் அல்லது உயிரியல் பாடங்களை கற்பிக்க எழுதப்படவில்லை. மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு, மனிதனிடத்தில் எதிர்பார்க்கும் காரியங்கள், மேலும் மனிதன் ரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டவே வேதாகமம் எழுதப்பட்டது. “எப்படி” (how) வானங்கள் உண்டாகின என்ற விஞ்ஞான விவரங்கள் அல்ல, “யார்” (who) படைத்தார், “ஏன்” (why) படைத்தார் என்பதே முக்கியம். ஆதியாகமம் புத்தகத்தின் முதல் பகுதி மீது “நான் ரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும்?” என்று எழுதலாம்.
இரண்டாவது, தேவனின் மகத்துவத்தை இது வெளிப்படுத்துகிறது. முதல் வசனமே, “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்று சுருக்கமாகச் சொல்கிறது. இது வேறு எந்த தெய்வமும் இல்லை, ஒரே ஒரு கடவுளே எல்லாவற்றையும் படைத்தவர் என்ற உண்மையை தெளிவாக விளக்குகிறது.
மூன்றாவது, பழங்கால சூழலில் உள்ள மற்ற படைப்புக் கதைகளுக்கு எதிர்வினையாக உள்ளது:
அக்காலத்தில் எகிப்து, பாபிலோன் போன்ற நாடுகளில் பல தெய்வங்கள் சண்டையிடும் படைப்புக் கட்டுக்கதைகள் இருந்தன. இவை நீண்ட கதைகள். குழப்பமான கதைகள். ஆதியாகமம் அதற்கு நேர்மாறாக மிக எளிமையாகவும், ஒழுங்காகவும், ஒரே கடவுளின் அதிகாரத்தோடும் படைப்பைச் சித்தரிக்கிறது. குறுகியதாக இருப்பதே அதன் வல்லமையாக இருக்கிறது.
நான்காவது மனிதனை மையமாக வைக்கிறது:
ஆறு நாட்கள் படைப்பு விவரிக்கப்பட்டாலும், மனிதன் படைக்கப்படும் விதம் மிக விரிவாகவும் முக்கியத்துவத்தோடும் சொல்லப்படுகிறது. இதை ஆதியாகமம் முதலாம் அதிகாரம் 26, 27 வசனங்களில் காணலாம். பிரபஞ்சத்தின் எல்லையற்ற விவரங்களை விட, கடவுளோடு உறவு கொண்ட மனிதனே வேதாகமத்தின் மையக் கருத்து.
ஐந்தாவது, சிருஷ்டிப்பின் எளிமை எல்லாரும் புரிந்துகொள்ளும்படி உள்ளது:
தேவனின் சிருஷ்டிப்பு சரித்திரம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிக எளிமையாக எழுதப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எல்லா மொழி, எல்லா கலாச்சார மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளது.
சுருக்கமாகச் சொன்னால், தேவனின் சிருஷ்டிப்பு, நீண்ட விஞ்ஞான அறிக்கை அல்ல; கடவுளின் இறைமை, அவரது அன்பு, மனிதனின் மதிப்பு ஆகியவற்றை உடனடியாகவும் தெளிவாகவும் சொல்லும் ஒரு தெய்வீக அறிக்கை. அதனால்தான் அது அவ்வளவு சுருக்கமாகவும் ஆழமாகவும் இருக்கிறது.
கடவுள் சிருஷ்டிப்பின் அறிவியல் அறிக்கையைக் கொடுத்திருந்தால், மோசேயின் காலத்தில் எத்தனை பேர் அதை புரிந்துகொண்டிருப்பார்கள் என்று கேட்கலாம். இன்றுகூட எத்தனை பேர் அதை புரிந்துகொள்ள முடியும்? அடுத்ததாக, வேதம் கற்றறிந்த பேராசிரியர்களுக்காக மட்டும் எழுதப்படவில்லை, எல்லா காலங்களிலும் எல்லா நாடுகளிலும் உள்ள எளிய மக்களுக்காக எழுதப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மோசேயின் கால அறிவியல் மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், நிச்சயமாக வேத புத்தகம் நிராகரிக்கப்பட்டிருக்கும்.
எனவே, பிரபஞ்சத்தின் தோற்றம் சம்பந்தமாக மனிதர்கள் பலர், பல தீர்வுகளை கூறியிருக்கிறார்கள். ஒன்று அது ஒரு மாயை என்று கூறலாம். ஆனால், அது உண்மைக்கு மாறானது, இல்லையா? இருந்தாலும், அந்தக் கோட்பாட்டை பிடித்துக்கொண்டவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இந்த அண்ட சராசரங்களும் எதுவுமில்லாததிலிருந்து தானாக உண்டானது என்று நம்புகிறார்கள். ஒரு வகையாகப் பார்த்தால், இதைத்தான் வேதமும் சொல்கிறது, ஆனால் கடவுள் அதை அவருடைய வார்த்தையால் உண்டாக்கினார்; அவர் அதை சிருஷ்டித்தார் என்று வேதம் சொல்கிறது. மற்றொரு கருத்து – அது தோற்றமில்லாதது அது என்றென்றும் இருந்தது என்று சொல்லப்படுகிறது. நான்காவது கருத்து அது சிருஷ்டிக்கப்பட்டது, ஆனால் இது பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க மனிதர்கள் பிடித்துக்கொண்ட பல வேறுபட்ட கோட்பாடுகளாக இருக்கிறது.
உலக வரலாற்றில் மனிதர்கள் முன்வைத்த சில கோட்பாடுகள் நமக்கு முன்பாக இருக்கின்றன . (Harvard Observatory, )ஹார்வர்ட் அப்சர்வேட்டரியின் முன்னாள் இயக்குநர் டாக்டர்( Dr. Harlow Shapely,) ஹார்லோ ஷேப்லி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறார்: சற்று கவனியுங்கள். நாம் வாழும் உலகத்தை குறித்த அறியாமையில் இன்னும் புதைந்திருக்கிறோம். “நாம் அறிவின் மொத்த ஊகிக்கக்கூடிய அளவோடு ஒப்பிடும்பொழுது மிகக் குறைவாகவே முன்னேறியிருக்கிறோம், நீண்ட கால அனுபவம் கொண்ட விலங்குகளின் ஞான நிலைக்கு அப்பால். நிச்சயமாக, இருட்டில் விசித்திரமான சத்தங்களுக்கு இனி பயப்படுவதில்லை, இறந்தவர்கள் பற்றி முழுமையாக மூடநம்பிக்கை கொண்டிருக்கவில்லை. பல சந்தர்ப்பங்களில் நாம் தைரியமாக பகுத்தறிவு கொண்டவர்கள் என்று சொல்லலாம். இருந்தாலும், நாம் அறியாதது நாம் அறிந்ததை விட எவ்வளவு அதிகம் என்பதை அறிவோம்.” வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், நாம் வாழும் இந்த பூமியின் தோற்றம் சம்பந்தமாக இன்னும் முழுமையான இருட்டில் இருக்கிறோம்.- என்று கூறியிருக்கிறார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ப்ரொவோஸ்ட் அலுவலகத்தின் டாக்டர் லோரன் சி. ஐஸ்லி அவர்களிடம் இதைப் பற்றி கேட்கப்பட்டபோது, அவர் கூறிய பதில் இதுதான் – இப்பொழுது நமக்குத் தெரிந்திருக்கிறதை விட இந்த உலகம் எப்படி உண்டானது என்பதை நாம் அறியாதவர்களாக இருக்கிறோம். சொல்லப் போனால் ஆவிக்குரிய காரியங்களை அறிந்திருக்கிறதை விட இந்த பொருட்களை குறித்த அறிவு நமக்கு இல்லை. எனவே இப்பொழுது இருக்கிற அறிவைக் கொண்டு எது எதற்கு முந்தி வந்தது என்று சொல்வோம் என்றால் அஞ்ஞானமான காரியமாக இருக்கும். பூமியானது பலவகையான நிலைகளை கடந்து வந்திருக்கிறது. அதற்கு முந்திய நிலையை விட ஒவ்வொரு முறையும் மாற்றம் பெற்றிருக்கிறது. மனிதக்குலமும் மற்ற எல்லா உயிர் வாழ்க்கையும் காலாகாலங்களில் மாற்றம் பெற்றதாய் இருக்கிறது. ஆனால் வெளியே நம் காணும் இந்த காட்சிகளுக்கு எல்லாம் கீழே என்ன இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது. உங்கள் கேள்விக்கு நான் விடை அளிக்க விரும்புகிறேன். ஆனால் என்னுடைய அறியாமையை மூடுவதற்காக நான் எவ்வளவு பெரிய வார்த்தைகளை பயன்படுத்தினாலும் அதினால் எனக்கும் பயனில்லை. உங்களுக்கும் பயன் இல்லை என்று சொல்லி இருக்கிறார்.
1961ம் ஆண்டிலேயே எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் உலகத்தின் ஆரம்பத்தை குறித்த ரகசியத்தை மனிதன் அறிந்து கொள்ளும் நிலையிலே இருக்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அதன் பிறகு அதில் புதிதாக எதுவும் புரிந்து கொள்ளப்படவில்லை,
இதுபோன்ற. உயிரியல் நிபுணரான எட்வின் கான்க்ளின், அண்ட சராசரங்களும் தானாக உண்டானது என்பதை பற்றி பேசுகையில், உலகத்தில் உயிர் தற்செயலால் ஏற்பட்ட ஒரு விபத்தினால் உண்டானது என்று சொல்கிறார்; இதை எதற்குஒப்பிடுகிறார் என்றால் ஒரு அச்சகத்தில் ஏற்பட்ட விபத்தினாலே தானே ஒரு அகராதி உருவானால் எப்படியோ அப்படி என்று சொல்லுகிறார். விஞ்ஞானத்திற்கு ஒவ்வாத ஒரு காரியத்தை அந்த விஞ்ஞானி கூறினார். ஆனால் இதை அவர் கூறியது உண்மை.
பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கு குறைந்தது மூன்று கோட்பாடுகளை வானியலாளர்கள் சொல்கிறார்கள், அவற்றை குறிப்பிடுவது சுவாரசியமாயிருக்கும். கவனியுங்கள்.
ஒன்று “நிலையான நிலை” கோட்பாடு,
அடுத்தது “பெரிய மோதல்” கோட்பாடு,
மற்றொன்று ஊசலாட்டக் கோட்பாடு என்று கூறப்படுகிறது. இந்தச் சொல், ஒரு பொருள் அல்லது அமைப்பின் இயக்கமானது, ஒரு குறிப்பிட்ட புள்ளியைச் சுற்றி முன்னும் பின்னுமாக அல்லது மேலும் கீழுமாக மீண்டும் மீண்டும் அலைவுறுவதைக் குறிக்கிறது. .
கால்டெக் விஞ்ஞானி டாக்டர் வில்லியம் ஏ. பாம், லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தில் தேசிய அறிவியல் அகாடமியில் பேசுகையில், புதிய கண்டுபிடிப்புகள் பிரபஞ்சம் எப்போதும் இருந்தது மற்றும் புதிய பொருள் தொடர்ந்து சிருஷ்டிக்கப்படுகிறது என்ற “நிலையான நிலை” கோட்பாட்டை நிராகரிக்கின்றன என்று சொன்னார். பல ஆண்டுகளுக்கு முன்பு அது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கோட்பாடு; இப்போது பிரபஞ்சத்தின் தோற்றத்துக்கு புதிய கோட்பாடு உள்ளது என்றார்.
டாக்டர் பாம் தோற்றத்தில் “பிக் பேங் அல்லது பெரிய மோதல்” கோட்பாட்டை பிடித்திருந்தார், அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய வெடிப்பு நடந்தது, மற்றொன்று இன்னும் பத்து பில்லியன் ஆண்டுகளில் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் இது சுவாரசியமான கோட்பாடு, இது பிரிட்டனில் தோன்றியது.
பல ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் டாக்டர் லூயிஸ் லீக்கி, இவர் ஒரு மிஷனரியின் மகன். இவர் ஒரு (anthropologist) அதாவது இவர் ஒரு மானிட – வியலாளர், இவர் ஆப்பிரிக்காவில் இழந்த இணைப்பு என்று அழைக்கப்பட்ட ஒன்றை கண்டுபிடித்தார். நன்றாக, வளர்ந்த பற்கள் கொண்ட, மண்டை ஓட்டு துண்டுகளை தோண்டியெடுத்தார், அதை “நட்கிராக்கர் மேன்” என்று அழைத்து, ஆறு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு இளைஞனுக்கு சொந்தமானது என்று கூறினார். சரி, இதுபோன்ற கோட்பாடுகள் முன்பும் இருந்தன, 1961 ஆம் ஆண்டிற்கு பின் யாரும் இதைப்பற்றி பேசாததால், அறிவியல் உலகம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.
மனிதனின் தோற்றத்தை விளக்க வேறு வழிகள் உள்ளன. டெக்சாஸ் A&M கல்லூரியின் உயிரியல் இணை பேராசிரியர் டாக்டர் லாரன்ஸ் எஸ். டில்லன், மனிதன் விலங்கு அல்ல, ஆனால் பழுப்பு கடற்பாசியிலிருந்து தானாக உண்டான தாவரம் என்று சொல்கிறார். இப்போது நீங்கள் தாத்தா பாட்டியை தவறான இடத்தில் தேடிக்கொண்டிருக்கலாம். சிலர் மரத்தில் தேடினர். இப்போது கடற்கரையில் கடற்பாசியை இழுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள், ஏனெனில் அது அவர்கள் தாத்தா பாட்டி! இந்த ஊகங்களில் சில உண்மையிலேயே மிகவும் அபத்தமானதாயிருக்கிறது .
நீண்ட காலத்துக்கு முன்பு வெளிவந்த ஒரு மதசார்பற்ற பத்திரிகையில் இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது: – கவனியுங்கள் -“பூமியில் உயிர் எப்படி தொடங்கியது என்பது பற்றிய நூற்றாண்டுகள் கடுமையான விவாதங்களுக்குப் பிறகு, உலகம் முழுவதிலும் உள்ள ஆய்வகங்களில் திறமையான மற்றும் பொறுமையான துப்பறியும் வேலையிலிருந்து பிரமிப்பூட்டும் பதில் தோன்றுகிறது.” இவ்வாறு கூறப்பட்டதால்,
இப்போது நேரான பதில்கள் அல்லது குறைந்தது சிறிய ஊக்கம் ஏதாவது கிடைக்கும் என்று நினைப்பீர்கள், ஆனால் வெளிவரவில்லை.
ஜே.வி.என். டால்மேஜின் கூற்றுப்படி, விஞ்ஞானிகள் பின்பற்றிய கோட்பாடு இதுதான்: “வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரப் பொருட்களின் தொல்பொருள் கண்டுபிடிப்புகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும், அவை எங்கு காணப்பட்டாலும், மிகவும் கரடு முரடான பொருட்கள் எப்போதும் ‘மிகவும் மேம்பட்ட’ வகையை விட முந்தையதாக இருக்க வேண்டும்.” பிரியமானவர்களே அப்படி என்றால் வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்ததாகத் தோன்றும் சில மேம்பட்ட நாகரிகங்களைக் கண்டுபிடிப்பது சற்று குழப்பமாக இருக்கிறது.
பூமி எப்படி தொடங்கியது என்பது பற்றி இன்று பல கோட்பாடுகள் இருக்கின்றன. ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் க்ளாஸ் மாம்பெல், மனித இனத்தை குரங்குகளுடன் இணைப்பதற்கு கேனரி பறவைகள் அல்லது கங்காருக்களுடன் இணைப்பதை விட அதிக காரணம் இல்லை என்று சொன்னார் என்று தெரிகிறது.
பரிணாமக் கோட்பாடு பல வேறுபட்ட கட்டங்களாகவும் கருத்துகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மை என்று ஒருக்காலும் நிரூபிக்கப்படவில்லை. இன்று நமது பொது பள்ளிகளில் அறிவியல் கற்பிக்கும் ஆசிரியர்கள் உண்மையில் நியாயமான கருத்தை கொடுக்கும் நிலையில் இல்லை, ஏனெனில் கல்லூரியில் ஒரே ஒரு கருத்து மட்டுமே அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
அண்ட சராசரங்களும் தானே உண்டானது என்ற கோட்பாட்டையும் இல்ல விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்ளவில்லை. இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் உடலியல் மற்றும் உயிர்வேதியியல் துறையின் டாக்டர் ஜி. ஏ. கெர்குட்டின் எழுதியிருப்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அவரே பரிணாமவாதி என்றாலும், தனது புத்தகமான The Implications of Evolution என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: கவனியுங்கள், “பல உயிரினங்கள் காலப்போக்கில் மாற்றங்களுக்கு உட்படுவதால் புதிய இனங்கள் உருவாகின்றன என்று சொல்லும் ஒரு கோட்பாடு உள்ளது. இதை ‘பரிணாமத்தின் சிறப்புக் கோட்பாடு’ என்று அழைக்கலாம், சில சந்தர்ப்பங்களில் சோதனைகளால் நிரூபிக்கலாம். இதே நேரத்தில், உலகில் உள்ள எல்லா உயிர் வடிவங்களும் ஒரு ஒற்றை மூலத்திலிருந்து தோன்றின, அது தானே கனிம வடிவிலிருந்து வந்தது என்ற கோட்பாடு இருக்கிறது. இதை ‘பரிணாமத்தின் பொது கோட்பாடு’ என்று அழைக்கலாம், அதை ஆதரிக்கும் சான்று அதை ஒரு ஊகமாகவே கருத அனுமதிக்கும் அளவுக்கு வலுவானதல்ல.” என்று எழுதி இருக்கிறார்.
இப்போது ஸ்வீடிஷ் தாவரவியலாளர் டாக்டர் ஹெரிபெர்ட் நில்சனின் அறிக்கையைக் கேளுங்கள், அவரும் பரிணாமவாதி: அவர் என்ன சொல்கிறார் கவனியுங்கள். – “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக சோதனைகளால் பரிணாமத்தை நிரூபிக்க எடுத்த முயற்சிகள் முழுமையாக தோல்வியடைந்தன …. இதற்குக் காரணம் பரிணாம எதிர்ப்பு நிலைப்பாட்டிலிருந்து தொடங்கியதாக நான் குற்றம் சாட்டப்பட கூடாது. பழங்கால உயிரியல் உண்மைகளிலிருந்து ஒரு கேலிச்சித்திரத்தை உருவாக்குவது கூட சாத்தியமில்லை என்று உறுதியாக கூறலாம் புதை வடிவ பொருள் இப்பொழுது மிகவும் முழுமையானது புதிய வகுப்புகளை உருவாக்க முடிந்தது மேலும் இடைநிலைத் தொடர்களின் பற்றாக்குறையை பொருளின் பற்றாக்குறை காரணமாக விளக்க முடியாது குறைபாடுகள் உண்மையானவை அவை ஒருபோதும் நிரப்பப்படாது பரிணாமம் என்ற யோசனை முழுவதும் நம்பிக்கையை சார்ந்திருக்கிறது.” என்று கூறியிருக்கிறார்.
கவனித்தீர்களா பரிணாமக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அதுவும் நம்பிக்கையை சார்ந்ததாகவே இருக்கிறது. ஒருவர் பரிணாமவாதியாக இருக்க வேண்டுமென்றால் விசுவாசத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். பரிணாமம் ஊகமே, எப்போதும் அப்படித்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அநேக மக்கள் அதை உண்மையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
பொறுமையோடு இவ்வளவு நேரம் என்னுடைய வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த சகோதரனை சகோதரியே, இத்தனை ஆண்டுகளாக உலகத்தின் பல பகுதியில் உள்ள விஞ்ஞானிகள் உலகம் தானாக உண்டானது என்பதை நிரூபிக்க அவர்கள் முயற்சிகளை எடுத்துக் கொண்டாலும், அது அனைத்தும் ஊகமாகவே இருக்கிறது. மேலும் அவர்கள் சொல்லும் காரியங்களையும் நம்புவதற்கும் விசுவாசம் தேவை என்று சொல்லப்படுகிறது.
இப்படி விஞ்ஞானிகள் சொல்வதை விசுவாசிப்பதை விட பரிசுத்த தேவன் எழுதிக் கொடுத்துள்ள பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதை விசுவாசிப்பது எளிதான காரியம்.
இந்த அண்ட சராசரங்களும், தேவன் படைத்தது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பொழுது மட்டுமே உங்களையும் தேவனே உண்டாக்கி இருக்கிறார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியும். இந்த அண்ட சராசரங்களையும் தேவன் படைத்ததற்கான ஒரு காரணம் உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பொழுது மட்டுமே. உங்கள் வாழ்க்கைக்கும் தேவன் ஒரு நோக்கமும் திட்டமும் வைத்திருக்கிறார் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியும். இந்த உண்மையை ஏற்றுக் கொள்ளும் பொழுது மட்டுமே இந்த உலகத்தில் அர்த்தமுள்ள மகிழ்ச்சியுள்ள ஒரு வாழ்க்கையை நாம் வாழ முடியும். அப்படிப்பட்ட கிருபையை கர்த்தர் தாமே உங்களுக்கும் தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
