ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 25
நிகழ்ச்சி எண்: 0043
வாசியுங்கள்
தொடர்ந்து எங்களோடு வேதத்தை கற்று வரும் உங்களுக்கு கர்த்தர் தாமே ஆவிக்குரிய சகல ஆசிர்வாதங்களையும் கொடுத்து உங்களை ஆசீர்வதிப்பாராக. இந்த வேத பாடங்களை நீங்கள் கவனிக்கும் பொழுது உங்கள் வேத புத்தகத்தையும் கையில் வைத்துக் கொள்வீர்கள் என்றால் மிகவும் நல்லது.
இன்று நாம் ஆதியாகமம் 25 ஆம் அதிகாரத்தை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
“இது வேதாகமத்தின் மற்றொரு சிறந்த அதிகாரமாகும். இந்த அதிகாரத்தில் ஆபிரகாமின் மரணத்தையும், ஈசாக்கு மற்றும் ரெபெக்காளுக்கு ஏசா, யாக்கோபு ஆகிய இரட்டையர்கள் பிறந்ததையும் குறித்த விபரங்களை நாம் அறிந்து கொள்ளலாம். இது இஸ்மவேலின் சந்ததியினரையும், ஈசாக்கின் சந்ததியினரையும் பற்றிய விவரங்களை நமக்கு கொடுக்கிறது. மேலும், சேஷ்டபுத்திர பாகம் (birthright) தொடர்பான சம்பவமும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகாரமாகும், இந்த அதிகாரத்தில் இன்னும் பல சம்பவங்களை நாம் பார்க்க முடியும்.
ஆதியாகமம் 25:1-2
‘1ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான். 2அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள். ‘
………………
“இப்போது அவருக்கு (ஆபிரகாமுக்கு) ஒரு பெரிய குடும்பமே இருக்கிறது. சாராள் மரித்த பிறகுதான் அவருக்கு மிகப் பெரிய குடும்பம் உருவானது. ‘ஈசாக்கு பிறந்த காலத்திலேயே, ஒரு குழந்தையை உலகிற்கு கொண்டு வரும் ஆபிரகாமின் திறன் முடிந்துவிட்டதாக நான் நினைத்தேனே?’ என்று யாராவது கேள்வி எழுப்பலாம். உண்மைதான், அவர் அப்படித்தான் இருந்தார். ஆனால் தேவன் ஒன்றைச் செய்யும் போது, அதை அவர் முழுமையாகச் செய்கிறார். இதனால்தான் தேவன் செய்யும் எதிலும் அவருடைய கையொப்பம் இருக்கும் என்று நாம் கூற முடியும். ஆபிரகாம் ஈசாக்கை மட்டும் உலகிற்கு கொண்டு வரவில்லை, மாறாக இப்போது இன்னும் சில பிள்ளைகளைக் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தையே உருவாக்குகிறார் என்பதை இங்கே நாம் பார்க்கிறோம்.
நமக்கு முன்பாக இருக்கும் இந்த வேத பகுதியில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், மேதான் மற்றும் மீதியான் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் ஆகும். ஈசாக்கு தவிர மற்ற சிறுவர்கள் மூலமாகவும் தேசங்கள் உருவாகும், ஆனால் பின்னால் அவர்களை அடையாளம் காண முடியவில்லை. அவர்கள் வேதாகமத்தில் நம்முடைய பாதையில் குறுக்கிடாததால் நான் அவர்கள் மீது ஆர்வம் காட்டவில்லை, ஆனால் மீதியான் குறுக்கிடுகிறான். மோசே பின்னாளில் மீதியான் தேசத்திற்குச் சென்று அங்கிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்வார் என்பதை நாம் காண்போம். மீதியானியர்களும், மேதானியர்களும் ஆபிரகாமின் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆபிரகாமுக்கு மற்ற குமாரர்களும் இருந்தார்கள் என்பதை இங்கே பார்க்கிறோம், ஆனால் ‘ஈசாக்கின் மூலமே உன் சந்ததி அழைக்கப்படும்’ என்று கர்த்தர் மிகத்தெளிவாக சொல்லியிருந்தார்—நாம் சற்றுமுன் பார்த்த மற்ற குமாரர்கள் மூலம் அல்ல. இஸ்மவேல் மூலமோ, மீதியான் மூலமோ அல்லது மேதான் மூலமோ அல்ல. இவர்கள் அனைவரும் வனாந்தரத்தில் நாடோடிகளாக வாழ்ந்தவர்கள்.”
ஆதியாகமம் 25 : 5 – 10 வசிக்கிறேன்.
5ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான்.
6ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான்.
7ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசு நாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம்.
8பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.
9அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்.
10அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்.
……………………..
கவனித்தீர்களா இந்த அடக்க ஆராதனைக்கு இஸ்மவேலு வருகிறான். ஏனென்றால் என்ன இருந்தாலும் ஆபிரகாம் அவனுக்கும் தகப்பன். எனவே ஈசாக்கும் இஸ்மாவேலும் சேர்ந்து ஆபிரகாமை அடக்கம் செய்கிறார்கள். அது மட்டுமல்ல ஈசாக்கு முதல் முறையாக ரெபெக்காளை சந்தித்த இடத்தில் போய் அங்கே அவன் வாழ்க்கையை தொடர்கிறான்.
ஆதியாகமம் 25:11 கவனியுங்கள்
’11ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான். ‘
…………………..
“வசனங்கள் 12 முதல் 18 வரை, ஆபிரகாமின் குமாரனாகிய இஸ்மவேலின் சந்ததியினரைக் குறித்து வாசிக்கிறோம்; இஸ்மவேல் சாராயின் வேலைக்காரியான எகிப்து தேசத்து ஆகார் ஆபிரகாமுக்கு பெற்றுக் கொடுத்திருந்தாள். அவர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஆதியாகம புத்தகத்தில் பரிசுத்த ஆவியானவர் இந்த முறையைப் பயன்படுத்துகிறார் என்பதை மீண்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
அதாவது, தள்ளப்பட்ட சந்ததி ்பற்றி முதலில் சொல்லப்படும், பின்னர் அது ஒதுக்கி வைக்கப்படுகிறது; அதன்பிறகு அதைப் பற்றி மீண்டும் குறிப்பிடப்படுவதில்லை. அதன்பின்னர், கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தும் சந்ததி கொடுக்கப்பட்டு, அது தொடர்ந்து விவரிக்கப்படுகிறது. எனவே, இஸ்மவேலின் சந்ததி கொடுக்கப்பட்ட பின்னரே, நாம் ஈசாக்கின் சந்ததியைப் பற்றிப் படிக்கிறோம்.”
ஆதியாகமம் 25:19
’19ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். ‘
………………………….
கவனித்தீர்களா? ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்ச வரலாறு; ஆபிரகாம் ஈசாக்கை பெற்றான்.
இந்த சந்ததியை தான் தொடர்ந்து நாம் பார்க்க போகிறோம். ஆபிரகாம் ஈசாக்கை பெற்றான். ஈசாக்கு யாக்கோபை பெற்றான் இதைத்தான் மத்தேயு முதல் அதிகாரத்திலும் நாம் வாசிக்கிறோம்.
இந்த ஒவ்வொரு ஆண்களுமே மற்ற பிள்ளைகளையும் பெற்றார்கள். ஆபிரகாமும் அநேக பிள்ளைகளை பெற்றிருந்தான். ஆனால் அவர்களுடைய சந்ததி எல்லாம் கூறப்படவில்லை. ஈசாக்குடைய சந்ததிதான் தொடர்ந்து கூறப்பட்டது/ இனி இஸ்மவேலைக் குறித்தோ மேத்தானை குறித்தோ, மீதியான குறிக்கோ நாம் மறந்து போகலாம்.
ஈசாக்கின் சந்ததியை அவ்வப்பொழுது பின்னாலே அவர்கள் சந்திப்பார்கள். ஆனால் அவருடைய வம்ச வழிகளை நாம் சிந்திக்க போவதில்லை.
ஆதியாகமம் 25:20-21
’20ஈசாக்கு ரெபெக்காளை விவாகம் பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள். 21மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். ‘
………………………
இங்கே சுவாரஸ்யமான ஒரு காரியம் என்னவென்றால், ரெபெக்காளும் சாராளைப் போலவே குழந்தையை பெற்றெடுக்க முடியாதவளாய் இருந்தாள். ஆனால் அவளுக்காக ஈசாக்கு கர்த்தர் இடத்தில் ஜெபிக்கிறார் இப்பொழுது அவள் இரட்டைக் குழந்தைகளை கர்ப்பம் தந்திருக்கிறாள்.
ஆதியாகமம் 25:22 பாருங்கள்.
’22அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள். ‘
……………………..
பிறப்பதற்கு முன்னதாகவே ஆரம்பமான இந்த இரண்டு மகள்களுக்கும் இடையிலான பிரச்சனை இன்றைக்கும் உலகத்திலே நடைபெறுகிற போராட்டத்தை குறிக்கிறதாய் இருக்கிறது. அதாவது நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் / ஆவிக்கும் சரீரத்திற்கும் இடையிலான போராட்டம்.
கர்த்தருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருமே இந்த போராட்டத்தை குறித்து அறிந்திருக்கிறார்கள். இதை குறித்து அப்போஸ்தலனாகிய பவுலும் ரோமர் ஏழாம் அதிகாரத்தில் தெளிவாய் எழுதியிருக்கிறார். அவளுக்குள்ளே நடைபெறுகிற இந்த போராட்டத்தை குறித்து ரெபேக்காள் ஒன்றுமே அறியாதவளாக இருந்தாள். எனவே தேவனிடத்தில் போய் அதை குறித்து கேட்கிறாள். நம்முடைய வாழ்க்கையிலும் கேள்விக்குறியாய் இருக்கும் எந்த காரியத்தை குறித்தும் நாம் தேவனிடத்தில் உடனே விசாரிக்கும் பொழுது அவர் நமக்கு பதில் சொல்கிறவராக இருக்கிறார்.
வாசிக்கிறேன் ஆதியாகமம் 25:23
’23அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார். ‘
……………………..
இங்கே நான் வாசிப்பது போல, தேவன் மிகத் தெளிவாக மூத்தவன் இளையவனை சேவிப்பான் என்று கூறிவிட்டார். இதை ரெபென்னாள் பூரணமாக விசுவாசத்திற்கு வேண்டும் அது மட்டுமல்ல இளைய குமாரனும் அதை பரிபூரணமாய் விசுவாசத்திற்கு வேண்டும். தொடர்ந்து அங்கு என்ன நடக்கிறது பாருங்கள்.
ஆதியாகமம் 25:24-25
’24பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது. 25மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன் போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள். ‘
…………………
“ஏசா என்ற பெயருக்கு ‘சிவப்பு’ அல்லது ‘மண் நிறமானவன்’ என்று பொருள். அவன் முதலாவதாகப் பிறந்ததால், மூத்தவராகக் கருதப்படுகிறார். ஆனால், அந்த மூத்தவனோ இளையவனுக்கு ஊழியஞ்செய்ய வேண்டியிருந்தது.”
ஆதியாகமம் 25:26
’26பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான். ‘
…………………
நான் வாசித்த வசனத்தை கவனித்தீர்களா? ஈசாக்கும் ரெபெக்களுக்கும் திருமணமாகும் பொழுது ஈசாக்கு் 40 வயசு 20 ஆண்டுகள் கழித்ததான் இந்த குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். மூத்தவன் ஏசா சிவந்தவன் என்று அழைக்கப்படுகிறான். யாக்கோபு ஏசாவின் குதிகாலைப் பிடித்துக் கொண்டு வெளிப்பட்டான் என்று வாசித்தோம். எனவே அவனை யாக்கோபு என்று அழைத்தார்கள். முந்தமுயன்றவன் என்று சொல்லலாம். மூத்தவனின் இடத்தை எடுத்துக் கொள்ள வருகிறான். ஆனால் ஏற்கனவே தேவன் அதை அவனுக்கு வாக்கு பண்ணி விட்டார்.
ஆதியாகமம் 25:27
’27இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான். ‘
“இப்போது இந்த இரண்டு சிறுவர்களும் அந்த வீட்டில் வளர்வதைக் கவனிப்போம். இவர்கள் இரட்டையர்கள் தான், ஆனால் இவர்களைப் போல இவ்வளவு வித்தியாசமான குணங்களைக் கொண்ட இரு சிறுவர்களை நீங்கள் பார்த்திருக்க முடியாது. அவர்கள் கருப்பையிலிருந்தே போராடத் தொடங்கினார்கள், அதுமுதல் ஒருவருக்கொருவர் எதிராகவே இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை நோக்கங்கள், மற்றும் தத்துவங்கள் முற்றிலும் வேறானவையாக இருந்தன.. அவர்களின் சிந்தனையும் மனப்போக்கும் வெவ்வேறானவை. ஆரம்பத்தில், யாக்கோபை விட ஏசா மற்றவர்களை மிகவும் எளிதாக கவரக்கூடியவராக (attractive) இருந்திருக்கிறார் என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால், நாம் எப்போதுமே ஒருவரை அவர்களின் வெளித்தோற்றத்தை வைத்து எடைபோட முடியாது என்பதை நாம் அறிந்துகொள்கிறோம். உள்ளத்தில் என்ன நடக்கிறது என்பதை வைத்தே நாம் தீர்மானிக்க வேண்டும். இந்தச் சம்பவத்தில் நாம் அதைக் குறித்து தெளிவாக நாம் கற்றுக்கொள்கிறோம்.
‘அந்தப் பிள்ளைகள் வளர்ந்தார்கள்.’ என்று வாசிக்கிறோம். இந்த ஏசா ஒரு தந்திரமுள்ள வேட்டைக்காரனாகவும், எப்போதும் வீட்டிற்கு வெளியிலேயே பொழுதை கழிப்பவனாகவும், ஒரு விளையாட்டு வீரரைப் போன்ற உடல்வாகு கொண்டவனாகவும் இருந்தான். இன்றைய காலத்தில் நாம் அவனை சகல கலா வல்லவன் என்று அழைப்போம். அவன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டினான். உடல் சார்ந்த எல்லாவற்றிலும் ஈடுபட்டான், ஆனால் அவனுக்கு ஆவிக்குரிய காரியங்களில் எவ்வித புரிதலோ, திறமையோ அல்லது விருப்பமோ இருக்கவில்லை. அவன் உடல் சார்ந்த விஷயங்களில் மட்டுமே ஆர்வம் காட்டினான். அவன் மாம்சத்திற்கு அடையாளமாக இருக்கிறான்.
யாக்கோபு ஒரு சாதுவான மனிதனாக (plain man) இருந்தான். அதன் பொருளை – உங்கள் விருப்பப்படி எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். அவன் வீட்டிற்குள்ளேயே தங்கியிருப்பவன். அவன் தாயின் செல்லப்பிள்ளையாக அவளுடைய அரவணைப்பிலேயே இருந்தான். தாய் சொன்னபடியே அவன் கேட்டதை நீங்கள் கவனிக்கலாம். யாக்கோபு உண்மையிலேயே ஒரு அம்மாவின் பிள்ளை தான்.
இந்த ஏசா அப்பாவின் செல்லப்பிள்ளை—”
ஆதியாகமம் 25:28
’28ஏசா வேட்டையாடிக் கொண்டு வருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள். ‘
…………………..
இந்தக் குடும்பத்திலுள்ள சிக்கல் இதுதான். இத்தகையச் சூழலில் அவர்களுக்குப் பிரச்சினைகள் வரும் என்று நீங்கள் நினைத்தால், அதுதான் இங்கும் நடந்தது. அப்பா ஒரு பிள்ளையிடமும், அம்மா இன்னொரு பிள்ளையிடமும் பாரபட்சம் காட்டும்போது, அங்கே குழப்பம் ஏற்படுகிறது . அதுதான் சரியாக இங்கும் நடந்தது.
ஈசாக்கு ஏசாவை நேசித்தார், ஏனெனில் அவர் அவனுடைய வேட்டை இறைச்சியைப் விரும்பி புசித்தார். ஏசா வேட்டைக்குச் செல்வார், அவர் செல்லும்போதெல்லாம் ஏதேனும் ஒன்றைக் கொண்டு வருவார். அவர் வேட்டை இறைச்சியை வீட்டிற்கு கொண்டு வந்தார். ஈசாக்கு அதை விரும்பினார், மேலும் அவருக்கு இந்த வெளிப்புற நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பையனைப் பிடித்திருந்தது. ஆனால், யாக்கோபு ஒரு “தாயின் பிள்ளை” (mama’s boy) என்பதால் ரெபெக்காள் அவனை நேசித்தாள்.
நான் முன்பே கூறியது போல, இந்த கட்டத்தில் யாக்கோபை விட ஏசா மிகவும் கவர்ச்சிகரமானவராகத் தோன்றுகிறார். அவர் மிகவும் ஆரோக்கியமான குணாதிசயங்களைக் கொண்ட சிறுவனாகத் தெரிகிறார். ஆனால் யாக்கோபோ தந்திரமானவன்; அவன் சாமர்த்தியமாக இருக்க முயல்கிறான். சொல்லப்போனால், முற்றிலும் தவறான காரியங்களைச் செய்வதற்குக்கூட அவன் தயங்குவதில்லை (இதற்காகத் தேவன் அவனைத் தண்டிப்பார்). இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏசா வெளிப்புறத்தில் மிகவும் கவர்ச்சிகரமானவராக இருந்தாலும், உள்ளுக்குள் அவனுக்குத் தேவனைப் பற்றிய எந்தப் புரிதலோ அல்லது தேடலோ இல்லை. உலகப் போக்கில் வாழும் ஒரு மனிதன் யாராவது உண்டு என்றால், அது ஏசாதான். அவன் வெறும் உடலளவிலான (physical) மனிதன், அவ்வளவுதான். அதற்காகவே அவன் வாழ்ந்தான் என்று சொல்லலாம்.
ஆனால் யாக்கோபின் உள்ளத்திலோ, ஆன்மீகக் காரியங்களுக்கான ஒரு வாஞ்சை இருந்தது. யாக்கோபின் மேல் படிந்திருந்த குப்பைகளையும், திரைகளையும் நீக்கி, அவனுள் இருந்த ஆன்மீக விருப்பத்தை வெளிக்கொணரத் தேவனுக்கு நீண்ட காலம் பிடித்தது. ஆனால் இறுதியாக அவர் அதைச் செய்தார். நாம் யாக்கோபைப் பற்றிய ஆய்வை முடிப்பதற்குள் அவர் வாழ்வின் பிற்பகுதி வரை அதை வெளிப்படுத்தாவிட்டாலும், ஆரம்பத்திலிருந்தே அவர் தேவனுடைய மனுஷனாகத்தான் இருந்தார் என்பதை நாம் பார்க்கலாம்.
இப்போது, அந்த வீட்டில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி நமக்குச் சொல்லப்படுகிறது. அப்பா மற்றும் அம்மா இருவருமே காட்டிய பாரபட்சம், – எத்தகைய சிரமங்களையும் மோதல்களையும் உண்டாக்கியிருக்கும் என்பதை உங்களால் நன்கு புரிந்துகொள்ள கூடியதாகவே இருக்கிறது. அதை ஒரு மகிழ்ச்சியான குடும்பம் என்று சொல்ல முடியாது.
அருமையான சகோதரனே சகோதரியே உங்கள் குடும்பத்தில் இப்படி நீங்கள் பிரித்து அன்பு கூற வேண்டாம் எத்தனை பிள்ளைகள் ஆண்டவனுக்கு கொடுத்திருந்தாலும் எல்லாருக்கும் ஒரே அன்பை கொடுங்கள் எந்த பிள்ளை சிறப்பான காரியத்தை செய்தாலும் உற்சாகப்படுத்துங்கள், பிள்ளைகள் தவறு செய்யும் பொழுது கண்டிக்கும் மறக்க வேண்டாம்
ஆதியாகமம் 25:29-32
’29ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். 30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று. 31அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான். 32அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். ‘
………………
இந்த சம்பவம் ஏசாவினுடைய உண்மை தன்மையை வெளிப்படுத்துகிறது. வயலில் இருந்து வருகிறான். களைப்போடு வருகிறான். இவன் சாகும் அளவிற்கு பசி நிறைந்தவனாக இல்லை. ஏனென்றால் ஆபிரகாமுடைய குடும்பத்தில் வந்த யாருமே பசியினால் சாகும் அளவிற்கு சூழ்நிலை இல்லை.
எப்பொழுதுமே அங்கே அவர்களுக்கு உணவு உண்டு. அவன் வந்த அந்த நேரத்தில் இந்த கூழைத் தவிர வேறு எதுவும் ஆயத்தம் ஆகவில்லை. இதை யாக்கோபுதான் தயாரித்திருக்கிறான். வீட்டிற்குள்ளே வளர்ந்த யாக்கோபு ஒரு நல்ல சமையல்காரனாய் வளர்ந்திருக்கிறான். இப்பொழுது யாக்கோபினிடத்தில் அந்த சிவப்பான கூழிலே – நான் சாப்பிட கொஞ்சம் தா நான் இளைத்திருக்கிறேன் -என்று ஏசா கேட்கிறான்.
ஏதோம் என்றாலும் சிவப்பு என்று பொருள். ஏசாவை போலவே மண்ணிறமான என்று சொல்லலாம். இந்த வாய்ப்பை யாக்கோபு எப்படி பயன்படுத்துகிறான் கவனியுங்கள். அவன் மிகவும் தந்திரமுழவனும் ஏமாற்றுகிறவனுமாய் இருந்தான். இப்பொழுது ஏசாவின் சேஷ்ட புத்திர பாகத்தை கேட்கிறான். அதை கொடுத்தால் இதை தருவேன் என்று தந்திரமாக வாய்ப்பை பயன்படுத்துகிறான்.
சரி இப்பொழுது நாம் இந்த சேஷ்ட புத்திர பாகம் என்றால் என்ன என்பதை குறித்தும் கொஞ்சம் பார்ப்போம். சேஷ்ட புத்திர பாகத்தை பெற்றுக்கொள்ளுகிறவனே குடும்பத்தின் தலைவனாய் இருக்கிறான். அதாவது குடும்பத்தின் ஆசாரியனே இதைப் பெற்றுக் கொள்கிறான்.
இந்த குடும்பத்தை பொருத்தமட்டிலும் அதைப் பெற்றுக் கொள்ளுகிறவனுடைய சந்ததியிலேயே இயேசு தோண்றப் போகிறார். இந்த சேஷ்ட புத்திர பாகத்தை ஏசா பெரிதாக கருதவே இல்லை. அவன் அதை குறித்து கொஞ்சமும் அக்கறைப்பட்டு கொள்ளவில்லை என்று சொல்லலாம். இது யாக்கோபுக்கும் தெரியும். ஏசா எந்த முக்கியத்துவத்தையும் அவனுடைய சேஷ்ட புத்திரபாகத்திற்கு கொடுக்கவில்லை. அவன் அந்த குடும்பத்திற்கு ஆசாரியனாய் வாழ விரும்பவில்லை .
அதை அவனுடைய வாழ்க்கையின் ஒரு கடைசி காரியமாகவே நினைத்தான். இன்றும் பல வீடுகளிலே கிறிஸ்துவை அறிந்தவர்கள் கூட கிறிஸ்துவுக்காக எதையாவது செய்யும்படியாய் அழைக்கப்பட்டால் , அய்யய்யோ நான் ஒரு போதனன் இல்லை, என்னால் அதைச் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள் .
ஆம் பிரியமானவர்களே இன்றைக்கு அநேகர் ஆவிக்குரிய காரியங்களிலே ஈடுபட விருப்பமற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை உலகத்திற்கு காட்டுவதை குறித்து அவர்கள் வெட்கப்படுகிறார்கள். இதுதான் ஏசா, சேஷ்டபுத்திர பாகத்தை பெற்றிருந்தவன் என்பதை இவன் உலகத்திற்கு காட்ட விரும்பவில்லை. அவனைப் பார்த்து யாராவது ஆசாரியன் என்று அழைப்பார்கள் என்றால் அது அவனை கேலி செய்தது போல அவனுக்கு இருந்திருக்கும்.
சேஷ்ட புத்திர பாகத்தில் அவனுக்கு விருப்பம் இல்லை. கிறிஸ்து தன்னுடைய சந்ததியில் வரவேண்டும் என்பதை குறித்து அவன் அக்கறை பட்டவனாக இல்லை. ஆனால் யாக்கோபு இதை பார்க்கிறான். உன்னுடைய சேஷ்ட புத்திர பாகத்தை எனக்குத்தா இந்த கூழை உனக்கு கொடுக்கிறேன் என்று சொல்கிறான். அந்த சேஷ்ட புத்திர பாகம் எனக்கு எதற்கு? அந்த பிறப்புரிமையை குறித்து நான் ஏன் அக்கரைப்பற்றுக்கொள்ள போகிறேன்? அதை எல்லாம் விட இந்த கூழ் எனக்கு மேலானது என்று அவன் நினைத்தான்.
ஆவிக்குரிய காரியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காத ஏசா சேஷ்டபுத்திரபாகத்தை மதிப்பற்றது என்று நினைத்தான். அருமையானவர்களே, யாக்கோபு இங்கே செய்ததும் தவறானதுதான். ஏனென்றால் தேவன் ஏற்கனவே மூத்தவன் இளயவனை சேமிப்பான் என்று வாக்கு பண்ணியிருக்கிறார்.
தேவனுடைய நேரத்தில் யாரக்கோபுக்கு இந்த சேஷ்ட புத்திர பாகம் வந்து சேரும். ஆனால் யாக்கோபு காத்திருக்க மனம் அற்றவனாயிருந்தான். தேவன் வாக்குறுதி கொடுத்ததை அவனே எடுத்துக்கொள்ள முயன்றான், அதை தந்திரமாக எடுத்துக் கொண்டான். ஆனால் தேவனே அதை அவனுக்கு கொடுக்கும்படியாய் காத்திருந்தால் அது மிக நன்றாய் இருந்திருக்கும் தனக்குத்தானே என்ன செய்து கொள்ள முடியுமோ அதையே செய்வேன் என்று தன்னுடைய பாணியிலேயே அவன் சென்றான் தனக்குத்தானே உதவி செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும்பொழுது தேவனை ஏறிட்டு பார்த்து அவர் செயல்படும்படியாய் எதிர்பார்க்க வேண்டியது இல்லை என்று நினைத்தான். தனக்கு தானே தனது காரியங்களை செய்ய அவன் முயற்சி செய்தான். முதலாவதாக சில காலங்களுக்கு அதை அவன் சிறப்பாக தான் செய்தான்.
ஆனால் அவனுடைய வாழ்க்கையிலும் நாள் ஒன்று வந்தது அவன் தூர இடத்திற்கு கல்லூரிக்கு செல்வது போல மாமனாகிய லாபன் வீட்டிற்கு சென்றான் அங்கே லாபான்தான் கல்லூரியின் முதல்வராய் இருந்தார்.
இங்கே அவன் கடினமான முறையில் சில பாடங்களை கற்றுக் கொள்ளப் போகிறான்,அங்கேயும் தமது ஏமாற்றும் திறமையினாலே / தந்திரத்தினாலே பல காரியங்களை பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறான்.
ஆதியாகமம் 25:33-34
’33அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். 34அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம் பண்ணினான்.’
…………………….
இந்தப் பகுதியில் நாம் முக்கியமாய் கவனிக்க வேண்டிய காரியம் என்னவென்றால் ஏசா தன்சேஸ்திர பாதத்தை அலட்சியம் பண்ணினால் என்பது. அவன் விரும்பிய படி அவனுக்கு அப்பமும் கூலும் கிடைத்தது அதை சாப்பிட்டுவிட்டு தனது பிறப்பு உரிமையான சேஷ்டபுத்திர பாதத்தை அற்பம் என்று நினைத்து கொடுத்துவிட்டு போய்விட்டான்.
ஆவிக்குரிய எந்த காரியமும் அவனுக்கு முக்கியமானதாக இல்லை.. என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே இன்று திருச்சபையில் இருக்கும் பலர் ஆவிக்குரிய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது இல்லை. வெளியே சடங்காச்சாரமான சரீர பிரகாரமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆவிக்குரிய காரியங்களை அறிந்து கொள்வதற்கும் அதை சரியாய் புரிந்து கொள்வதற்கும் அதை ஏற்றுக் கொள்வதற்கும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள்.
இதை இன்று நாம் ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்: ஒருவரிடம் அவரது தாத்தா காலத்து பழமையான, மிகவும் மதிப்புமிக்க ஒரு குடும்ப வேதாகமம் (Bible) இருப்பதாக வைத்துக் கொள்வோம். மற்றொரு பேரனுக்கு அது தேவைப்படுகிறது, அதற்காக அவன் கால் டாலர் (25 காசுகள்) தருகிறேன் என்கிறான். அதற்கு அந்த உரிமையாளர், “சரி, அந்த இருபத்தைந்து காசுகளை என்னிடம் கொடு, எப்படியும் இந்த பழைய பொருளை நான் குப்பையில் தான் எறியப்போகிறேன்” என்று சொல்வது போன்றது இது. ஏசா செய்ததும் சரியாக இதுதான்.
அருமையானவர்களே எத்தனை திருச்சபைகளில் பண்டிகை நேரங்களில் ஏற்படும் ஒரு பிரச்சனையால் திருச்சபைகள் உடைந்து போய்க் கொண்டிருக்கின்றன. காரணம் என்ன?? அப்படி சண்டை இடுகிறவர்களுக்கு ஆவிக்குரிய வாழ்க்கை குறித்த எந்த அக்கறையும் இல்லை. தங்கள் சாட்சி வாழ்க்கை குறித்த எந்த கவனமும் இல்லை. வெளிப்படையான அலங்காரம்- அசனம் போன்ற முக்கியமற்ற காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஆவிக்குரிய பண்புகளான அன்பையும்/ பொறுமையையும் /மன்னிப்பையும் இழந்தவர்களாக திருச்சபைகளை நாசம் பண்ணுகிறார்கள்.
ஒரு மனிதன் ஆவிக்குரியவனாய் இருப்பான் என்றால் பரிசுத்த ஆவியானவர் அவனுக்கு கற்றுக் கொடுக்க முடியும். அவனை வழி நடத்த முடியும் .ஆவிக்குரிய காரியங்களை குறித்து ஆழமாய் சிந்திக்க வேண்டிய காலங்களில், அசட்டை செய்வோம் என்றால், ஒரு காலத்தில் அதை வாஞ்சையோடு தேடினாலும் அதை கண்டுபிடிக்க முடியாத ஒரு நிலைமைக்கு நாம் போய் விடுவோம்.
ஒருவனும் வேசிக்கள்ளனாகவும். ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப் போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.
ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணமற்போனான்.”
எனக்கு அருமையான சகோதரனே, சகோதரியே. அப்படிப்பட்ட நேரம் உங்கள் வாழ்க்கையிலே வரும் முன்னதாக ஆவிக்குரிய காரியங்களைக் குறித்து அக்கறையுள்ள வர்களாக வாழுங்கள். இந்தக் காலங்களிலே உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையிலே எந்தக் காரியங்களை மாற்றிக்கொள்ளும்படியாக ஆண்டவர் உங்களோடு பேசுகிறாரோ, அதற்குக் கீழ்ப்படிந்து செயல்பட உங்களை அர்ப்பணியுங்கள். இல்லையென்றால் நீங்கள் நெருக்கப்படும் இன்னொரு சூழ்நிலையிலே மனம்திரும்ப வாஞ்சித்தும் மனமாறு லை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலைமைக்குச் சென்றுவிடுவீர்கள்.
அருமையான பெற்றோரே, உங்கள் குடும்பங்களிலே பிள்ளைகளை பாரபட்சமில்லாமல்
நேசிக்கத் தீர்மானம் பண்ணுங்கள். எந்தப் பிள்ளை தவறு செய்தாலும் தண்டனை கொடுங்கள். எந்தப் பிள்ளை சிறப்பான காரியத்தைச் செய்தாலும் உற்சாகப்படுத்துங்கள். உங்கள் குடும்பம் ஒரு சாட்சியான குடும்பமாக இருக்கட்டும்.
சா மற்றும் யாக்கோபின் வாழ்க்கை வரலாறு நமக்கு ஒரு எச்சரிக்கையையும், ஒரு பாடத்தையும் கற்றுத்தருகிறது.
பொருளாதாரத்தை விட மேலானது ஆன்மீகம்: ஏசா தன்னுடைய பசியெனும் தற்காலிகத் தேவையைத் தீர்க்க, நித்தியமான ‘சேஷ்டபுத்திர பாகத்தை’ (தலைச்சன் உரிமை) ஒருவேளை உணவிற்காகத் தாரை வார்த்தார். இன்று நாமும் உலக இன்பங்களுக்காகவோ, தற்காலிக லாபங்களுக்காகவோ நம்முடைய ஆவிக்குரிய உன்னத நிலையை இழந்துவிடக் கூடாது.
காலத்தின் அருமை: ஏசா பிறகு கண்ணீர்விட்டு அழுது தேடியும் அவனுக்கு மனம் மாறுதலுக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. “காலம் கடந்து சிந்திப்பதை விட, கர்த்தர் பேசும்போதே கீழ்ப்படிவதே” ஒரு விசுவாசிக்கு அழகு. மனம் திரும்புதலுக்கான கதவுகள் திறந்திருக்கும் போதே, நம் ஆவிக்குரிய வாழ்வில் மாற்றங்களைச் செய்ய நாம் அர்ப்பணிக்க வேண்டும்.
பெற்றோரின் பொறுப்பு: ஒரு குடும்பத்தின் சிதைவுக்குப் பாரபட்சம் எவ்வளவு பெரிய காரணமாகிறது என்பதை ஈசாக்கு-ரெபெக்காள் தம்பதியினரின் வாழ்க்கை காட்டுகிறது. பிள்ளைகளைத் தேவனுடைய பார்வையில் சமமாகப் பார்த்து, அவர்களைச் சரியான வழியில் நடத்துவதே ஒரு சாட்சியுள்ள குடும்பத்திற்கு அடையாளம்.
சுருக்கமாகச் சொன்னால்: யாக்கோபைப்போல ஆவிக்குரிய காரியங்களின் மேல் வாஞ்சையுள்ளவர்களாய் இருப்போம்; அதேசமயம் அந்த ஆசீர்வாதத்தைப் பெற குறுக்கு வழிகளை நாடாமல், இறைவனின் காலத்திற்காகக் காத்திருக்கும் பக்குவத்தையும் வளர்த்துக்கொள்வோம்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
