ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 27
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 27
நிகழ்ச்சி எண்: 0045

வாசியுங்கள்

இன்றைய வேத ஆராய்ச்சி பகுதிக்காக உண்மையான விருப்பத்தோடு காத்திருக்கிறவர்களை கர்த்தர் அபரிதமாய் ஆசீர்வதிப்பாராக.
இன்று நாம் அறியாமல் 27ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
“இந்த அதிகாரத்தின் மையக்கருத்து, ஈசாக்கிடமிருந்து யாக்கோபுக்கு ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தர யாக்கோபும் ரெபெக்காளும் சேர்ந்து தீட்டும் சூழ்ச்சிதான். இந்த ஆசீர்வாதத்தை ஈசாக்கு ஏசாவுக்குக் கொடுக்கவே நினைத்துக் கொண்டிருந்தார். மேலும் பாருங்கள், யாக்கோபு தனது தந்தையின் ஆசீர்வாதத்தை விரும்பினான். மூத்தவன் இளையவனுக்கு சேவை செய்வான் என்று தேவன் தன் தாய்க்கு வாக்குறுதி அளித்ததை அவன் அறிந்திருந்தான்; எனவே அந்த ஆசீர்வாதம் ஏற்கனவே அவனுடையதுதான். இருந்தாலும், அவன் தேவனை நம்பவில்லை. அவனது தாயான ரெபெக்காளும் தேவனை நம்பவில்லை.
வெளிப்படையாகச் சொல்லப்போனால், தந்தை ஈசாக்கும் தேவனை நம்பவில்லை; அப்படி அவர் நம்பியிருந்தால், அவர் ஒருபோதும் யாக்கோபைத் தவிர்த்துவிட்டு ஏசாவுக்கு ஆசீர்வாதத்தை அளிக்க முயற்சி செய்திருக்கமாட்டார். அவர் தேவனுடைய தெளிவான வார்த்தைக்கு முரணாக, தனது சொந்த உணர்வுகளையும் விருப்பத்தையுமே பின்பற்றினார்.”

“சேஷ்டபுத்திர பாகத்தை (birthright) பெறுவதற்காக யாக்கோபு கையாண்ட முறையை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அவன் மோசடியையும் வஞ்சகத்தையும் பயன்படுத்தினான். அவனது நடத்தை இழிவானது. ஆகார் மற்றும் இஸ்மவேல் பிறப்பின் காரியங்களில் சாரா மற்றும் ஆபிரகாமின் நடத்தையை தேவன் எப்படி அங்கீகரிக்கவில்லையோ, அதேபோல் இதையும் அவர் அங்கீகரிக்கவில்லை. யாக்கோபின் தந்திரத்தையும் புத்திசாலித்தனத்தையும் தேவன் பயன்படுத்த மாட்டார். நாம் பார்க்கப்போகிறபடி, தேவன் இந்த மனிதனை மிகத் தெளிவான முறையில் கையாளுகிறார். யாக்கோபு எந்த வழியில் பாவம் செய்தானோ, அதே வழியில் அதற்குரிய விலையைக் கொடுக்க வேண்டியிருந்தது. தொடர்ந்து யாக்கோபின் வாழ்க்கையை நாம் படிக்கும் பொழுது இதை நாம் பார்க்க முடியும்.
26-ஆம் அதிகாரம், சுமார் நாற்பது வயதான ஏசா இரண்டு ஏத்திய பெண்களைத் திருமணம் செய்துகொள்வதோடு முடிவடைந்தது. இது ஈசாக்கிற்கும் ரெபெக்காளிற்கும் மிகுந்த மனவருத்தத்தை அளித்தது என்று பார்த்தோம். இப்போது, யாக்கோபு ஒரு ஏத்திய பெண்ணையோ அல்லது ஒரு பெலிஸ்தியப் பெண்ணையோ திருமணம் செய்யக்கூடாது என்றால், ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து ஈசாக்கு தனது மணப்பெண்ணைப் பெற்ற இடமான ஆரானுக்கு அவன் அனுப்பப்பட வேண்டும் என்பதை அவர்கள் உணர்கிறார்கள்.”

ஆதியாகமம் 27:1-4
‘1ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப் போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான். 2அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். 3ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, 4அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான். ‘
……………….
“ஈசாக்கு ஒரு மிகச்சிறந்த மற்றும் மாமனிதராக இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். ஞாபகம் இருக்கிறதா?? அபிமெலேக்கும் பெலிஸ்தியர்களும் ஈசாக்கிற்கு அஞ்சி, அவரோடு உடன்படிக்கை செய்துகொள்ள வந்தார்கள். அவர் பொறுமையுள்ளவராகவும் சமாதானத்தை விரும்புபவராகவும் இருந்ததோடு, மிக முக்கியமானவராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார். இருந்தாலும், இங்கே அவர் தனது மாம்சத்தின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறார். அவரது வாழ்நாள் முழுவதும் ஏசா அவருக்கு விருப்பமான மகனாக இருந்தார், அதேசமயம் யாக்கோபு ரெபெக்காளின் விருப்பத்திற்குரியவனாக இருந்தான். ஏசா வெளி உலகைச் சார்ந்தவன்; அவன் வேட்டைக்குச் சென்று ஒரு மானையோ அல்லது வேறு ஏதேனும் ஒரு விலங்கையோ பிடித்து வருவான். அவன் அதைச் சுட்டு சமைப்பான் (barbecue), அதை அந்த முதியவர் (ஈசாக்கு) ரசித்து உண்பார். இப்போது ஈசாக்கு மிகவும் வயதானவராக இருக்கிறார், அவர் தனக்குப் பிடித்த மகனை ஆசீர்வதிக்க விரும்புகிறார். மூத்தவன் இளையவனுக்கு சேவை செய்வான் என்று தேவன் கூறியதை அவர் நன்றாகவே அறிந்திருந்தார், இருந்தாலும், அவர் ஏசாவை ஆசீர்வதிக்க விரும்புவதால் தேவனுடைய வார்ட்தைகளை புறக்கணிக்கிறார். எனவே, அவர் ஏசாவிடம் வேட்டைக்குச் சென்று இறைச்சி கொண்டு வரும்படி கூறுகிறார், அதன் காரணமாக அவனை ஆசீர்வதிக்கப் போவதாகச் சொல்கிறார். இது, இந்தத் குடும்பத்தைப் பற்றிய எப்படிப்பட்ட ஒரு வெளிப்பாடு?? இல்லையா??
ஆதியாகமத்தின் இந்த முக்கியமான கடைசிப் பகுதிக்கு நாம் வந்ததிலிருந்து, அந்தக் குடும்பங்களுக்குள் நிலவும் மோதல்களை நீங்கள் கவனித்தீர்களா? ஆகாரின் காரணமாக ஆபிரகாமின் குடும்பத்தில் ஒரு மோதல் இருந்தது. இப்போது, இந்த இரட்டையர்கள் காரணமாக இந்தக் குடும்பத்திலும் மோதல் உண்டாகிறது.”
ஆதியாகமம் 27:5-8
‘5ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசாவோடே பேசுகையில், ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான். 6அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனாகிய யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து: 7நான் புசித்து, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தரை முன்னிட்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்லக்கேட்டேன். 8ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய். ‘
…………………
ஈசாக்கு ஏசாவிடம் சொன்னதை ரெபெக்காள் ஒட்டுக்கேட்டுவிட்டாள். யாக்கோபு அவளுக்கு விருப்பமான மகன்; எனவே அவள் இந்த வஞ்சகமான திட்டத்தைத் தீட்டுகிறாள். இது முற்றிலும் சூழ்ச்சியானது, இதை எந்த அடிப்படையிலும் நாம் நியாயப்படுத்த முடியாது. தேவன் இதை வரலாறாகப் பதிவு செய்கிறார், ஆனால் அவர் இதை வன்மையாகக் கண்டிக்கிறார். அதை நாம் பின்னால் பார்ப்போம். இங்கே செய்யப்படும் காரியங்களை நினைவில் கொள்ளுங்கள், பின்னாட்களில் யாக்கோபு செய்த வஞ்சகமே அவனுக்கு விளைவாகத் திரும்புவதை நாம் பார்க்கப் போகிறோம். இப்போது ரெபெக்காள் அவனிடம் தொடர்ந்து என்ன சொல்லுகிறாள் கவனியுங்கள்.
ஆதியாகமம் 27:9-11
‘9நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன். 10உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்குபடி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள். 11அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன். ‘
………………
ஏசா வெளி உலகைச் சார்ந்த, வேட்டையாடும் மனிதனாக இருந்தது மட்டுமல்லாமல், சிவந்த நிறமுடையவனாகவும், உடல் முழுவதும் அதிக ரோமங்களைக் கொண்டவனாகவும் இருந்தான்.”
ஆதியாகமம் 27:12
’12ஒருவேளை என் தகப்பன் என்னைத்தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான். ‘
………………
இங்கே எத்தனை போல காணப்பட்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது, அவன் உண்மையாகவே ஒரு எத்தன் தான். ஏமாற்றுகிறவன் தான்.
ஆதியாகமம் 27:13-17
’13அதற்கு அவன் தாய்: என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள். 14அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப்பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள். 15பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி, 16வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு; 17தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள். ‘
……………….
அருமையான சகோதரனை சகோதரியே, அவனது யாக்கோபைத் தொட்டுப் பார்க்கும்போது அது ஏசா என்று நினைக்க வேண்டும் என்பதற்காக, ஆட்டுக்குட்டியின் தோலை அவனது கழுத்தின் பின்புறத்திலும் கைகளிலும் அவள் கட்டினாள். மேலும், அவன் ஏசாவைப் போலவே மணம் வீச வேண்டும் என்பதற்காக, வனுடைய ஏசாவின் வேர்வை பட்ட உடைகளையும் அணிவித்தாள்!
உண்மையைச் சொல்லப்போனால், நான் கேள்விப்பட்ட ஒரு வேடிக்கையான கதையைப் போலத்தான் இதுவும் இருக்கிறது: மிக நெருக்கமான ஓரிடத்தில் இரண்டு பேர் வேலை செய்துகொண்டிருந்தார்கள். அப்போது ஒருவன் மற்றவனிடம், ‘அடடா! நம்மில் ஒருவருடைய சென்ட் வேலை செய்வதை நிறுத்திவிட்டது என்று நினைக்கிறேன்’ என்றான். அதற்கு மற்றவன், ‘அது உன்னுடையதாகத்தான் இருக்க வேண்டும், ஏனென்றால் நான் சென்ட் எதையும் பயன்படுத்துவதே இல்லை!’ என்றானாம். அதுபோலத்தான், ஏசாவும் எந்த வாசனைத் திரவியத்தையும் பயன்படுத்தியிருக்க மாட்டார் என்று திடமாக கூறலாம்; அவர் அடிக்கடி குளித்திருப்பார் என்றும் சொல்ல முடியாது. எனவே, உங்களால் அவரைப் பார்க்க முடியாவிட்டாலும், அவரது வாசனையை வைத்து அவர் வருவதைக் கண்டுபிடித்துவிடலாம்.”
ஆதியாகமம் 27:18-20
’18அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான். 19அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டு வந்ததைப் புசியும் என்றான். 20அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான். ‘
………………
கவனியுங்கள், இந்த குறிப்பிட்ட நேரத்தில் இந்தப் பையன் ஒரு ‘பக்திவேஷம் போடும் மோசடிப் பேர்வழிக்கு’ (pious fraud) ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறான். இன்றுள்ள அடிப்படைவாதக் கிறிஸ்தவ வட்டாரங்களில்கூட (fundamental circles) இது போன்ற பல மோசடிப் பேர்வழிகளை நீங்கள் பார்க்கலாம். கர்த்தர் தங்களை நடத்துவதாக அவர்கள் பேசுகிறார்கள். ஆச்சரியம் என்னவென்றால், சில நேரங்களில் கர்த்தர் அவர்களை மிகவும் விசித்திரமான காரியங்களைச் செய்ய ‘நடத்துகிறார்’! சில கிறிஸ்தவ ஆண்கள், மாஃபியா (Mafia) போன்ற பாதாள உலகக் கும்பல் செய்தால் கைது செய்யப்படக்கூடிய காரியங்களைக்கூட தாங்கள் தாராளமாகச் செய்யலாம் என்று நினைப்பதை நீங்கள் பார்க்க முடியும். ஆனால் இவர்கள் மிகவும் பக்திமான்களைப் போல அதற்காக ஜெபம் செய்துவிட்டு, அது ‘கர்த்தருடைய சித்தம்’ என்றும் கூறுகிறார்கள். ஆதியாகம புத்தகத்தின், இந்த இடத்தில் யாக்கோபு ஒரு பக்திவேஷம் போட்ட மோசடிக்காரனாகவே இருக்கிறான். ஆனால் பிரியமானவர்களே, இந்த வஞ்சகமான செயலில் கர்த்தருக்கு எந்தப் பங்கும் இல்லை.”
ஆதியாகமம் 27:21-27
’21அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான். 22யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி, 23அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து, 24நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான். 25அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என்கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்; பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான். 26அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான். 27அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது. ‘
………………….
அருமையாஅவர்களே, இப்பொழுது ஈசாக்கு செய்யும் ஒவ்வொரு காரியத்தையும் நாம் கவனித்தால் ஏதோ ஒரு சந்தேகம் அவனுடைய உள்ளத்திலே தட்டி இருக்கிறது என்பதை நமக்கு தெரிகிறது என்றாலும் ஈசாக்கை குறித்து ரிப்பேர் காலுக்கு நன்றாக தெரியும் எனவே ஒவ்வொரு சின்ன சின்ன காரியத்தையும் அவர் மிக கவனத்தோடு தந்திரமாக திட்டமிட்டு செயல்படுகிறாள்.
ஆதியாகமம் 27:28-29
’28தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக. 29ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும்கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான். ‘
……………………
ஈசாக்கு இப்பொழுது தான் பெற்றெடுத்த ஆசிர்வாதங்களை தனது மகனுக்கு கொடுக்கிறான். இங்கே சுவாரசியமான ஒரு காரியம் என்னும் என்றால் அது ஏற்கனவே யாக்கோபுக்கு சொந்தமானது தான் ஏனென்றால் தேவனாகிய கர்த்தர் அதை கூறியிருந்தார் ஏற்கனவே யாக்கோபை தேவன் ஆசீர்வதித்து விட்டார். இந்த ஏமாற்று வேலையை தேவன் ஏற்றுக் கொள்ள மாட்டார்.

ஆதியாகமம் 27:30-33
’30ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான். 31அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான். 32அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான். 33அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான். ‘
………………..
ஒரு வேளை இதைக் கேட்கிற நீங்கள் வேட்டைக்கறிக்கும், சமைத்த ஆட்டுக்கறிக்கும் வித்தியாசம் தெரியாதா என்று கேட்கலாம். இதைக் குறித்த தனது அனுபவத்தை ஒரு போதகர் எழுதுகிறார். பல ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியே சென்று ஒரு மானை வேட்டையாடி வந்தார்கள். அவர்கள் திருச்சபையாக ஒரு ஐக்கிய விருந்தை ஏற்படுத்தினார்கள்.

அதிகமான எண்ணிக்கை இருந்தபடியினாலே இளம் ஆட்டையும் இந்தக் கறியோடு சேர்த்து சமைத்தார்கள். விருந்து மிகச் சிறப்பாக இருந்தது. ஐக்கிய நேரம் நன்றாக இருந்தது. யாருமே அந்த இரண்டு வகையான கறிகள் அங்கே சேர்க்கப்பட்டு இருக்கிறதென்பதைக் கண்டு கொள்ளவில்லை என்று எழுதுகிறார்.

ஆம். அருமையானவர்களே, வேட்டைக்கறியும் இளம் ஆட்டுக்குட்டியின் கறியும் ஒன்று போலவே இருக்கிறது. இப்பொழுது ஈசாக்கு தான் எப்படிப்பட்ட வலையிலே விழுந்துவிட்டான் என்பதை உணர்கிறான். தான் ஏமாற்றப்பட்டதை அவன் அறிந்து கொண்டான்.
ஆதியாகமம் 27:34-40
’34ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான். 35அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான். 36அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம் போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி, நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான். 37ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான். 38ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான். 39அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும். 40உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான். ‘
…………………….
தன் சகோதரனால் ஏமாற்றப்பட்ட ஏசா இவ்வாறு யோசிக்கிறான்.

பாருங்கள் வாசிக்கிறேன்.ஆதியாகமம் 27:41

’41யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான். ‘

ஏசா என்ன யோசிக்கிறான்?? . ‘என் அப்பா வயதானவர், அவர் இன்னும் அதிக காலம் உயிர்வாழ மாட்டார். அவர் இறந்த உடனே, நான் யாக்கோபைக் கொன்றுவிடுவேன். அவனை ஒழித்துக்கட்டுவேன்!’ – இதுவே அவன் இதயத்தின் எண்ணமாக இருந்தது, மேலும் அவன் இதை மற்றவர்களிடமும் வெளிப்படையாகப் பேசியிருக்கிறான் என்று தெரிகிறது.
ஆதியாகமம் 27:42-43
’42மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான். 43ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய், ‘
,…………………….
இங்கேயும் ரெபெக்காள் காரியங்களைத் தன் கையில் எடுப்பதை நாம் பார்க்கிறோம். அவள் யாக்கோபிடம், ‘நீ வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்’ என்று சொல்கிறாள். இதில் அவளுடைய பங்கிற்காக, அதாவது அவள் செய்த பாவத்திற்காக, அவள் ஒரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் மீண்டும் ஒருபோதும் இந்தப் பையனைப் (யாக்கோபு) பார்க்கவே இல்லை. ஒரு சிறு காலத்திற்கு மட்டுமே அவனை அங்கே அனுப்புவதாக அவள் நினைத்தாள், ஆனால் அது மிக நீண்ட காலமானது; அவன் திரும்பி வருவதற்கு முன்பே ரெபெக்காள் இறந்துவிட்டாள்.
யாக்கோபு அவளுக்கு மிகவும் பிடித்தமானவன் என்பதை நாம் ஞாபகத்தில் வைத்துk கொள்ள வேண்டும். யாக்கோபு தன் சகோதரன் லாபானிடம் செல்ல வேண்டும் என்று அவள் விரும்புகிறாள், அங்கேதான் அவனை அனுப்பவும் செய்கிறாள். இங்கேதான் யாக்கோபு தனது பாடத்தைக் கற்றுக்கொள்ளப் போகிறான். இங்கேதான் அவன் செய்த செயல்கள் அவனுக்கே விளைவுகளாகத் திரும்பப் போகின்றன . வயதான மாமா லாபான், யாக்கோபை ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது போல அவனுக்குச் சில பாடங்களைக் கற்பிக்கப் போகிறார். தான் மிகவும் புத்திசாலி என்று யாக்கோபு நினைத்தான், ஆனால் மாமா லாபான் புத்திசாலித்தனத்தில் ஒரு நிபுணர். பாவம் யாக்கோபு, தான் ஒரு கத்துக்குட்டி என்பதை உணர்வான்; எல்லாம் முடிவதற்குள் அவனுக்கு வந்த நெருக்கடியில் அவன் நம்பிக்கை அற்று தேவனை நோக்கிக் கதற போகிறான்”
ஆதியாகமம் 27:44-45
’44உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு. 45உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள். ‘
…………………
கவனித்தீர்களா? , அவனைச் சில நாட்களுக்கு மட்டும் அனுப்பி வைப்பதாகத்தான் அவள் சொல்கிறாள். ஆனால், அந்தச் சில நாட்கள் இருபது ஆண்டுகளாக நீடித்தன; அந்த இடைப்பட்ட காலத்தில் அவள் இறந்தும் போனாள். தன் செல்லப் பிள்ளையை, தனக்குப் பிடித்தமான மகனை, அவள் மீண்டும் பார்க்கவே இல்லை.
அந்தச் சிறிய சம்பவத்திற்குப் பிறகு, ஏசா தன் qதாயைப் பற்றிப் பெரிதாக எதுவும் நினைத்திருக்க வாய்ப்பில்லை என்பதைக் கருத்தில் கொண்டால், அந்த ஆண்டுகளில் ரெபெக்காளின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை நாம் ஓரளவுக்கு ஊகித்துக்கொள்ள முடியும்.
அந்த சூழ்நிலையை சற்று யோசித்து பாருங்கள் நடந்த எல்லாவற்றையும் அறிந்த ஏசா தனது தாயை அதற்கு பின் கவனித்திருக்க மாட்டான். அவளோடு பேசியிருக்க மாட்டான். ஏற்கனவே அவனுடைய மனைவிகளும் அவளுக்கு நோவு உண்டாக்குபவர்களாக இருந்தார்கள் என்று வாசித்தோம்.
ஆதியாகமம் 27:46
’46பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.’
…………………..

தேவனை அறியாத பெண்களை ஏசா திருமணம் செய்தான். எனவே அதனால் ரெபெக்காள் ஏற்கனவே வீட்டிலே பிரச்சனையை அனுபவித்துவிட்டாள். யாக்கோபும் இங்கே தங்கியிருந்தால் அவனும் இங்கே உள்ள பெண்ணை திருமணம் செய்வான். எனவே இந்த சூழ்நிலையை பயன்படுத்தி ஏசாவிடத்திலிருந்து காக்கும்படியாக ஈசாக்கினிடத்திலே அனுமதி பெற்று யாக்கோபை தன் சகோதரன் வீட்டிற்கு அனுப்பத் தீர்மானித்தாள். உண்மையாகவே யாக்கோபு இங்கே தங்கியிருப்பான் என்றால், ஏசா அவனைக் கொலைசெய்ய முயற்சித்து இருப்பான். ஆனால் நடந்தது என்ன? ரெபெக்காள் முதலாவது மரித்தாள்; தகப்பனாகிய ஈசாக்கினுடைய அடக்கத்திற்கு யாக்கோபு திரும்ப வந்தான். ஆனால் அவன் தன்னை அதிகமாக நேசித்த தன் தாயை பார்க்க முடியாமல் போய்விட்டது.
என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே, தேவன் ஏற்கனவே யாக்கோபை ஆசீர்வதிப்பேன் என்று வாக்கு கொடுத்த பிறகும் அதை விசுவாசியாமல் ரெபெக்காளும் யாக்கோபும் தந்திரங்களை கையாண்டார்கள். உங்கள் வாழ்க்கையிலும் ஆண்டவர் உங்களுக்கு எதையாவது வாக்கு பண்ணி இருப்பார் என்றால், சூழ்நிலைகளில் எந்த அளவு மாற்றங்களை ஏற்பட்டாலும், நீங்கள் கலக்கமடையாமல் ஏற்ற வேளையில் தேவன் அதைச் செய்யும்படியாக அவருடைய பலத்த கரங்களுக்குள்ளே ஸ்தோத்திரத்தோடு காத்திருக்க உங்களை அர்ப்பணிப்பீர்களா?

ஆதியாகமம் 27-ஆம் அதிகாரம் நம் அனைவருக்கும் ஒரு மிகச்சிறந்த பாடத்தைக் கற்றுத்தருகிறது. இந்த அதிகாரத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் ஏதோ ஒரு விதத்தில் தோல்வியடைந்ததைக் காண்கிறோம். ஈசாக்கு தேவனுடைய வார்த்தையை விட தனது ருசியின் விருப்பத்திற்கு முன்னுரிமை கொடுத்தார்; ரெபெக்காளும் யாக்கோபும் தேவனுடைய வாக்குறுதியை நிறைவேற்ற வஞ்சகமான குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள்.
இந்தச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மூன்று முக்கியமான ஆவிக்குரிய உண்மைகள் உண்டு.
1. தேவனுடைய வாக்குறுதிக்கு மனித உதவி தேவையில்லை
“மூத்தவன் இளையவனுக்குச் சேவை செய்வான்” என்று தேவன் ஏற்கனவே சொல்லியிருந்தார். தேவன் ஒரு வாக்கு கொடுத்தால், அதை நிறைவேற்ற அவருக்குத் தெரியும். ஆனால் யாக்கோபும் ரெபெக்காளும் தேவனை முழுமையாக விசுவாசிக்காததால், ‘நாமே எதையாவது செய்ய வேண்டும்’ என்று தந்திரத்தில் இறங்கினார்கள். நாமும் பல நேரங்களில் தேவன் நமக்காகக் கதவுகளைத் திறக்கத் தாமதிக்கும்போது, நம்முடைய சுய புத்தியைப் பயன்படுத்தி வஞ்சகமான வழிகளில் இறங்குகிறோம். தேவனுடைய காரியங்களைத் தேவனுடைய வழியில் மட்டுமே செய்ய வேண்டும்.
2. பாவத்திற்கு எப்போதும் ஒரு விலை உண்டு
யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெற்றான், ஆனால் அந்த ஆசீர்வாதம் அவனுக்கு உடனடியாக மகிழ்ச்சியைத் தரவில்லை. மாறாக, அவன் வீட்டை விட்டு ஓட வேண்டியிருந்தது. தன்னை நேசித்த தாயை மீண்டும் பார்க்க முடியாமல் போனது. வஞ்சகம் செய்த யாக்கோபு, பின்னாட்களில் லாபானால் பத்துமுறை வஞ்சிக்கப்பட்டான். “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்” (கலாத்தியர் 6:7) என்கிற பிரமாணம் யாக்கோபின் வாழ்வில் நிறைவேறியது.
3. காத்திருப்பதே விசுவாசம்
சூழல்கள் நமக்கு எதிராக இருக்கும்போது, பொறுமையோடு காத்திருப்பதே உண்மையான விசுவாசம். ஈசாக்கு தவறு செய்ய முற்பட்டபோது, ரெபெக்காள் பதற்றமடையாமல் தேவனிடம் முறையிட்டிருக்கலாம். ஆனால் அவசரப்பட்டு அவள் செய்த செயல், அந்தக் குடும்பத்தையே சிதறடித்தது.
அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கையில் தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் நிறைவேறத் தாமதமாகிறதா? உங்கள் கண்கள் காண்பது தேவனுடைய வார்த்தைக்கு முரணாக இருக்கிறதா? பதற்றமடைந்து தந்திரமான வழிகளைத் தேடாதீர்கள். ஈசாக்கைப் போல மாம்சத்தின் பலவீனத்திற்கு இடம் கொடுக்காமலும், யாக்கோபைப்போல எத்தனாக மாறாமலும், கர்த்தருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருங்கள். அவர் ஏற்ற காலத்தில் உங்களை உயர்த்துவார்.
“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்…” (ஏசாயா 40:31)

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top