ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 19: 4 – 20:18
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 19: 4 – 20:18
நிகழ்ச்சி எண்: 0037

வாசியுங்கள்

அருமையானவர்களே இன்று நாம் ஆதியாகமம் 19 ஆம் அதிகாரம் 4 வசனம் முதல் 20 ஆம் அதிகாரம் 18 ஆம் வசனம் வரைக்கும் கற்றுக் கொள்ளப் போகிறோம்.
ஆதியாகமம் 19:4-5
[4] அவர்கள் படுக்கும்முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர் முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, [5] லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள்.
…………………..
கவனித்தீர்களா? இது சோதோம் நகரத்தின் சீர் கேட்டை வெளிப்படுத்தும் ஒரு அருவருப்பான காட்சி. அந்த நாள் முதல் இன்று வரை இந்தப் பாவத்திற்கு சூட்டப்பட்டிருக்கிற பெயர் சோடோமி என்பது. ஆனால் சோதோம் பட்டணத்தில் இப்படிப்பட்ட மக்களுக்காக ஒரு சபையை நடத்தி அவர்கள் இந்த செயலை செய்த போதிலும் அவர்கள் செய்வது சரிதான் என்று சொல்லும் முயற்சி அங்கே எடுக்கப்படவில்லை. தேவனுடைய வார்த்தை இதில் மிகத் தெளிவாகச் சொல்கிறது அதை நீங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. அந்தப் பட்டணத்தின் பாவம் மிகப்பெரிய பாவம். பயங்கரமான ஒரு பாவம்.
லோத்து சோதோம் நகரத்திற்குள் சென்றபோது அது எத்தகைய நகரம் என்பதை அவர் உணரவில்லை. அங்கே சென்ற பின்னர்தான் / அங்குள்ள மக்களின் ஒழுக்க கேடு அன்றாட வழக்கமாக இருந்ததை அவர் பார்த்தார். இப்படிப்பட்ட சூழலில்தான் அவர் தனது பிள்ளைகளை வளர்த்தார்.
முதலில் அவர் சோதோமை நோக்கி தன் கூடாரத்தை போட்டபொழுது அங்கு இருந்த அழகான தெருக்களையும் பூங்காக்களையும் பொது கட்டடங்களையும் பார்த்தார். மக்களை அவர் பார்த்தார், ஆனால் அவர்களின் உண்மையான நிலையை அவர் பார்க்கவில்லை. இந்த நகரத்தின் பாவம் எவ்வளவு பெரியது என்றால் தேவன் இப்பொழுது அதை நியாயம் தீர்க்க போகிறார் – தேவன் அந்த நகரத்தை அழிக்கப் போகிறார்

இங்கே நாம் தெளிவான ஒரு கோட்டை வரைய வேண்டும். இன்று பாவத்தைப் பற்றிய புதிய அணுகுமுறை ஒன்று உலகத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் நாம் கருப்பாக அதாவது மிக மோசமாக நினைத்த பாவம் இன்று அப்படி இல்லை என்பது போன்ற ஒரு சாம்பல் நிறப் பகுதி / ஒரு குழப்பமான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. திருச்சபை இப்பொழுது பரிதாபகரமாக சமரசம் செய்து கொண்டிருக்கிறது. மேல்நாடு ஒன்றிலே இப்படிப்பட்ட ஓரின செயற்கையாளர்களால் ஆன ஒரு சபை இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. ஆச்சரியம் என்னவென்றால் அந்த சபையின் போதகரும் அப்படியே இருக்கிறார் என்று அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். பிரியமானவர்களே சோதோம் மற்றும் கொமோராவின் பாடம் இந்த தலைமுறைக்கான பாடம். தேவன் இப்படிப்பட்ட ஒரு சபையை ஏற்றுக் கொள்வதில்லை.
நீங்கள் தேவனுடைய பிள்ளையாக மாறினாலும் பாவத்திலேயே தொடரலாம் என்பது இன்றைய கருத்தாக தோன்றுகிறது. இது சாத்தியமற்றது என்று தேவன் சொல்லுகிறார். நீங்கள் அப்படி செய்ய முடியாது. இதற்கு சோதம் நகரம் ஒரு எடுத்துக்காட்டு. பவுல் ஒரு கேள்வியை கேட்கிறார், கவனியுங்கள்.
ரோமர் 6:1-2
[1] ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. [2] பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்?
……………………
அருமையானவர்களே நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்து கொண்டே பாவத்தில் தொடரலாம் இந்த எண்ணம் ஒரு மிகப்பெரிய தவறு. குறிப்பாக இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலே அதை ஒரு பொருட்டாக கருதாமல் இருப்பது இன்னும் பெரிய தவறு.
சோகம் மற்றும் கொமோராவின் மக்கள் இதைத்தான் அன்றைக்கு செய்து கொண்டிருந்தார்கள். அதனால் தேவன் அந்த நகரங்களை அழித்தார். ஆதியாகமத்தில் தேவனைப் பற்றிய ஒரு பழமையான பார்வைதான் இருந்தது, இன்று நம்மிடத்தில் சிறந்த பார்வை இருக்கிறது என்று நாம் சொல்ல முடியாது. இயேசு பாவிகளை ஏற்றுக் கொண்டாரே என்று நீங்கள் வாதாட முடியாது. அவர் நிச்சயமாக ஏற்றுக்கொண்டார். ஆனால் அவர் அவர்களை ஏற்றுக் கொண்ட பின் அவர்களை மாற்றினார். அவரிடம் வந்த விபச்சார பெண் அதற்குப்பின் அந்த தொழிலில் ஈடுபடவில்லை. அவள் தேவனிடம் வந்த பொழுது மாறினாள். மற்ற பாவிகளுக்கும் இதுதான் நடைபெற்றது. ஒரு ஆயக்காரன் இயேசுவிடத்திலே வந்தான் அவன் தனது சுங்கச்சாவடியை விட்டு வெளியேறினான். அவன் கர்த்தரிடத்தில் வந்த பொழுது தனது வஞ்சகமான வழிகளை விட்டு விட்டான். என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே நீங்களும் கிறிஸ்துவிலும் வந்திருந்தால் நீங்கள் மாற்றப்படுவீர்கள். நாம் ஒரு புதிய காலத்தில் வாழ்கிறோம் என்றும் – நான் செய்தி கொடுக்கும் விதத்தில் விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் பலர் என்னிடத்திலே கூறி இருக்கிறார்கள்.‌ அருமையானவர்களே நாம் ஒரு புதிய காலத்தில்தான் வாழ்கிறோம். ஆனால் இது சோதம் மற்றும் கொமோராவின் நிலை மீண்டும் உருவாகிக்கொண்டிருக்கிற ஒரு காலமாய் இருக்கிறது.
ஆதியாகமம் 19:6-7
[6] அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: [7] சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.
…………………..
சோதோம் ஜனங்கள் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு விருந்தினராய் வந்திருக்கிறவர்களை வெளியே அவர்களிடத்திலே ஒப்புக்கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள். அதற்கு லோத்துவின் பதில் என்ன? அவர்களிடத்தில் போய் சகோதரரே இந்த அக்கிரமம் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார்.
லோத்து நீண்ட காலமாய் அங்கே வசிப்பதால் இது பாவமான பழக்கம் என்பதை தெளிவாக அறிந்து எச்சரிக்கிறார். அவரைப் பொறுத்தமட்டிலும் அது புதிய ஒரு வழிமுறை அல்ல அது பழைய பாவம்தான்.
ஆதியாகமம் 19:8
[8] இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான்.
……………….
அந்த காலத்தில் ஒருவர் ஒரு விருந்தினரை தங்கள் வீட்டிலே ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பாகும். லோத்து தன்னுடைய விருந்தினர்களை பாதுகாப்பதற்காக இத்தகைய தியாகத்தை செய்ய தயாராக இருந்தார்.
ஆதியாகமம் 19:9
[9] அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள்.
………………
இவன் இங்கே பரதேசியாய் வந்து தங்கியிருக்கிறான் இவன் நமக்கு நியாயாதிபதியாக இருப்பதா? என்று சொல்லுகிறார்கள். லோத்து அங்கே அரசியல் அரங்கில் முன்னேறிக் கொண்டிருந்தார் என்பதையும் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
அடுத்த இரண்டு வசனங்களை பாருங்கள்.
ஆதியாகமம் 19:10-11
[10] அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப்பூட்டி, [11] தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள்.
……………………
லோத்தின் விருந்தினர்களான அந்த தூதர்கள் மட்டும் இப்படி செய்யாமல் இருந்திருந்தால் லோத்தும் அந்த விருந்தினர்களும் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஏனென்றால் சோகம் நகரத்து மனிதர்களின் எண்ணம் அதுவாக தான் இருந்தது.
ஆதியாகமம் 19:12-14
[12] பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ. [13] நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமூகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். [14] அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப் போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
………………
இப்பொழுது லோத்து மிகவும் மோசமான ஒரு சூழ்நிலையில் இருக்கிறார். அவர் சோதோம் நகரத்தில் பல ஆண்டுகளை இப்பொழுது கழித்து விட்டார். அவர் இதை பொல்லாப்பு என்று சொன்னாலும் – இத்தகைய காரியங்களை பொறுத்துக் கொள்ள பழகிவிட்டார். தன் பிள்ளைகள் வளர்வதை கண்டார் அவர்கள் அத்தகைய ஒழுக்க நெறிகளைக் கொண்ட மக்களிடையே திருமணம் ஒழுங்கு செய்து விட்டார் போல தெரிகிறது. இந்த நகரத்தை விட்டு வெளியேறும்படி கர்த்தரிடத்திலிருந்து லோத்துக்கு வார்த்தை வந்த பொழுது, அவர் தன் மருமகன்களிடம போய் இங்கிருந்து நாம் வெளியேற வேண்டும் தேவன் இந்த நகரத்தை அழிக்கப் போகிறார் என்று கூறினார். அவர்கள் அவரைப் பார்த்து சிரித்தார்கள். அவரை ஏளனம் செய்தார்கள். ஒருவேளை கடந்த வாரத்திலே லோத்து அங்குள்ள நிலத்தில் கொஞ்சம் முதலீடு செய்து இருக்கிறார் என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கலாம். அவர் அவர்களிலே ஒருவராகவே எந்த மாற்றமும் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்ததால், அவருடைய எச்சரிக்கையை அவர்கள் ஒரு பெரிய நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு விட்டார்கள். இந்த மனிதன் அந்த இடத்தில் தேவனுடைய சித்தத்திற்கு புறம்பாக இருந்தான் என்பதை நாம் கவனிக்க வேண்டும். அவரிடம் தேவனுக்கான சாட்சி எதுவுமில்லை. அந்த நகரத்தில் அவர் ஒருவரை கூட கர்த்தருக்காக ஆதாயப்படுத்தவில்லை. இதே தத்துவம் இன்றும் உண்மையாக இருக்கிறது பிரியமானவர்களே. நீங்கள் எப்பொழுது உலக மக்களின் நிலைக்கு இறங்கி போய் விடுகிறீர்களோ, அப்பொழுது நீங்கள் அவர்களை ஆதாயப்படுத்த முடியாது. இந்த நேரத்திலே இது தெளிவாக நிரூபிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
உண்மையைச் சொல்லப்போனால் இந்த லோத்து இரட்சிக்கப்படவில்லை என்று ஆபிரகாமை போல நாமும் நினைத்திருக்கலாம். ஆனால் பேதுரு என்ன சொன்னார் என்பதை வாசிப்போமா?
2 பேதுரு 2:6-8
[6] சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து; [7] அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு, [8] நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;
………..,…….
அருமையானவர்களே லோத்து சோதாமில் ஒரு நாளும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. இப்பொழுது அவர் அந்த நகரத்தை விட்டு வெளியேறப் போகும் வேளையில் தன் மனைவி மற்றும் மணமாகாத இரண்டு குமாரத்திகளை தவிர வேறு யாரையும் தன்னோடு வரும்படி அழைக்க அவரால் முடியவில்லை.
ஆதியாகமம் 19:15-16
[15] கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள். [16] அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
………………
கவனியுங்கள் – இன்று நம்மிடத்தில், ஆதியாகம புத்தகம் மட்டுமே இருந்திருந்தால் லோத்து இரட்சிக்கப்பட்டவர் என்று நம்பி இருப்போமோ இல்லையோ? நமக்கு தெரியவில்லை. ஆனால் பேதுரு அவரை ஒரு நீதிமான் என்று அழைப்பதால் அவர் இரட்சிக்கபட்டவர் என்பதை நாம் அறிகிறோம். நீதிமானாக இருக்கிறார் / அவர் தேவனை நம்பினார் / மேலும் பலிகளை செலுத்தினார். தேவன் லோத்துவிடம் இரக்கம் காட்டுகிறார். இப்பொழுது அவர் தேவனை நம்பி நகரத்தை விட்டு வெளியேறுகிறார்.
ஆதியாகமம் 19:17-19
[17] அவர்களை வெளியே கொண்டுபோய்விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். [18] அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே, [19] உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபைகிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப் பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன்.
…………………..
கவனியுங்கள் லோத்துவிற்கும் அங்கிருந்து செல்ல விருப்பமில்லை. பட்டணத்தை விட்டு வெளியே வந்தாலும் கர்த்தர் கொடுத்த ஆலோசனைப்படி மலைக்கு ஓடிப் போவதை குறித்து யோசித்து கொண்டு இருக்கிறார்.

ஆதியாகமம் 20
[20] அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான்.
…………………….
அந்த நகரம் சோவார் எனப்படும் ஒரு சிறிய இடமாகும். லோத்து அங்கே தான் சென்றார்.
பாருங்கள் இந்த மனிதன் ச தோமில் இருந்து வெளியே வந்தார் ஆனால் அவர் அங்கிருந்து முழுமையாக தூய்மையானவராக வெளியே வரவில்லை. அதன் விளைவாக அந்த குறிப்பிட்ட நேரத்தில் அவர் ஒரு மிகப்பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டார்.
இப்பொழுது தேவன் சோதோம் கொமோரா பட்டணங்களை அழித்துவிட்டார். இங்கே இரண்டு காரியங்கள் நமக்கு சொல்லப்பட்டிருக்கின்றன ஒன்று லோத்தின் மனைவியை குறித்தது அடுத்து லோத்துவின் பிள்ளைகளை குறித்தது.
அவருடைய மனைவியை குறித்து நான் வாசிப்பது என்ன?
ஆதியாகமம் 19:26
[26] அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
……………………..
இந்த வசனம் பெருமளவில் தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. லோத்தின் மனைவி ஏன் திரும்பிப் பார்த்தாள்? அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக சோதோமை விட்டு வெளியேற விருப்பமில்லை என்பதால் அவள் திரும்பிப் பார்த்தாள். அவள்தன் கணவரான லோத்தையும் நேசித்தார். அதே நேரம் சோதோமையும் நேசித்தார். ஆனால் சோதாவின் மீதான நேசம் அதிகமாய் இருந்தது. அந்த ஊரை விட்டு விட்டு வர அவளுக்கு மனதில்லை. ஒருவேளை அங்கே இருந்த பல்வேறு சங்கங்களிலே / தையல் கலை / இலக்கிய குழு போன்ற குழுக்களில் உறுப்பினராக இருந்திருக்கலாம். சொல்லப்போனால் அவள் உறுப்பினராக இல்லாத குழுவே இல்லை என்று சொல்லலாம். மதிய வேளையிலே நடக்கும் அந்த சிறு சந்திப்புகளை அவள் அதிகமாய் நேசித்தாலள். ஒருவேளை அவள் ஒரு சிறிய மதக்குழுவை அமைத்து மதத்தைப் பற்றி படித்திருக்கலாம். அருமையானவர்களே அவள் அந்த வாழ்க்கை முறையோடு ஒன்றிப் போயிருந்ததால் அதை விட்டுவிட்டு வர அவளுக்கு விருப்பமில்லை.
அவளுடைய இருதயம் சோதோம் நகரத்திலேயே இருந்தது. உடல் வெளியே வந்தாலும் இதயம் அங்கேயே தங்கி விட்டது.
அருமையானவர்களே இது நமக்கு மிகப்பெரிய ஒரு பாடமாகும் கர்த்தருடைய வருகையை காண விரும்புவதாக பல கிறிஸ்தவர்கள் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் அதை உண்மையாகவே விரும்புவது போல வாழவில்லை. ஞாயிறு காலை வேளையிலே தங்களின் அழகான வீட்டை விட்டு ஆரதனைக்குச் செல்வது கடினமாய் இருக்கிறது. ஞாயிறு இரவு நேரங்களிலே அவர்களுக்கு தொலைக்காட்சியின் மேல் இருக்கும் மோகத்தால் வீட்டை விட்டு வெளியே வர மறுக்கிறார்கள். வண்ண தொலைக்காட்சி பெட்டியில் ஞாயிறுதோறும் வரும் நல்ல நிகழ்ச்சிகளை பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் அருமையான சகோதரனை சகோதரியே கர்த்தர் வரும்பொழுது, நீங்கள் உங்கள் தொலைக்காட்சியை விட்டுவிட்டு தான் செல்ல வேண்டும்.உங்கள் மொபைல் போனை விட்டுத்தான் செல்ல வேண்டும். உங்கள் அழகான வீட்டை விட்டு தான் செல்ல வேண்டும். எல்லாவற்றையும் விட்டுத்தான் ஆக வேண்டும். நான் உங்களிடத்திலே கேட்க விரும்பும் ஒரே ஒரு கேள்வி இங்கு இருப்பவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு செல்வது என்பது உங்கள் இருதயத்துக்கு கடினமான ஒரு காரியமா? இல்லையா??

இந்த கேள்வியை நம்மை நாமே கேட்டு பார்க்க விரும்புவோம் என்றால் உண்மையைச் சொன்னால் நம்மால் நம்மில் பலர் இப்பொழுதே கிளம்ப ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கிறோம். நாம் இங்கேயே இருக்க விரும்புகிறோம். நம்மோடு இருக்க வேண்டிய நண்பர்களும் அன்புக்குரியவர்களும் இங்கே இருக்கிறார்கள் நாம் தொடர விரும்பும் ஊழியங்கள் இருக்கின்றன. எனவே நாம் தொடர்ந்து இன்னும் கொஞ்ச காலம் எங்கே இருக்க ஆண்டவர் அனுமதிப்பார் என்று நினைக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் அவர் நம்மை அழைக்கும் பொழுது எதை விட்டுப் பிரிவதும் நம் இருதயத்தை உடைக்காதபடிக்கு நமக்கு இருப்பவற்றோடு நாம் ஒட்டிக் கொள்ளாமல் வாழ வேண்டும். இப்பொழுது நாம் நம் வீட்டை நேசிக்கலாம், ஆனால் அதை விட்டுப் போக வேண்டிய நேரம் வரும் பொழுது உடனே செல்ல நாம் ஆயத்தமாக இரக்க வேண்டும் .இன்று நீங்கள் இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்ததற்கு மற்றொரு காரணம் அவள் தேவனை நம்பவில்லை. தேவன் நகரத்தை விட்டு வெளியேறு திரும்பி பார்க்காதே என்று சொல்லி இருந்தார். லோத்து திரும்பி பார்க்கவில்லை அவர் தேவனை நம்பினார். ஆனால் லோத்தின் மனைவி தேவனை நம்பவில்லை. அவர் ஒரு விசுவாசி அல்ல. அதனால் தான் அவரால் அந்த நகரத்திலிருந்து உண்மையாக முழுமையாக வெளியேற முடியவில்லை அவள் உப்பு தூணானாள்.
31 முதல் 38ஆம் வசனம் வரையிலான வசனங்களில் உள்ள லோத்தின் இரண்டு குமாரத்துகளின் கதையை பற்றி நாம் விவரமாக படிக்க வேண்டியதில்லை. இது மிகவும் அருவருப்பானது. உண்மையைச் சொன்னால் சோதோம் நகரத்திற்கு சென்றதின் மூலம் லோத்து எதையும் சாதிக்கவில்லை. தனது ஆத்மாவை தவிர மற்ற எல்லாவற்றையும் அவர் இழந்து போனார். தங்கள் வாழ்க்கையின் பாவங்களை நியாயம் தீர்க்க தவறும் பலருடைய வாழ்க்கைக்கு அவர் ஒரு அடையாளமாய் இருக்கிறார். அவர்கள் அக்கினியில் அகப்பட்டு தப்பினது போல இரட்சிக்கப்படுகிறார்கள் என்று வாசித்திருக்கிறோம். இங்கேயே தங்கள் பாவங்களை நியாயம் தீர்க்காதவர்களை பார்த்து கர்த்தர் மிகத் தெளிவாகச் சொல்லி இரக்கிறார். அவர்கள் அப்படி செய்யாவிட்டால் அவரே அவர்களை நியாயம் தீர்ப்பார்
லோத்தின் சரித்திரத்தில் இதுதான் நடந்தது.
சரி இதைப் பற்றி எல்லாம் ஆபிரகாம் என்ன நினைத்தார்?

ஆதியாகமம் 19:27-28
[27] விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், [28] சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.
…………………..
விடியற்காலையில் ஆபிரகாம் எழும்பி சோதோமை நோக்கி பார்த்த பொழுது அவருடைய இருதயம் துக்கத்தில் நிறைந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். லோத்து தப்பித்தாரா? இல்லையா? என்பது அவருக்கு தெரிந்திருக்குமா? என்பது நமக்கு தெரியவில்லை. அவர் ஒரு வேளை அதைப்பற்றி பின்னரே அறிந்திருக்க கூடும். அவர் அங்கே பார்த்தபொழுது லோத்துக்காக வருத்தப்பட்டு இருக்கலாம்/ ஆனால் ஆபிரகாம் அங்கு ஒரு காசை கூட முதலீடு செய்யவில்லை. அந்த நகரத்திற்கு நியாயத்தீர்ப்பு வந்த பொழுது அது அவரை அந்த அளவு பாதிக்கவில்லை. ஏனென்றால் அவர் சோதாமின் மீதோ அல்லது இந்த உலகத்தின் காரியங்களின் மீதும் அன்பு வைத்திருக்கவில்லை.
1யோவான் 2:15 என்ன சொல்கிறது?
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூறாதிருங்கள்.
………………….
அருமையானவர்களே இந்த வசனத்தை எப்பொழுதும் நம் இருதயத்திலே வைத்திருக்க வேண்டும். லோத்துவின் கண்களின் வழியாக நாம் சோதாமை பார்த்தால் அவர் அதை முற்றிலும் தவறான கோணத்தில் பார்த்தார் என்று சொல்லலாம். பின் லோத்துவின் மனைவியின் கண்களின் வழியாக அதைப் பார்த்தால் அவள் அதன் மேல் மோகம் கொண்டாள். நீங்கள் ஆபிரகாமுடன் சேர்ந்தும் சோதோமை சுற்றி பார்க்கலாம். அவர் அங்கே எதையும் இழக்கவில்லை. இறுதியாக நீங்கள் கர்த்தரோடு சோதோமுக்குள் சென்று அவர் பார்ப்பது போல் அதைப் பார்க்கலாம் இன்று திருச்சபை சோதம் மக்கள் செய்த பாவத்தை தேவன் பார்ப்பது போல பார்க்காமல் இருப்பதுதான் வருத்தத்திற்குரியது.
சோதோம் மக்களின் பாவம் இன்று மிக அதிகமாக வெளிப்படையாக பரவி இருக்கிறது.
ஓரினச்சேர்க்கை குறித்த ஒரு கிறிஸ்தவனின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? லோத்து அந்த காலத்திலேயே நீங்கள் பொல்லாப்பு செய்கிறீர்கள் என்று சொன்னார். தேவன் அதை நியாயம் தீர்த்தார். இப்படிப்பட்ட காரியங்களோடு ஒரு விசுவாசி ஒருபொழுதும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இது ஒரு பாவம். உலகம் இதில் ஈடுபட்டுவிட்டு பின்னர் இதை ஒரு நோய் என்று சொல்கிறது. குடிப்பழக்கம் உள்ளவர்களை பற்றியும் இதைத்தான் சொல்கிறது. ஆனால் அவர் முதல் முதலில் மதுவை குடிக்கவும் அது நோயாக மாறும் வரை தொடர்ந்து குடிக்கவும் அவரை தூண்டியது எது? அருமையானவர்களே பாவம்தான் அதை செய்தது. பாவம்தான் உண்மையான பிரச்சினை. ஓரினச்சேர்க்கையும் ஒரு பாவம்தான். ரோமர் முதலாம் அதிகாரத்தில் தேவன் அப்படிப்பட்ட அவர்களை கைவிட்டதாக சொல்லும் பொழுது, அது பாவம் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளது.. ‌ ரோமர் 1: 18 – 32 வாசித்து பாருங்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திற்கு ஆதியாகமம் 19 ஆம் அதிகாரம் மிக முக்கியமான ஒரு அதிகாரமாகும்.
தொடர்ந்து இருபதாம் அதிகாரத்திலிருந்தும் சில வசனங்களை பார்ப்போம்.
ஒரு பசு மாட்டிற்கு ஐந்தாவது கால் எவ்வளவு தேவையற்றதோ அதேபோல ஆதியாகமம் 20 ஆம் அதிகாரமும் தேவையற்ற ஒன்றாகவே தோன்றுகிறது. இந்த அதிகாரத்தை தவிர்த்து விடலாம் என்று தான் நீங்கள் யோசிப்பீர்கள் ஏனென்றால் ஆபிரகாம் எகிப்து தேசத்திற்கு சென்ற பொழுது சாராளைக் குறித்து இவள் என் சகோதரி என்று பொய் சொல்லி செய்த அதே பாவத்தை இப்பொழுது மீண்டும் செய்கிறார். இது அதே அருவருப்பான கதைதான். ஆனால் மிக முக்கியமான காரணத்திற்காக இந்த அதிகாரம் இங்கே வைக்கப்பட்டிருக்கிறது. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கை பெறுவதற்கு முன்பாக – ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வதற்கு முன் அவர்கள் இந்த பாவத்தை குறித்து தீர்வு கண்டாக வேண்டும்.‌ அருமையானவர்களே நாமும் நமது வாழ்க்கையில் உள்ள பாவத்தை குறித்து தீர்வு காண முன்வரும் வரை நமக்கு ஆசீர்வாதம் இல்லை.
ஆதியாகமம் 20:1-2
[1] ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென்தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான், [2] அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
……………………
அருமையானவர்களே இது மிகவும் சுவாரசியமானது. சாராள் அழகாக இருந்திருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?? இந்த நேரத்தில் அவளுக்கு கிட்டத்தட்ட 90 வயதாகிறது. அப்பொழுதும் அவள் அழகாக இருக்கிறாள். முதியவர்களிலே பலரால் இந்த விஷயத்திலே அவருக்கு இணையாக இருக்க முடியாது.
ஆபிரகாம் இப்படிதான் அந்த தேசத்தின் தெற்கு பகுதிக்கு வெகுதூரம் வந்துவிட்டார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இஸ்ரவேல் புத்திரர் பின்னர் எகிப்திலிருந்து வந்து தேசத்திற்குள் நுழைய மறுத்த காதேஸ் பர்னேயாவையும் தாண்டி அவர் சென்று விட்டார். ஆபிரகாம் இப்பொழுது கேரார் வரை சென்றிருக்கிறார் .அவர் அங்கே சென்றிருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் அவர் அங்கே சென்றது ஒருபறம் இருக்கட்டும். ஆபிரகாம் மீண்டும் சாராளை குறித்து பொய் சொல்லுகிறார்.

ஆபிரகாம் தன் தவறை ஒத்துக்கொள்ளும் வார்த்தைகளை நாம் கவனிக்க வேண்டும் ஏனென்றால் இதுவே அந்த அதிகாரத்தை முக்கியமானதாக்குகிறது. மேலும் ஆபிரகாமும் சாராளும் தங்கள் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருக்கும் இந்த பாவத்தை போக்கும் வரை அவர்களால் ஈசாக்கை பெற்றுக்கொள்ள முடியாது என்ற உண்மையை இந்த வேத பகுதி நமக்கு வெளிப்படுத்துகிறது.

ஆதியாகமம் 20:11
[11] அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
…………………
இப்பொழுது ஆபிரகாம் அபிமெலேக்குவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். ஆபிரகாம் தனது மனைவியை குறித்து பொய் சொன்னதைக் கண்ட அபிமெலேக்கு மிகுந்த மனக்கலக்கம் அடைந்திருக்கிறார். கவனியுங்கள் மீண்டும் ஆபிரகாம் தேவனை நம்பவில்லை. தான் ஒரு பக்தியற்ற இடத்திற்கு செல்வதாக அவர் கருதினார். ஆனால் அபிமெலேக்கு எது சரி எது தவறு என்பதை குறித்த உயர்ந்த புரிந்து கொள்ளுதலோடு இருப்பதை ஆபிரகாம் கவனிக்கிறார். அபிமெலேக்கு நற்பண்புகளுக்கு மிகுந்த மதிப்பு கொடுக்கிறார். மேலும் அவர் கடவுளை அறிந்த ஒரு மனிதராகவும் தெரிகிறது. இந்த இடத்தில் அபிமெலேக்கிற்கு முன்னே ஆபிரகாமின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
ஆதியாகமம் 20:12
[12] அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
………………..
ஆபிரகாம் இப்பொழுதெல்லாம்வற்றையும் தெளிவாகச் சொல்லுகிறார்.‌ உண்மையைச் சொல்லப் போனால் அது ஒரு பாதி பொய். அவள் என் தகப்பனுக்கு குமாரத்தி ஆனால் என் தாய்க்கு குமாரத்தி அல்ல என்று சொல்கிறார்.
ஆதியாகமம் 20:13
[13] என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த்திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான்.
…………………..
கவனித்தீர்களா? ஆபிரகாம் இன்னமும் தேவன் மீது முழுமையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வைக்கவில்லை இதனால் அவர்கள் தங்கள் பயணத்தை தொடங்கிய பொழுது ஆபிரகாமும் சாராளும் தங்களுக்குள்ளே தவறான ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் ஆபிரகாம் கொல்லப்படாமல் தப்பிக்கலாம் என்று அவர்கள் நினைத்தார்கள் அவர்கள் இந்த சிறு ஒப்பந்தத்தை செய்து கொண்டு எகிப்திலும் இதை பயன்படுத்தினார்கள். இப்பொழுது இங்கே மீண்டும் அதையே பயன்படுத்துகிறார்கள் ஒரு மகனை தருவதாக ஆபிரகாம் செய்த ஜெபத்திற்கு தேவன் செவி சாய்த்து பதில் அளிப்பதற்கு முன்னால் இந்த பாவம் முற்றிலும் தீர்க்கப்பட வேண்டும். இது சரி செய்யப்படும் வரை ஈசாக்கு பிறக்கப் போவதில்லை.
என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற அருமையான சகோதரனை சகோதரியே தங்கள் வாழ்க்கையில் உள்ள பாவத்தை நியாயம் தீர்க்க முன்வராத எத்தனை பேர் இன்று இருக்கிறார்கள் இல்லையா? அதன் விளைவாக அவர்கள் வாழ்க்கையிலே ஆசீர்வாதம் இல்லாமல் இருக்கிறது. அடிப்படை வாத சபைகளிலே தலைமைத்துவத்தில் இருப்பவர்களும் தங்கள் பாவங்களை அறிக்கை விட்டு தங்கள் வாழ்க்கையில் உள்ள பாவங்களை குறித்து தீர்வு கண்டால் நிச்சயமாக நம்முடைய தேசத்திலே ஒரு பெரிய எழுப்புதல் உண்டாகும் என்று திட்டமாய் சொல்லலாம். பாவம் தீர்க்கப்படும் வரை எந்த ஆசீர்வாதமும் இருக்காது.
1 கொரிந்தியர் 11:28-32
[28] எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். [29] என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். [30] இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். [31] நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். [32] நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்.
………………..
அருமையானவர்களே இன்று நம்முடைய வாழ்க்கையில் உள்ள பாவங்களை குறித்து தீர்வு காணாததால். பல விசுவாசிகளின் வாழ்க்கையிலும் ஆசீர்வாதங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆதியாகம புத்தகத்தின் 20 ஆம் அதிகாரத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய ஆவிக்குரிய பாடம் இதுவே.
நம்முடைய வாழ்விலும் தேவன் நமக்கு கொடுக்க காத்திருக்கும் எத்தனையோ ஆசிர்வாதங்களுக்கு தடையாய் இருக்கும் பாவம் என்ன என்று நம்மை நாமே ஆராய்ந்து உணர்ந்து தேவனிடத்தில் அறிக்கை செய்வோமா?

உத்தமமாய் முன்செல்ல உதவி செய்யும் யெகொவா. – இசைத் தட்டிலிருந்து

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top