ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 26
நிகழ்ச்சி எண்: 0044
வாசியுங்கள்
கர்த்தருடைய வசனங்களை, மிகவும் விருப்பத்தோடு கேட்கும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கர்த்தர் தாமே இன்றும் ஆசீர்வதிப்பாராக.
பிரியமானவர்களே இன்று நாம் ஆதியாகமம் 26 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
நீங்கள் இந்த அதிகாரத்தை பலமுறை வாசித்திருக்கலாம், இது உங்களுக்கு உற்சாகமற்றதாய் தெரிந்து இருக்கலாம் குறிப்பாக, ஆபிரகாம் போன்ற ஒரு மனிதரைப் பற்றிப் படித்த பிறகும், அவருக்குப் பின் வரப்போகும் யாக்கோபு போன்ற ஒரு சுறுசுறுப்பான மனிதரைப் பற்றிப் படிப்பதற்கும் இடைப்பட்ட நிலையில் இது இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.
இந்த அதிகாரம் ஈசாக்கைப் பற்றியது. சொல்லப்போனால், ஈசாக்கைப் பற்றி மட்டுமே பேசுகிற ஒரே அதிகாரம் இதுதான், ஆனால் இது மிகவும் பரபரப்பான ஒன்றாக இல்லை. ஈசாக்கு செய்ததெல்லாம் கிணறுகளைத் தோண்டியது மட்டும்தான். இருந்தாலும் இதை நாம் கவனமாய் ஆராய்ந்து படிக்கும் பொழுது, இதிலும் தேவன் நமக்காக ஒரு செய்தியை வைத்திருக்கிறார் என்பதைக் கண்டு கொள்ளலாம்.
உண்மையில், இது மிக முக்கியமான ஒரு செய்தி. பவுல் இதை மிகவும் துல்லியமாக இவ்வாறு கூறுகிறார்:
(ரோமர் 15:4).
‘4தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. ‘
…………………….
இது பொறுமையைக் கற்றுக்கொடுக்கும் ஒரு அதிகாரமாகும். நம்மில் சிலருக்கு அது தேவைப்படுகிறது—. என்றாலும் நாம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே தேவன் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பது என்ற எண்ணத்தை உங்களுக்குக் கொடுக்க நான் விரும்பவில்லை. கர்த்தரிடத்தில் ஆபிரகாம், யாக்கோபு மற்றும் தாவீது போன்ற மனிதர்களும் இருந்தார்கள்; இவர்கள் மிகவும் விடாமுயற்சி உள்ளவர்களாகவும், ஆக்ரோஷமாகவும் செயல்பட்டவர்கள். தேவன் அத்தகைய குணத்தையும் பயன்படுத்த முடியும். ஆனால் ஈசாக்கின் வாழ்க்கையும் நம்மில் பலருக்கு ஒரு செய்தியைக் கொண்டதாயிருக்கிறது.
2 தீமோத்தேயு 3:16-17
’16வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ்செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 17அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.’
இதை மனதில் வைத்துக்கொண்டு, நாம் இந்த அதிகாரத்தை கற்றுக் கொள்வோம்.
இங்கே அன்பிற்குரிய குமாரனாகிய ஈசாக்கிடம் உடன்படிக்கை உறுதிப்படுத்தப்படுகிறது. அதன் பிறகு, அவர் தனது தந்தை ஆபிரகாமைப் போலவே அவிசுவாசம் எனும் அதே பாவத்தில் விழுவதைகப் பார்க்கிறோம். இறுதியாக, அவர் கேரார் தேசத்தில் கிணறுகளைத் தோண்டுவதைப் பார்க்கிறோம். இது மிகவும் உற்சாகமானதாகத் தோன்றவில்லை என்றாலும், இங்கே நமக்கொரு செய்தி இருக்கிறது; எனவே அதையும் நாம் அறிந்து கொள்ளாமல் விட்டு விடக்கூடாது.
ஆதியாகமம் 26:1
‘1ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். ‘
………………….
இந்த வசனத்தில் நாம் வாசிப்பது போல இரண்டாவது பஞ்சத்தை குறித்து இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. முதல் முறை பஞ்சம் வந்த பொழுது ஞாபகம் இருக்கிறதா? ஆபிரகாமும் சாராளும் எகிப்துக்கு புறப்பட்டு போனார்கள்.
ஆதியாகமம் 26:2
‘2 கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. ‘
…………………
இந்த காரியத்தை தேவன் ஏன் ஈசாக்குக்கு சொல்ல வேண்டும்? ஏற்கனவே ஈசா க்கின் தகப்பனான ஆபிரகாம் இப்படி ஒரு பஞ்சம் வந்த பொழுதுதான் எகிப்திற்கு ஓடிப் போனானர். தாயைப் போல மகள் தகப்பனை போல மகன் என்று சொல்வதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்பொழுது தகப்பனுடைய பாவம் மகனுடைய வாழ்க்கையிலையும் தொடர்கிறது. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு இடைவெளி/ அதாவது Generation gap இப்பொழுது காணப்படுகிறது என்று நாம் பேசிக் கொள்கிறோம். ஆனால் பாவம் என்பது நம் சந்ததியில் தொடர்கிறது என்பதை மறந்து போக கூடாது.
பாவம் ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு அப்படியே தவழ்ந்து செல்லுகிறது. அனேக சமயங்களில் பெற்றோர் செய்த அதே பாவத்தை பிள்ளைகளும் செய்கிறார்கள் .
நம்முடைய வாழ்க்கையில் காணப்படும் பாவங்களையும் சற்று சிந்தித்துப் பார்த்து, நம்முடைய பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று அது தொடராதபடி நம்முடைய வாழ்க்கையிலேயே அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கர்த்தரை நோக்கி பார்ப்போமா?
.பாவம் இப்படி தொடரும் குணநலன் உள்ளதாய் இருப்பதால்தான் இங்கே தேவன் இந்த பஞ்ச நேரத்தில் ஈசாக்கை பார்த்து தெளிவாக நீ எகிப்துக்கு போகாமல் நான் சொல்லும் தேசத்தில் குடியிரு என்று கட்டளை கொடுக்கிறார்.
மேலும் அடுத்த வசனத்தை நாம் பார்க்கும் பொழுது தேவன் ஆபிரகாம் கொடுத்த அவருடைய உடன்படிக்கையை மீண்டுமாக உறுதி செய்கிறார்.
ஆதியாகமம் 26:3-4
‘3இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். 4ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், ………………………
தேவன் ஈசாக்கிடம், “நீ இந்தத் தேசத்தை விட்டுப் போகாதே, எகிப்திற்குப் போகாதே. நான் ஆபிரகாமுடன் பண்ணின உடன்படிக்கையை உன்னோடு உறுதிப்படுத்த விரும்புகிறேன்” என்று கூறுகிறார். மேலும், அவர் அந்த மும்மடங்கு வாக்குத்தத்தத்தைத் திரும்பவும் கூறுகிறார்:
முதலாவதாக நிலத்தை குறித்த வாக்குத்தத்தம். நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்த தேசங்கள் யாவையும் தருவேன் என்கிறார்.
இரண்டாவதாக ஐந்தாவது வசனத்தில் நாம் வாசிப்பது போல உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களை போல பெருக பண்ணுவேன் என்கிறார். மூன்றாவதாக உன் சந்ததிக்குள் பூமியில் உள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் கூறுகிறார்.
ஆதியாகமம் 26:5 பாருங்கள்.
‘5நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். ‘
……………….
இந்த குறிப்பிட்ட நேரத்தில் மோசேயின் கட்டளை கொடுக்கப்படவில்லை. ஆபிரகாம் மோசேயின் கட்டளைகளுக்கும் கற்பனைகளுக்கும் கீழே வாழ வில்லை. ஆனால் ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், தேவன் ஒரு குறிப்பிட்ட காரியத்தை ஆபிரகாம் இடத்தில் சொல்லி இருந்தார். அதை ஆபிரகாம் விசுவாசித்து ஏற்றுக் கொண்டார், அதன்படி செயல்பட்டார்.
ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்தை தனது செயலிலே வெளிப்படுத்தினார். ஆனால் இன்றைக்கு அநேக கிறிஸ்தவர்கள் நான் விசுவாசிக்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த விசுவாசத்தை வாழ்க்கையில் செயலில் காட்டுகிறது இல்லை
ஒருமுறை ஒரு பெண் தனது போதகரிடத்தில் வந்து ஐயா நான் விசுவாசிக்கிறேன் ஆனால் என்னால் எதையுமே உணர முடியவில்லை என்று சொன்னாளாம்.
உதாரணம் ஒன்றைச் சொல்கிறேன் கவனிங்கள் நீங்கள் ஊழியத்திற்காக ஒரு தொகையை காணிக்கையாக ஒரு வங்கிக்கு அனுப்புகிறீர்கள். மேலும் அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று தொலைபேசியில் அழைத்து குறிப்பிடுகிறீர்கள். அதைக் குறித்து செயல்படாமல் இருந்தால் அந்தப் பெண்ணைப் போலத்தான் நாங்களும் இருக்கிறோம்.
உங்களுடைய வார்த்தைகளை கவனித்த நாங்கள் அதை விசுவாசித்து உடனடியாக சென்று ஊழியத்திற்காக, அந்த பணத்தை பெற்றுக் கொள்வோம் என்றால், நீங்கள் சொல்வதை விசுவாசிப்பவர்களாக மட்டுமல்ல அதை செயல்படுகிறவர்களாகவும் இருப்போம். அதேபோலத்தான், ஆண்டவர் சொல்லுகிறதை குறித்தும் நாம் விசுவாசிக்கிறவர்களாக மட்டுமல்ல அதற்கு கீழ்ப்படிந்து செயல்படுகிறவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தான் தேவன் எதிர்பார்க்கிறார்.
ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான் தேவன் அதை அவனுக்கு நீதியாக எண்ணினார். இப்பொழுது கர்த்தர் ஈசாக்கை பார்த்து ஆபிரகாமை போல நீ விசுவாசித்து கீழ்ப்படிகிறவனாய் இருக்க வேண்டும் என்று சொல்லி அவனுக்கு ஞாபகப்படுத்தி கற்றுக் கொடுக்கிறார்.
ஆதியாகமம் 26:6
‘6ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான். ‘
…………………
இந்த கேரார் என்பது அந்த தேசத்தின் தென்பகுதியில் இருக்கிறது. இதன் தென்பகுதியிலே ஈசாக்கும் ஆபிரகாமும் வசித்திருக்கிறார்கள். ஆபிரகாம் இந்த தேசத்திற்குள் வரும் பொழுது வடக்கே சிகேம் வழியாக உள்ளே வந்தார். பின்னர் அந்த தேசத்தின் தென் பகுதியில் எபிரோனின் தென்பகுதியிலே வசித்தார்.
ஆதியாகமம் 26:7
‘7அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான். ‘
……………..
ஈசாக்கு தன் தந்தை செய்த பாவத்தையே மீண்டும் செய்கிறார். எகிப்திற்குப் போக வேண்டாம் என்று தேவன் அவரை எச்சரித்திருந்தார்; எனவே அவர் அங்கே செல்லாமல், அதற்குப் பதிலாக கேராரைச் சென்றடைந்தார். கேராரில் உள்ள மனிதர்கள் ரெபெக்காளை கூர்ந்து பார்ப்பதை ஈசாக்கு கவனித்திருக்க வேண்டும்; அதனால் அவர் அவளிடம், “நீ உன்னை என் மனைவி என்று சொல்லாமல், என் சகோதரி என்று அவர்களிடம் சொல்” என்று கூறுகிறார். ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், ஆபிரகாம் பாதி பொய் சொன்னார், ஆனால் ஈசாக்கு முழுப் பொய் சொன்னார். அவர் சொன்னது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட ஒரு கதையாகும்.
ஆதியாகமம் 26:8
‘8அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக் கொண்டிருக்கிறதைக் கண்டான். ‘
……………….
ஈசாக்கும் ரெபேக்காளும் உற்சாகத்தோடு சிரித்து மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்த ஒரு காட்சியை அபிமெலேக்கு தன் வீட்டிலிருந்து பார்க்கிறான் என்ன நடந்தது பாருங்கள்.
ஆதியாகமம் 26:9-10
‘9அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான். 10அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான். ‘
…………………….
இந்த மனிதர்கள் பாவம் செய்யக்கூடிய ஒரு சூழ்நிலையை ஈசாக்கு ஏற்படுத்தினார் என்று சொல்லலாம் தொடர்ந்து அபிமெலேக்கு என்ன சொன்னான் கவனியுங்கள்.
ஆதியாகமம் 26:11
’11பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான். ‘
……………………
இங்கே நாம் பார்ப்பது போல, அபிமெலேக்கு ஈசாக்கிற்கு ஒரு நல்ல நண்பரானான். ஆபிரகாமைப் போலவே ஈசாக்கும் அந்தச் சமூகத்தில் மிகுந்த மரியாதையைப் பெற்றிருந்தார். அவர்கள் இருவரும் மிகச்சிறந்த மனிதர்களாக விளங்கினார்கள். இந்த அதிகாரத்தின் மீதமுள்ள பகுதிகளை வாசிக்கும்போது, ஈசாக்கு ஒரு சிறந்த மனிதர் என்ற எண்ணம் நமக்கு ஏற்படாமல் போகலாம் என்பதால் தான், நான் இவ்வாறு சொல்கிறேன்.
ஆதியாகமம் 26:12 வாசிக்கிறேன்.
’12ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; ‘
…………………..
கவனித்தீர்களா? கர்த்தர் ஈசாக்கோடு இருந்தார் ஆபிரகாமை அழைத்தது முதல் தேவன் அவர்களுக்கு கொடுத்த ஆசீர்வாதமான வாக்குத்தத்தம் அதுதான். பின்னான காலங்களில் தேவன் அவர்களை அந்த தேசத்தில் வைக்கும் பொழுது அவர்கள் கூடைகளையும் மாபிசையும் தொட்டிகளையும் ஆசீர்வதிப்பேன் என்று சொன்னார். அவர்கள் தேவனோடு வாழ்ந்த காலத்தில் தேவன் இந்த ஆசீர்வாதத்தை அவர்கள் வாழ்க்கையிலே நிறைவேற பண்ணினார்..
ஆதியாகமம் 26:13
’13அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். ‘
……………………………..
இங்கே நான் வாசிப்பது போல ஈசாக்கு மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டார். .இதை நாம் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது. ஈசாக்கின் வாயல்கள் நூறத்தனையான பலனை கொடுத்தது. நம்மில் சிலர் ஆபிரகாம் அபரீதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார். யாக்கோபு அபரீதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஈசாக்கு ஆசீர்வதிக்கப்படவில்லை என்று யோசிக்கலாம். இல்லை பிரியமானவர்களே ஈசாக்கும் அபரீதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருந்தார்.
குறிப்பிடத்தக்க ஒரு காரியம் என்னவென்றால் ஈசாக்கு ஆபிரகாமோடு நெருக்கமாக கட்டப்பட்டவனாக இருந்தார். ஆபிரகாமின் வாழ்க்கையில் சந்தித்த அனுபவங்களும் / ஈசாக்கின் பிறப்பும் / ஈசாக்கின் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டதாய் இருந்தது. ஈசாக்கு முக்கியமானவராக இருந்தாலும் பலிபீடத்தில் வைக்கப்பட்டார். அங்கேயும் ஈசாக்கையும் ஆபிரகாமையும்தான் நாம் சேர்த்து பார்க்கிறோம். இதெல்லாம் ஏன் இப்படி நமக்கு சொல்லப்படுகிறது ??ஏற்கனவே நாம் பார்த்தது போல நமக்கு மாதிரியாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஈசாக்கிற்கும் இயேசுவுக்கும் இடையிலான அந்த நெருக்கத்தை இது காண்பிக்கிறதாக இருக்கிறது யோவான் 14 ஆம் அதிகாரம் 9 ஆம் வசனத்தின் பின்பகுதியில் இயேசு என்ன சொன்னார்?
என்னை கண்டவன் பிதாவை கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்கு காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்
……………..
அது மட்டுமல்ல யோவான் 17 4 பாருங்கள் பின்பகுதி.
நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியை செய்து முடித்தேன்.
………………………
மேலும் யோவான் 5 17
என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார். நானும் கிரியை செய்து வருகிறேன்
…………………….
எனவேதான் ஆபிரகாமின் வாழ்க்கையும் ஈசாக்கின் வாழ்க்கையும் ஒன்றோடு ஒன்று பிணைப்பட்டதாய் இருக்கிறது. இந்த அதிகாரத்தில் நாம் பார்ப்பது போல. ஈசாக்கு தனது சொந்த காலில் நிற்கிறார். இந்த காட்சிகள் அத்தனை சுவாரஸ்யமானதாக இல்லை. ஆபிராமுடைய வாழ்க்கையிலே காணப்பட்ட அதே பாவம் இவருடைய வாழ்க்கையிலையும் காணப்பட்டது. என்றாலும் தேவனுடைய வார்த்தை அவன் மகா பெரியவன் ஆனான் என்று தெளிவாய் சொல்கிறது..
ஆதியாகமம் 26:14
’14அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேகப் பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, ‘
…………………
ஈசாக்கு கர்த்தரிடத்தில் பெற்ற ஆசீர்வாதம் பெலிஸ்டருடைய கண்களை உறுத்துகிறதாய் இருக்கிறது.
வசனம் பதினைந்து பாருங்கள். ஆதியாகமம் 26:15
’15அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். ‘
……………………….
ஆபிரகாம் அந்தத் தேசத்தில் கிணறுகளைத் தோண்டியிருந்தார், இப்போது அவருடைய குமாரன் அங்கு வரும்போது அந்தக் கிணறுகள் அவருக்குச் சொந்தமாகின்றன. ஆனால், அவர் காலையில் எழுந்து வெளியே சென்று பார்க்கும்போது, அந்தக் கிணறுகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதைக் கண்டார். இது பெலிஸ்தியர்களால் செய்யப்பட்டது. சொல்லப்போனால், பெலிஸ்தியர்களின் பகைமையைப் பற்றி வேதாகமத்தில் குறிப்பிடப்படும் முதல் இடம் இதுதான். இதுவே பிற்காலத்தில் தாவீதின் நாட்களில் தொடர்ச்சியான போர்களுக்கு வழிவகுத்தது.
ஆதியாகமம் 26:16
’16அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப் பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான். ‘………………………….
அந்த காலங்களில் ஈசாக்கின் முக்கியத்துவத்தை கவனித்தீர்களா? அவனால் அபிமலேக்குக்கும் பிரச்சனைகள் வந்து விடக்கூடாது என்று எண்ணினவனாக அபிமெலேக்கு ஈசாக்கை அனுப்பி விட தீர்மானம் செய்தான்.
ஆதியாகமம் 26:17
’17அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து,
‘………………..
அபிமெலேக்கு எனும் இந்த மனிதர், “நீ இப்போது பெரும் சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாய், நீ இங்கிருந்து வெளியேறுவதே நல்லது” என்று கூறினார். நீங்கள் கவனித்தீர்களானால், அவருக்கு ஈசாக்கு மீது மிகுந்த மரியாதை இருந்தது என்பது புரியும்.
ஈசாக்கின் வாழ்க்கையில் இது ஒரு பலவீனமான பகுதி போலத் தெரியலாம், ஆனால் அது பலவீனம் அல்ல. அவர் தன் தந்தை ஆபிரகாம் வாழ்ந்த அதே தேசத்திற்கு மீண்டும் திரும்புவதை இங்கே பருங்கள்—
ஆதியாகமம் 26:18-20
’18தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான். 19ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள். 20கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம் பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான். ‘
…………………….
பிரியமானவர்களே அங்கே நடைபெற்ற பிரச்சனைகளை குறித்து இங்கே பார்க்கிறோம் தண்ணீர் என்பது தேவனுடைய வார்த்தைக்கு அடையாளமானதாய் இருக்கிறது ஆழமாக தேவனுடைய வார்த்தையாகிய தண்ணீரை நாம் பருக வேண்டும் நம் தாகத்தை தணிப்பதற்கும் நம்மை சுத்தப்படுத்துவதற்கும் தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்.
அவர் பேசிய வார்த்தைகளினால் நாம் சுத்தமாக்கப்பட்டு இருக்கிறோம் என்று இயேசு கூறியிருக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. தண்ணீர் இல்லாமல் நாம் வாழ முடியாது. பாலைவனமான பல இடங்களுக்கு மேலே ஆகாய விமானத்தில் பறந்து செல்லும் பொழுது தண்ணீரில் இல்லாத இடங்களை பார்க்கிறோம். ஆனால் ஒரே ஒரு இடத்தில் கொஞ்சம் பச்சை பசேல் என்று தெரிகிறது. ஏன் அப்படி தெரிகிறது?? அது ஆச்சரியமாய் இருக்கிறது. தண்ணீர் மட்டுமே அந்த செழிப்பிற்கு விளக்கமாய் இருக்கிறது. எந்த ஒரு திருச்சபையிலும் தண்ணீரான கர்த்தருடைய வார்த்தையே மக்களுடைய வாழ்க்கையில் வித்தியாசத்தை உண்டு பண்ணுகிறதாய் இருக்கிறது. வசனங்களை படிக்கும் விசுவாசிகளுக்கும் வேத வசனங்களை படிக்காத விசுவாசிகளுக்கும் ஒரு வித்தியாசம் தெளிவாக காணப்படக்கூடியதாய் இருக்கிறது அது ஒரு பெரிய வித்தியாசம் பிரியமானவர்களே. வேத வசனங்களை படிப்பதற்கு ஒரு போராட்டம் உண்டு ஆனால் அதற்கான விலைக் கிரயத்தை கொடுக்கும்பொழுது நாம் வேத வசனங்களை படிக்க முடியும்
நீங்கள் வேத வசனத்தை படிப்பதை தவிர மற்ற எல்லா காரியங்களையும் செய்ய பிசாசானவன் உங்களை அனுமதிப்பான் ஆனால் வேத வசனங்களை தொடர்ச்சியாக கருத்தோடு நீங்கள் பெற்றுக் கொள்வதை தடுக்க எல்லா முயற்சிகளையும் அவன் செய்வான்.(Short)
ஆதியாகமம் 26:21-22
’21வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான். 22பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான். ‘
…………………
அதன்பின் அவர் அந்தக் கிணற்றுக்கு ரெகொபோத் என்று பெயரிடுகிறார். அதற்கு ” கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார்” என்று அர்த்தம். இதற்கு முன்பெல்லாம் அவர் ஒரு கிணற்றைத் தோண்டும்போது, அவர்கள் அதை அவரிடமிருந்து பறித்துக் கொள்வார்கள். அவர் அங்கிருந்து நகர்ந்து வேறொரு கிணற்றைத் தோண்டுவார், அதையும் அவர்கள் அவரிடமிருந்து பறித்துக் கொள்வார்கள். அவர் தொடர்ந்து முன்னேறிச் சென்றுகொண்டே இருந்தார். இது ஈசாக்கை ஒரு சமாதானத்தின் மனுஷனாகவும், பொறுமையுள்ள மனிதனாகவும் வெளிப்படுத்துகிறது.
தாவீது இதைச் செய்திருக்க மாட்டார், அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். சீமோன் பேதுருவும் இதைச் செய்திருக்க மாட்டார். இன்னும் உண்மையைச் சொல்லப்போனால்,நம்மில் பலரால் இப்படி செய்ய முடியாது. இது நமக்கு ஒரு மிகச்சிறந்த பாடம். குறிப்பாக, நாம் தேவனுடைய வார்த்தையைப் படிக்கும் விஷயத்தில் இதைப் பயன்படுத்தும்போது, இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
மேலும் கூற வேண்டுமென்றால், வேத வசனங்களை நாம் வாஞ்சையோடு தேடும்பொழுது, அதைக் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அதற்காக நாம் சிறப்பான முயற்சி எடுக்கும் பொழுது, மற்ற காரியங்களை தியாகம் செய்து வேத வசனங்களுக்கு நம்முடைய வாழ்க்கையில் நாம் இடம் கொடுக்கும் பொழுது, அதனாலே நமக்கு கிடைக்கிற ஆசீர்வாதம் மிகப்பெரியது.
ஆதியாகமம் 26:23-24
’23அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். 24அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார். ‘
…………………
தேவன் ஈசாக்கிற்கு ஆறுதல் அளிப்பதற்காகத் தரிசனமானார். யோசேப்பைத் தவிர மற்ற அனைத்துப் பிதாக்களுக்கும் தேவன் தரிசனமானார். அவர் ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபு ஆகியோருக்குத் தரிசனமானார்.
ஆதியாகமம் 26:25
’25அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். ‘
………………………..
அவர் தொடர்ந்து முன்னேறிச் சென்று, மீண்டும் கிணறுகளைத் தோண்டுகிறார். ஈசாக்கின் பெயருக்கு அருகில் நீங்கள் எப்போதும் ஒரு கிணற்றை அடையாளமாக வைக்கலாம். ஆபிரகாமின் பெயருக்கு அருகில் ஒரு பலிபீடத்தையும், நாம் இனிமேல் பார்க்கப்போவது போல, யாக்கோபின் பெயருக்கு அருகில் ஒரு கூடாரத்தையும் நீங்கள் அடையாளமாக வைக்கலாம்.
ஆதியாகமம் 26:26-29
’26அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள். 27அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். 28அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். 29நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள். ‘
………………………
கேரார் தேசத்து மனுஷர்களுடனான ஈசாக்கின் அணுகுமுறை கிட்டத்தட்ட ஒரு பலவீனம் போலத் தோன்றினாலும்,கேராரின் ராஜா ஈசாக்கினால் மிகவும் கவரப்பட்டார்; அதனால் அவர் ஈசாக்குடன் ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு, பெயர்செபா வரை அவரைப் பின்தொடர்ந்து வந்தார். அந்தத் தேசத்தில் ஈசாக்கிற்கு இருந்த செல்வாக்கு ஒரு பலவீனமான மனிதனுடையதாக இருக்கவில்லை.
ஆதியாகமம் 26:34-35
’34ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். 35அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.’
……………………
இந்த வசனத்தில் நாம் பார்ப்பது போல ஈசா ஏத்தியர்களின் வம்சத்தில் இரண்டு பெண்களை திருமணம் செய்கிறான். ஆனால் அவர்களை குறித்து சொல்லப்பட்டிருப்பது என்ன அவர்கள் ஈசாக்கும் ரெபேக்காளுக்கும் மனநோய் இருந்தார்கள். இப்பொழுதுதான் ஈசாக்கும் ரெபேக்காளும் ஏசாவுக்கு அந்தப் பெண்களை திருமணம் செய்ய அனுமதி கொடுத்திருக்கக் கூடாது. தங்கள் சொந்த குடும்பத்தில் ஆராணியில் போய் பெண்ணை பெற்றிருக்க வேண்டும் என்பதை யோசித்து இருப்பார்கள் . ஈசாக்கின் பெற்றோர் கர்த்தரை அறிந்தவர்கள் ரெபேக்காளின் குடும்பம் கர்த்தரை அறிந்த குடும்பம் , அதுபோல ஈசாக்கிற்கும் கர்த்தரை அறிந்த குடும்பத்திலிருந்து பெண் எடுத்திருக்க வேண்டும்.
என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான வாலிப சகோதரனே சகோதரியே, நீங்கள் என்ன விளக்கம் கொடுத்தாலும் சரி இயேசுவே ரட்சகர் என்று விசுவாசியாக எந்த குடும்பத்தோடும் திருமணம் செய்வது பிசாசு உங்கள் சந்ததிக்கு விரிக்கும் வலை என்பதை மறந்து போக வேண்டாம் .
பிரியமானவர்களே, ஆதியாகமம் 26-ஆம் அதிகாரத்தின் வாயிலாக ஈசாக்கின் வாழ்க்கையிலிருந்து மிக முக்கியமான மூன்று பாடங்களை நாம் இன்று கற்றுக்கொண்டோம்:
1. விசுவாசம் என்பது ஒரு செயல் (Faith as an Action): ஈசாக்கு தன் தந்தை ஆபிரகாமைப் போலவே சில பலவீனங்களைக் கொண்டிருந்தாலும், தேவன் சொன்ன தேசத்திலேயே தங்கியிருந்து விசுவாசத்தைக் கிரியையிலே காட்டினார். அவர் விதை விதைத்தபோது, கர்த்தர் அவரை நூறு மடங்கு ஆசீர்வதித்தார். நம்முடைய விசுவாசம் வெறும் வார்த்தைகளில் இல்லாமல், தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அவர் காட்டும் பாதையில் நடக்கும்போது, நம்முடைய வாழ்க்கையிலும் நூறு மடங்கு பலனைக் காண முடியும்.
2. போராட்டங்களுக்கு நடுவே பொறுமை: பெலிஸ்தியர்கள் ஈசாக்கின் கிணறுகளைத் தூர்த்துப் போட்டு, அவருடன் வாக்குவாதம் செய்தபோது, அவர் சண்டையிடவில்லை. அவர் தொடர்ந்து முன்னேறிச் சென்று அடுத்த கிணற்றைத் தோண்டினார். இறுதியாக கர்த்தர் அவருக்கு ‘ரெகொபோத்’ (விசாலமான இடம்) என்னும் ஆசீர்வாதத்தைத் தந்தார்.
“வாக்குவாதம் பண்ணுகிறவர்களைக் காட்டிலும், பொறுமையாய் விலகிச் சென்று கிணறு தோண்டுகிறவர்களையே தேவன் உயர்த்துவார்.”
வாழ்க்கைப் போராட்டங்களில் உங்கள் உரிமைகளுக்காக மோதுவதை விட, தேவனை நம்பி உங்கள் கடமையைச் செய்துகொண்டே இருங்கள்; சத்துருக்களே உங்களிடம் வந்து சமாதானம் பேசும் நிலையை தேவன் உருவாக்குவார்.
3. பரிசுத்தமான சந்ததி: இந்த அதிகாரத்தின் இறுதியில் ஏசாவின் தவறான திருமண முடிவுகள் அவன் பெற்றோருக்கு மனநோவை உண்டாக்கினதைக் கண்டோம். உலகத்தோடு ஒத்துப் போகும் முடிவுகள் நம்முடைய ஆவிக்குரிய செழிப்பை பாதிக்கும். நம்முடைய பிள்ளைகளும் சந்ததியும் கர்த்தரை அறிந்தவர்களாக வளர வேண்டியது அவசியம்.
முடிவாக: ஈசாக்கைப் போல நாமும் சமாதானத்தின் மனிதர்களாய் இருப்போம். கர்த்தருடைய வசனமாகிய தண்ணீரைத் தேடித் தொடர்ந்து விருப்பத்தோடு கற்றுக் கொள்வோம். உலகத்தின் பொறாமையும் எதிர்ப்பும் நம்மைத் தடுத்தாலும், விசுவாசத்தோடு முன்னேறுபவர்களுக்கு தேவன் தகுந்த நேரத்தில் ‘ரெகொபோத்’தைக் கட்டளையிடுவார்.
ஈசாக்கு பெற்ற ஆசிர்வாதங்களை கர்த்தர் உங்களுக்கும் தந்து உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
