ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 24:1 – 30
நிகழ்ச்சி எண்: 0041
வாசியுங்கள்
பிதாவாகிய தேவனாலும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
இன்று நாம் ஆதியாகமம் 24 :1 – 30 வசனங்களை கற்றுக் கொள்ளப் போகிறோம். இப்பொழுது நாம் ஆதியாகம புத்தகத்தின் இரண்டு முக்கியமான பிரிவுகளிலே இரண்டாவது பிரிவின் முக்கிய ஒரு பகுதிக்குள் வருகிறோம். முதல் பகுதியில் ஒன்று முதல் 11 அதிகாரங்கள் நான்கு முக்கிய நிகழ்வுகளை கையாள்கிறது என்று படித்தோம். இரண்டாவது மற்றும் இறுதி பகுதி 12 முதல் 50 வரை உள்ள அதிகாரங்கள். இதில் நான்கு சிறந்த நபர்களை பற்றி வாசிக்கிறோம். குறிப்பாக ஆதியாகமம் 12 முதல் 23 வரை உள்ள பகுதியில் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமை பார்த்தோம். இப்பொழுது 24 முதல் 26 ஆம் அதிகாரம் வரை உள்ள பகுதியில் நேசகுமாரனாகிய ஈசாக்கை குறித்து படிக்கிறோம். ஈசாக்கின் வாழ்க்கையில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. அவற்றிலே 2 நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம். முதலாவது ஈசாக்கின் பிறப்பு இரண்டாவதாக அவர் ஆபிரகாமால் பலிக்கு ஒப்பு கொடுக்கப்பட்டது. மூன்றாவதாக அவர் மணமகளை பெறுவது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் இருப்பதாக சொல்வார்கள். அதாவது அவனுடைய பிறப்பு திருமணம் மற்றும் இறப்பு. இதில் இரண்டாவது காரியமான திருமணத்தில் மட்டுமே அவனுக்கு தெரிந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கிறது. சில நேரங்களில் அந்த திருமண காரியத்திலும் மனிதனுக்கு தேர்வுகள் அதிகம் இருப்பதில்லை. இருந்தாலும் இவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் மூன்று முக்கிய நிகழ்ச்சிகளாகும்.
ஈசாக்கு எவ்வாறு தனது மணமகளைப் பெற்றார் என்ற சரித்திரத்தை இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். ஈசாக்கிற்கு பெண் தேடுவதற்காக ஆபிரகாம் தனது நம்பிக்கைக்குரிய ஊழியனை மெசொபொத்தேமியாவில் உள்ள ஆரான் தேசத்திற்கு திருப்பி அனுப்புகிறார். அந்த ஊழியன் ரெபெக்காளை மணமகளாக பெறுவதில் அடைந்த வெற்றியை நாம் பார்க்கிறோம்.
இது ஒரு மிக அற்புதமான ஒரு சரித்திரம். அருமையான வாலிப சகோதரனே நீ மணக்க போகும் பெண்ணின் மீது தேவன் அக்கறை கொண்டிருக்கிறார் என்பதையும், அருமையான வாலிப பெண்ணே, நீ திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணின் மீது தேவன் அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பதையும் இது வெளிப்படுத்துகிறது.
தேவன் மனித குலத்திற்கு இரண்டு அமைப்புகளை கொடுத்திருக்கிறார். ஒன்று திருமணம் மற்றொன்று மனிதன் தன்னைத்தானே ஆள தேவன் மனிதனுக்கு கொடுத்திருக்கும் அனுமதி. நான் கூறிய இரண்டும் உலகளாவிய மற்றும் மிக முக்கியமான அமைப்புகள். இவை சிதைக்கப்படும் பொழுது ஒரு சமூகம், ஒரு சமுதாயம் சீர்குலையும். எந்த ஒரு சமுதாயத்திற்கும் குடும்பமே முதுகெலும்பாய் இருக்கிறது. அதை தேவன் அறிந்திருக்கிறார். அதனால் சமுதாயத்திற்கு வலிமையையும் ஸ்திர தன்மையையும் கொடுக்கும் நோக்கத்திலேதான் அவர் திருமணத்தை ஏற்படுத்தினார்.
தன்னைத்தானே ஆண்டுகொள்ள தேவன் கொடுத்திருக்கும் அமைப்பின்படி மனித உயிரைப் பாதுகாப்பதற்காக ஒரு மனித உயிரை எடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு இருக்க வேண்டும். அதுவே அதின் நோக்கம். மனித உயிர் புனிதமானது என்பதால் தேவன் அத்தகைய சட்டங்களை கொடுத்தார்.
அருமையானவர்களே நீங்கள் திருமணம் செய்யாத ஒரு சகோதரனாய் அல்லது சகோதரியாய் இருப்பீர்கள் என்றால் உங்களுடைய திருமணத்தை குறித்தும் தேவன் அக்கறை உள்ளவராய் இருக்கிறார் என்பதை இந்த நேரத்தில் நான் நினைப்பூட்ட விரும்புகிறேன். அது மட்டுமல்ல உங்கள் குடும்ப உறவிலும் நீங்கள் தேவனோடு இணைந்து செயல்படும் பொழுது அது அற்புதமானதாய் இருக்கும்.
இங்கு உள்ள முக்கியமான கருத்து என்ன தெரியுமா? தேவன் உங்கள் வாழ்க்கை சரித்திரத்தில் ஆர்வம் காட்டுகிறார். அதில் நீங்கள் தேவனை முன் வைக்கும் பொழுது அது மிகவும் அற்புதமாகிறது. நம்முடைய கர்த்தர் செய்த முதல் அற்புதம் கலிலேயாவில் உள்ள கானாவூர் திருமணத்தில் தான் நடந்தது. அவர் எத்தனை திருமணங்களுக்கு சென்றார் என்று நமக்கு தெரியாது. ஆனால் அவர் அந்த திருமணத்திற்கு சென்றார் என்பது நமக்கு வேதத்திலே பதிவாகி இருக்கிறது.
ஆதியாகமத்தின் 24 ஆம் அதிகாரம் தேவனுடைய வார்த்தையின் மிகவும் செழுமையான பகுதிகளில் ஒன்று என்று சொல்லலாம். ஏனென்றால் இது ஆரம்ப காலத்திலேயே நிகழ்ந்த ஒரு அற்புதமான அன்பின் கதையை சொல்லுகிறது. ஈசாக்கிற்கு மணமகளை தேடிய விதம் குறித்த ஒரு ஆச்சரியமான சரித்திரம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு அற்புதமான ஆன்மீக சித்திரமும் இங்கே நமக்கு கொடுக்கப்படுகிறது. இந்த அதிகாரத்தை படிக்கும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய இரண்டு காரியங்கள் இருக்கின்றன ஒன்று இதில் சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கையின் அனைத்து விபரங்களையும் கர்த்தர் நடத்திய விதம்/, தேவன் எவ்வாறு வழிநடத்தினார்/, என்பது குறிப்பிடத்தக்க ஒரு அறிக்கை. மீண்டும் மீண்டும் அது இங்கே சொல்லப்படுகிறது. அந்த ஆரம்ப கால சமூக சூழலிலும் கூட தேவனை நோக்கி பார்த்து அவருடைய வழிநடத்துதலை பின்பற்றியவர்கள் இருந்தார்கள்.
மனிதன் குகைகளில் வாழ்ந்த நாகரீகமற்ற கற்காலத்தில் இது நடந்தது என்று சிலர் நம்மை நம்ப வைக்க முயற்சிக்கலாம். ஆனால் ஒருபோதும் அதை நீங்கள் நம்ப வேண்டாம். மனிதன் தொடக்கத்தில் அத்தகையவனாக இருக்கவில்லை என்பதை இந்த பதிவு காட்டுகிறது. இங்கே நாம் தேவனுடைய வழிநடத்துதலைப் பார்க்கிறோம் தேவன் இவர்களுடைய வாழ்க்கையை வழிநடத்த முடிந்தது என்றால் அவர் உங்கள் வாழ்க்கையையும் என் வாழ்க்கையையும் இன்றைக்கும் வழிநடத்த முடியும். இந்த அதிகாரத்திலே நாம் கவனிக்க வேண்டிய இரண்டாவது காரியம் அந்த ஊழியனுடன் சென்று ஈசாக்கின் மணமகளாக மாற ரெபேக்காள் எடுத்த நேர்மையான மற்றும் உறுதியான முடிவு. இது ஒரு மகத்துவமான காரியம் இதை இந்த வேத பகுதியின் மூலமாக நாம் கற்றுக் கொள்ளலாம்.
ஆதியாகமம் 24:1
[1] ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்து வந்தார்.
…………….
கவனித்தீர்களா? ஆபிரகாம் எப்பொழுது முதிர்ந்த வயதை அடைந்திருக்கிறார்?? கர்த்தர் அவரை எல்லா காரியங்களிலும் ஆசீர்வதித்து இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தனது குமாரனாகிய ஈசாவிற்கு ஒரு மணமகளை தேடுவதில் ஆபிரகாம் மிகுந்த கவனம் செலுத்துகிறார். ஆனால் தேவனை அறியாத கானானியர் மத்தியிலே ஈசாக்குக்கு பெண் கொள்ள விரும்பாமல் தனது சொந்த மக்கள் இருக்கும் இடத்திற்கு ஆபிரகாம் தனது வேலைக்காரனை அனுப்புகிறார்.
ஆதியாகமம் 24:2
[2] அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி:
…………………..
இங்கே நாம் பார்ப்பது போல ஆபிரகாம் தன் வீட்டில் உள்ள வயதில் மூத்த ஊழியக்காரனோடு பேசுகிறார். இந்த ஊழியக்காரன் எலியேசர் என்று நான் நினைக்கிறேன். இவர் தான் ஆபிரகாமின் வீட்டில் உள்ள எல்லாவற்றிற்கும் அதிபதியாக இருந்த ஒரு ஊழியக்காரன். ஊழியக்காரனை குறித்து ஏற்கனவே அவர் தேவனிடத்தில் ஒரு முறை பேசினார். ஞாபகம் இருக்கிறதா இல்லை என்றால் ஆதியாகமம் 15 2 , 3 வசனங்களை வாசித்து பாருங்கள்.
ஆதியாகமம் 15:2-3
[2] அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். [3] பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
………………….
என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே உங்கள் குடும்பத்தில் திருமண வயதிலேயே உங்களுக்கு ஒரு மகனோ, அல்லது மகளோ இருப்பார்கள் என்றால் அவர்கள் கானானியர் மத்தியிலே தங்கள் வாழ்க்கைத் துணையை எடுக்கக் கூடாது என்பதை குறித்து நீங்கள் கருத்தாய் ஜெபிக்க வேண்டும். ஏனென்றால் இந்த கானானியர்கள் எப்பொழுதும் நம்மைச் சுற்றி இருக்கிறவர்கள் அப்படிப்பட்டவர்களோடு நம்முடைய பிள்ளைகள் திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்பு இன்று மிக அதிகமானதாக இருக்கிறது. அவர்கள் அப்படி செய்வார்கள் என்றால் பிசாசானவனை தங்களுடைய மாமனாராக பெற்றுக் கொள்வார்கள். அவன் மூலமாய் தொடர்ந்து அவர்களுக்கு பிரச்சனை தான் வரப்போகிறது.
ஆதியாகமம் 24:4-6
[4] நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான். [5] அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான். [6] அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.
……………………..
கவனித்தீர்களா? அந்நாட்களில் ஒருவருக்கொருவர் வாக்கு கொடுத்துக் கொண்டார்கள்.
அவர்கள் வலது கையை உயர்த்துக் கொண்டு, இடது கையை வேத புத்தகத்தின் மேலே வைத்து வாக்கு கொடுக்கவில்லை. சொல்லப் போனால் அந்நாட்களில் வேத புத்தகமே அவர்களுக்கு இல்லை. வேத புத்தகத்தின் மேல் கையை வைத்து நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்று சத்தியம் பண்ணுவது சரியானது அல்ல. அவன் பொய் சொல்ல வேண்டும் என்று நினைப்பான் என்றால் இவ்வாறு கையை வைத்து வாக்கு கொடுத்த பின்னும் அவன் பொய் சொல்வான்.
அந்த நாட்களிலே வாக்கு கொடுக்கும் பொழுது யாருக்கு வாக்கு கொடுக்கிறார்களோ அவர்களின் தொடையின் கீழே கையை வைத்து வாக்கு கொடுத்தார்கள். ஐந்தாம் வசனத்திலே நாம் பார்க்கிறது போல அந்த பெண் என் பின்னே, இந்த தேசத்திற்கு வர மனதில்லாதிருந்தால் நீ விட்டு வந்து தேசத்துக்கு தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப் போக வேண்டுமா என்று கேட்டான். அதற்கு ஆபிரகாமின் பதில் என்ன?
நீ என் குமார்னை மறுபடியும் அங்கே அழைத்துக் கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாய் இரு என்று கூறுகிறார். அதாவது நீ அங்கே அவனை அழைத்துக் கொண்டே போகக்கூடாது என்பதுதான் பதில். இதுதான் தேவன் என்னிடத்திலும் உங்களிடத்திலும் எதிர்பார்க்கிற காரியம். விட்டு வந்த காரியங்களுக்கு திரும்பச் செல்லக்கூடாது.
ஆதியாகமம் 24:7
[7] என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்துவந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்.
…………………
ஆபிரகாம் உண்மையிலேயே ஒரு விசுவாசத்தின் மனிதர் அவர் அதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். இங்கும் அவர் மிகச்சிறந்தவராக திகழ்கிறார் பாருங்கள். அவர் இந்த ஊழியக்காரனிடத்திலே இந்த வேலை காரியமாய் உன்னை வழிநடத்த நீ தேவனை நம்பலாம். தேவன் எனக்கு இதை வாக்கு அளித்திருக்கிறார் என்று கூறுகிறார். ஆபிரகாம் இருட்டில் ஒரு பாய்ச்சலை மேற்கொள்ளவில்லை. விசுவாசமென்பது இருட்டில் பாய்வது அல்ல. அது தேவனுடைய வார்த்தையின் மீது நிலைத்திருக்க வேண்டும்.
இன்றைக்கு பலர் நான் தேவனை நம்புகிறேன் அது நடக்கும் என்று சொல்கிறார்கள். அது நல்லது தான். நீங்கள் தேவனை நம்புவது அற்புதம். ஆனால் அவரிடத்தில் இருந்து உங்களுக்கு ஏதாவது எழுத்துப்பூர்வமாக இருக்கிறதா?? ஆபிரகாம் அதை எப்பொழுதும் எழுத்துப்பூர்வமாக கேட்டார். அவரிடம் தேவனிடத்தில் இருந்து அதை எழுத்துப்பூர்வமாக இருந்தது. எப்படி தேவன் அவரோடு ஒரு உடன்படிக்கை செய்திருந்தார். ஆபிரகாம் உண்மையில் என்ன சொல்கிறார் என்றால் என் சந்ததியாகிய ஈசாக்கின் மூலமாக உலகத்திற்கு ஒரு ஆசீர்வாதத்தை கொண்டு வரப் போவதாக தேவன் எனக்கு வாக்குறுதி அளித்திருக்கிறார். நீங்கள் ஒரு காரியத்திலே உறுதியாக இருக்கலாம். ஈசாக்கிற்காக அங்கே தேவன் ஒரு மணமகளை வைத்திருக்கிறார் என்கிறார்.
அருமையானவர்களே, தேவன் சொன்னதின் மீது ஆபிரகாம் சார்ந்து நிற்கிறார். இன்று நாம் முட்டாள்தனமாக இருக்க வேண்டிய அவசியமே இல்லை. விசுவாசம் என்பது முட்டாள்தனம் அல்ல. அது ஏதோ ஒன்றின் மீது/ ஒரு ஆதாரத்தின் மீது நிலைத்திருப்பது. அது எப்பொழுதும் அறிவுப்பூர்வமானது. அது ஒருபோதும் இருட்டில் பாயும் ஒரு செயல் அல்ல. இது நடக்கும் அல்லது அது நடக்கும் என்று உங்கள் வாழ்க்கையை பந்தயம் கட்டுவது விசுவாசமல்ல. இது ஒரு சூதாட்டம் அல்ல. இது உறுதியான காரியம். விசுவாசமே உண்மையான உறுதியான காரியம். பிரியமானவர்களே ஆபிரகாம் உறுதியாக இருக்கிறார். ஆண்டவர் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை நீங்கள் மனதில் கொண்டவர்களாய் உறுதியோடு விசுவாசத்தோடு காத்திருக்கிறீர்களா? கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
ஆதியாகமம் 24:8
[8] பெண் உன் பின்னே வர மனதில்லா திருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கே மாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக் கொண்டு போகவேண்டாம் என்றான்.
………………….
ஆபிரகாம் இங்கே என்ன சொல்கிறார்?? என் மகனை ஒரு பொழுதும் அங்கே திரும்ப அழைத்துச் செல்லாதே. ஆனால் அந்தப் பெண் வரவில்லை என்றால் நீ இந்த ஆணைக்கு நீங்கலாய் இருப்பாய்/ – இதற்கு என்ன அர்த்தம்? அது மிகவும் எளிமையானது. ஆபிரகாம் அந்த வேலைக்காரனிடம் என்ன அர்த்தத்தில் அதைச் சொல்லி இருப்பார் என்று நினைக்கிறீர்கள்? – இதை செய்து முடிக்க தேவனிடம் வேறொரு வழி இருக்கிறது. அது என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மகன் ஒரு தேவபக்தியற்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதை நான் விரும்பவில்லை என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன் என்ற எண்ணத்தில் தான் அவ்வாறு கூறியிருப்பார்.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே / இதுதான் விசுவாசம் என்பது. விசுவாசம் தேவனுடைய வார்த்தையின் படி செயல்படுவதாகும். விசுவாசம் ஏதோ ஒன்றின் மேல் நலைத்திருக்கிறது. …….
ஊழியர் ஒருவர் தன்னுடைய அனுபவத்தை இவ்வாறு கூறியிருக்கிறார் விவர்ணன் மகி என்ற அந்த ஊழியர் பல ஆண்டுகளாக புற்று நோயோடு ஊழியம் செய்து வந்தார். குணமடைய வேண்டும் என்ற விருப்பம் அதிகமாக அவருக்கு இருந்தது. ஆனால் அவருக்கு விசுவாச குணமளிப்பதில் நம்பிக்கையில்லை என்று சொல்ல முடியாது. அதில் அவருக்கு நம்பிக்கை உண்டு.- இருந்தாலும் நான் தேவனை கட்டாயப்படுத்த முடியும் என்றும் / நான் கேட்டால் தேவன் என்னை குணப்படுத்துவார் என்றும் என்னிடம் யாரும் சொல்ல வேண்டாம் என்று சொல்லுகிறார். அவருடைய சித்தம் என்னவென்று எனக்கு தெரியாது ஆனால் அவருடைய சித்தம் எதுவோ அதுவே நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று சொல்லி இருக்கிறார். ஆம் அருமையானவர்களே, நாம் நம்முடைய தேவைகளை தேவனிடத்தில் கொண்டுவர வேண்டும் என்று தான் தேவன் விரும்புகிறார். ஆனால் நம்முடைய ஜெபங்களுக்கு அவர் எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். ஆபிரகாம் எதில் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை அறிந்திருந்தார். அவர் தேவனிடம் எதையும் வற்புறுத்த வில்லை. அவர் சொல்வது என்ன இது நடக்காவிட்டால் இதை செய்து முடிக்க தேவனிடம் வேறொரு வழி இருக்கிறது என்பதே.
ஆதியாகமம் 24:9
[9] அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக் குறித்து அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான்.
………………….
ஏற்கனவே நாம் பார்த்தது போல அந்த கால வழக்கப்படி அந்த ஊழியக்காரன் ஆபிரகாம் இடத்திலே ஆணையிட்டுக் கொண்டு ஈசாக்குக்கான பெண்ணை தேட புறப்பட்டு போவதை கவனியுங்கள்.
ஆதியாகமம் 24:10
[10] பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து,
……………………..
ஈசாக்கிற்குப் பெண் தேடி மெசொப்பொத்தேமியாவுக்குச் செல்லும் அந்த வேலைக்காரன், தன்னுடன் பத்து ஒட்டகங்களைக் கூட்டிக் கொண்டு போகிறான். அதன் பொருள், யாரோ சிலர் அவற்றின் மீது ஏறிச் சென்றிருக்க வேண்டும் என்பதாகும். அவர் தன்னுடன் வேலைக்காரர்கள் அடங்கிய ஒரு பெரிய குழுவையே அழைத்துச் சென்றார் என்று நாம் எடுத்துக் கொள்ளலாம். ( திரையில் வேலைக்காரன் பயணம் செய்த பாதை )
பாருங்கள் அவனுடைய எஜமானின் சகல சொத்துக்களும் அவன் கையில் இருந்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஆபிரகாமின் அனைத்து அசையும் சொத்துக்களும் உடைமைகளும் எலியேசர் பொறுப்பிலே இருந்தது என்று சொல்லலாம்.
ஆதியாகமம் 24:11
[11] ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்:
………………..
இங்கே நாம் வாசிப்பது போல பெண்கள் தண்ணீர் இறைக்க வெளியே வந்தது உங்களுக்கு விசித்திரமாக தெரியலாம். ஆனால் அந்த நாட்களில் ஒட்டகங்களுக்கு தண்ணீர் ஊற்றும் வேலையையும் அவர்களை செய்து வந்திருக்கிறார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இந்த காலத்தை விட அந்த நாட்களில் பெண்கள் அதிக வேலைகளை செய்திருக்கிறார்கள். அதாவது கடினமான உடல் உழைப்பை பற்றி சொல்லுகிறேன். கால்நடைகளுக்கு தண்ணீர் ஊற்றுவதும், அவற்றை பராமரிப்பதும் பெண்களாகவே இருந்தனர். ஆண்கள் வியாபாரம் செய்யவும் மற்ற வேலைகளை செய்யவும் வெளியே சென்று இருப்பார்கள். அவர்கள் எப்பொழுதும் சோம்பேரிகளாக திரிந்தார்கள் என்று இதற்கு பொருள் அல்ல. ஆனால் அந்த நாட்களில் பெண்கள் தண்ணீர் இறைக்க வெளியே செல்வது ஒரு வழக்கமாக இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். இது சுவாரஸ்யமான ஒன்று. அந்த இடத்தில் வசிப்பவர்களுக்கு முன்- ஒரு அந்நியராக தனது ஒட்டகங்களுக்கு தண்ணீர் காட்டுவது சரியான முறையல்ல என்பதால் அந்த வேலைக்காரன் காத்திருக்கிறான்.
கவனித்தீர்களா?? இந்த வேலைக்காரனும் தேவனையே சார்ந்து இருக்கிறான். ஆபிரகாம் இவை அனைத்தையும் கர்த்தருடைய கைகளிலே ஒப்படைத்து இருந்தார். இப்பொழுது அந்த வேலைக்காரனும் அவ்வாறே கர்த்தர் செயல்பட காத்திருக்கிறான்.
ஆதியாகமம் 24:12-14
[12] என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவு செய்தருளும். [13] இதோ, நான் இந்தத் தண்ணீர்த்துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப்புறப்பட்டு வருவார்களே. [14] நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்கவேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளா யிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான்.
………………….
அந்த வேலைக்காரனின் ஜெபம் எப்படி இருந்தது கவனித்தீர்களா? இந்த நகரத்து மனிதர்களின் பெண்கள் வெளியே வருவார்கள் – அவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு தெரியவில்லை – யாராவது ஒருவரை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு என்னிடமே விடப்பட்டுள்ளது / நான் யாரை தேர்ந்தெடுக்கிறேனோ அவளே தேவன் தேர்ந்தெடுத்தவளாக இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன் என்று கூறுகிறார்.
அவர் யாரைத் தேர்ந்தெடுப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவனும் ஒரு மனிதன்தான். எனவே வெளியே வரும் பெண்களில் மிக அழகான பெண்ணையே அவன் தேர்ந்தெடுக்கப் போகிறான். இதில் நீங்கள் ஒரு காரியத்திலே உறுதியாக இருக்கலாம். ரெபேக்காள் மிகவும் அழகான பெண்ணாக இருந்தாள். அழகு என்பது பிசாசிடமிருந்து வருவது என்ற ஒரு கருத்து பியூரிட்டன் என்ற மக்கள் கூட்டத்தில் இருந்தது. பிசாசு அழகானவன். அவன் ஒரு ஒளியின் தூதன் . ஆனால் அவனிடத்தில் எல்லாம் இல்லை எல்லாவற்றிற்கும் மேலாக தேவனே படைத்தவர் அவர் உருவாக்காத ஒரு சூரிய அஸ்தமனத்தையோ அல்லது ஒரு அழகான மலரையோ நீங்கள் பார்த்திருக்க முடியாது. அவர் பெண்களையும் அழகாக படைக்கிறார் அதில் எந்த தவறும் இல்லை. வெளியே வரும் பெண்களிலே மிக அழகன பெண்ணைத்தான் இந்த மனிதன் தேர்ந்தெடுத்து இருப்பார். என்று நம்பலாம் அப்படி அவர் செய்யவில்லை என்றால் அவர் ஒரு திறமையற்ற ஊழியர் ஆகவே இருப்பார்.
ஆதியாகமம் 24:15-16
[15] அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாகிய பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்தாள். [16] அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள்.
…………………….
நான் வாசித்ததை கவனித்தீர்களா? ஆம் ரெபெக்காள் பார்க்க அழகாக இருந்தாள். அருமையான சகோதர சகோதரிகளே கர்த்தருடைய வார்த்தையே இதை நமக்கு சொல்லுகிறது. அதில் எந்த தவறும் இல்லை. இன்று சினிமா உலகமோ மற்றும் பிசாசோ அழகை தங்களுக்கு சொந்தம் ஆக்கிக் கொள்வதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. கர்த்தருக்கும் அதில் பங்கு உண்டு. ஆரம்பத்தில் அழகை படைத்ததே அவர்தான். எனவே ஒரு அழகான நபரை கர்த்தர் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. இன்றும் தேவன் அழகான ஆண்களையும் பெண்களையும் தம்முடைய ஊழியத்திற்கு அழைக்க வேண்டும் என்று நான் எப்பொழுதும் ஜெபிக்கிறேன் என்று ஒரு ஊழியர் எழுதியிருக்கிறார்.
ரெபெக்காள் பார்ப்பதற்கு மிகவும் அழகானவளாக இருந்தாள். அவள் ஒரு சாதாரண பெண் மட்டுமல்ல, ஒரு அழகு போட்டியில் கலந்து கொண்டிருந்தால் அவளே வெற்றியும் பெற்றிருப்பாள். அவள் கன்னிப் பெண்ணாகவும் – எந்த ஒரு புருஷனையும் அறியாதவளுமாக இருந்தாள் என்று பார்க்கிறோம்.
ஆதியாகமம் 24:17-19
[17] அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான். [18] அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். [19] கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றுசொல்லி;
………………………
ரெபெக்காள் மிகவும் பண்பானவள், மற்றும் மரியாதையானவள் என்பதையும் நாம கவனிக்க வேண்டும். அவள் அழகானவள்/ புத்திசாலியானவள்.
அது மட்டுமல்ல அவள் மிகவும் கண்ணியமானவள்.
வசனம் 20
ஆதியாகமம் 24:20
[20] சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.
……………………
கவனித்தீர்களா? அங்கே பத்து ஒட்டகங்கள் இருந்தன. இதை நாம் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். அந்த ஒட்டகங்கள் எப்பொழுது கடைசியாக தண்ணீர் குடித்தனவோ? அதாவது தங்கள் உடலில் உள்ள தங்கள் தண்ணீர் தொட்டிகளை எப்பொழுது நிரப்பிவொ என்று நமக்கு தெரியாது.
ஆதியாகமம் 24:21
[21] அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான்.
……………………
அங்கே அந்த ஊழியர் ஆச்சரியத்தில் அப்படியே திகைத்துப் போய் நிற்கிறார். இதுதான் அந்த அடையாளமா? என்றும் / தேவன்தான் இதையெல்லாம் வழி நடத்துகிறாரா? இல்லையா? என்றும் வியந்து கொண்டிருக்கிறார். ஆனால் தேவன்தான் வழி நடத்துகிறார் என்று அவர் நம்புகிறார்.
ஆதியாகமம் 24:22-24
[22] ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக்கொடுத்து, [23] நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான். [24] அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி,
…………………….
இந்த நாகோர் யார்? ஆதியாகமம் 11:27ல் நாம் பார்ப்பது போல இவர் ஆபிரகாமுடைய ஒரு சகோதரன்.
ஆதியாகமம் 24:25-26
[25] எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள். [26] அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்து கொண்டு,
…………………….
ஆபிரகாமின் வேலைக்காரன் இந்த காரியங்களில் எல்லாம் தேவனுடைய கரத்தை பார்க்கிறான். தேவன் நம்மை வழிநடத்திச் செல்வது எத்தனை அற்புதமான ஒரு காரியம் இல்லையா?
ஆதியாகமம் 24:27
[27] என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம் பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டு வந்தார் என்றான்.
…………………..
“இங்கே ஒரு அற்புதமான வாக்கியம் இருக்கிறது: ‘நான் வழியில் இருக்கையில்; கர்த்தர் என்னை வழிநடத்தினார்….’ஆம் வழியில் இருக்கிறவர்களை, அதாவது அவருடைய வழியில் இருக்கிறவர்களையும்,/ வழிநடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறவர்களையும்,/ அவரால் வழிநடத்தப்பட ஒப்புக்கொடுக்கிறவர்களையும்,/ அவர் எதைச் செய்ய விரும்புகிறாரோ அதைச் செய்கிறவர்களையும்/ கர்த்தர் வழிநடத்துகிறார். ஒரு மனப்பூர்வமான இதயத்தை தேவன் எப்போது வேண்டுமானாலும் வழிநடத்த முடியும்.”
ஆதியாகமம் 24:28-29
[28] அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள். [29] ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையிலே இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான்.
…………………
இந்த இடத்திலிருந்து நாம் மாமாவான லாபானையும் கவனிக்க வேண்டும் தொடர்ந்து வரும் பகுதியிலும் இவருடைய செயல்களை நாம் கவனிக்க வேண்டும். அவர் உலகப் பொருட்களால் பெரிதும் கவரப்பட்டார் என்று சொல்லலாம். தொடர்ந்து என்ன நடக்கிறது பாருங்கள்.
ஆதியாகமம் 24:30
[30] அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான்.
………….,…………..
ரெபெக்காளின் வீட்டிற்குள் யாராவது தன்னை அழைத்துச் செல்வார்களா? தனக்கு அங்கு உண்மையாகவே வரவேற்பு கிடைக்குமா? இல்லையா? என்று பார்ப்பதற்காக ஆபிரகாமின் ஊழியக்காரர் அந்த கிணற்று அருகிலேயே காத்திருந்தார். அந்த மோதிரங்களை லாபான் பார்த்தவுடனேயே – அங்கே வந்திருப்பது ஒரு மிகப்பெரிய செல்வந்தர் என்பதை அவர் புரிந்து கொண்டார். மாமா லாபான் லாபகரமான எந்த ஒரு வாய்ப்பையும் தவற விடுபவர் அல்ல. ஒருவேளை இப்பொழுது நான் சொல்வதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் பின்னால் யாக்கோபை கேட்டுப் பாருங்கள். லாபான் ஒரு கைதேர்ந்த வியாபாரி என்பதை யாக்கோபு கண்டு கொண்டார். சொல்லப் போனால் யாக்கோபை விட அவர் ஒரு சிறந்த வியாபாரியாக இருந்தார்
எனவே லாபன் அந்த ஊழியரை வரவேற்க வெளியே வருகிறார்.
அன்பானவர்களே, ஆபிரகாமின் ஊழியக்காரன் மேற்கொண்ட இந்தப் பயணம் வெறும் ஒரு மணமகளைத் தேடும் பயணம் மட்டுமல்ல, அது தேவனுடைய கரம் ஒரு மனிதனின் வாழ்வை எவ்வளவு துல்லியமாக வழிநடத்துகிறது என்பதற்கான ஒரு உன்னதச் சித்திரம். இந்தச் சரித்திரப் பகுதியிலிருந்து நாம் மூன்று முக்கியமான ஆவிக்குரிய சத்தியங்களைக் கற்றுக்கொள்ளலாம்:
ஆபிரகாம் தன் ஊழியக்காரனிடம், “தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார்” என்று உறுதியாகக் கூறினார். விசுவாசம் என்பது இருட்டில் பாய்வதல்ல; அது தேவன் கொடுத்த வாக்குத்தத்தத்தின் மீது உறுதியாகக் காலூன்றி நிற்பது. நம்முடைய வாழ்க்கையிலும், “தேவன் சொன்னால் அது நடக்கும்” என்ற அந்த அசைக்க முடியாத விசுவாசம் இருக்குமானால், இக்கட்டான சூழல்களிலும் தேவன் நமக்காக ஒரு வழியைத் திறப்பார்.
2 .அந்த ஊழியக்காரன் சொன்ன ஒரு வார்த்தை மிகவும் முக்கியமானது: “நான் வழியில் இருக்கையில், கர்த்தர் என்னை வழிநடத்தினார்.” நாம் சோம்பேறியாக உட்கார்ந்து கொண்டு வழிகாட்டுதலை எதிர்பார்ப்பதை விட, தேவனுடைய சித்தத்தின்படி நம் கடமைகளைச் செய்யப் புறப்படும்போது, ஒவ்வொரு அடியிலும் கர்த்தர் நம்மைச் சரியான இடத்திற்குத் திருப்புவார். நீங்கள் ஒரு மாணவனாய், வாலிபனாய் அல்லது குடும்பத் தலைவனாய் உங்கள் பொறுப்புகளைச் செய்யும்போது, கர்த்தர் உங்களோடு கூடவே இருக்கிறார்.
: திருமணம் என்பது வெறும் மனித விருப்பம் சார்ந்தது மட்டுமல்ல, அது தேவன் ஏற்படுத்திய பரிசுத்தமான அமைப்பு. ஈசாக்கிற்கு ஒரு ரெபெக்காளை ஆயத்தம் செய்தது போல, உங்களை நேசிக்கிற தேவன் உங்கள் வாழ்க்கைத்துணையைத் தெரிவு செய்வதிலும், உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திலும் மிகுந்த அக்கறை உள்ளவராக இருக்கிறார். உலகத்தின் “கானானிய” கலாச்சாரங்களுக்கு இடம் கொடுக்காமல், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நாம் எடுக்கும் முடிவுகள் நம்மை ஆசீர்வாதமாக மாற்றும்.
ஜெபம்: அன்புள்ள பிதாவே, ஆபிரகாமின் ஊழியக்காரனை வழிநடத்தியது போல, என் வாழ்வின் ஒவ்வொரு சிறு காரியத்திலும் உம்முடைய வழிநடத்துதல் இருக்கட்டும். நான் என் சுயபுத்தியைச் சாராமல், உம்முடைய வார்த்தையின் மீது விசுவாசம் வைத்து நடக்க எனக்கு கிருபை தாரும். என் குடும்பம், எதிர்காலம் மற்றும் பிள்ளைகளின் வாழ்வை உம்முடைய கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். ஆமென்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
