ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 18: 5 – 19:3
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 18: 5 – 19:3
நிகழ்ச்சி எண்: 0036

வாசியுங்கள்

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக. இன்று நாம் ஆதியாகமம் 18:5 முதல் 19:3 ஆம் வசன்ம் வரை கற்றுக்கொள்ள போகிறோம்.
வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 18:5-8
[5] நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். [6] அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். [7] ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். [8] ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள்.
……………………
இது எவ்வளவு அற்புதமான ஒரு உபசரணை இல்லையா? அருமையான ஒரு விருந்தை ஆயத்தம் செய்கிறார். ஒரு இளம் கன்றை பிடித்து வேலைக்காரனிடம் கொடுத்து சமைக்க சொல்கிறார். வெண்ணெய் பால் எல்லாவற்றையும் கொண்டு வந்து அந்த விருந்தினர்களை உபசரிக்கிறார். இவர்கள் ராஜாக்களின் வரிசையில் வந்த விருந்தினராக இருக்கிறார்கள்.
எபிரெயர் 13 2 என்ன சொல்கிறது பாருங்கள்.
அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள் அதனால் சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு
………………….
ஆம் இதுதான் ஆபிராம். அவர் உபசரணை செய்யும் மனிதர்கள் யார் என்றே அவருக்கு தெரியாது.
ஆதியாகமம் 18:9
[9] அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
………………….
பல கலாச்சாரங்களிலே வீட்டிற்கு வரும் விருந்தினர்களை உபசரிக்க பெண்கள் வெளியே வருவதில்லை குறிப்பாக அந்நாட்களிலும் அது உறுதியான ஒரு பழக்கமாய் இருந்திருக்கிறது. ஆனால் அவர்கள் ஆபிரகாமின் மனைவியாகிய சாராள் குறித்து பெயர்சொல்லி விசாரிக்கிறார்கள்.
ஆதியாகமம் 18:10
[10] அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
……………….
எந்த பெண்ணுக்கும் இருக்கும் ஆவலைப் போலத்தான் சாராளும் வந்தவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உற்று கவனித்துக் கொண்டிருக்கிறாள். தன்னைக் குறித்து விசாரிப்பதையும் தன்னைக் குறித்து சொல்லப்பட்ட காரியத்தையும் அவள் கூடாரத்தின் உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள். இப்பொழுதுதான் ஆபிரகாமும் சாராளும் தாங்கள் அறியாமலேயே தேவதூதர்களை உபசரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார்கள்.
ஆதியாகமம் 18:11-12
[11] ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களா யிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. [12] ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
……………..
அதாவது சாரள் எனக்கு ஒரு மகன் பிறப்பது சாத்தியமா என்று கேட்டு சிரித்திருப்பாள். சரி ! இது எப்படிப்பட்ட சிரிப்பு? இது நடப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் இது உண்மையாக இருக்க முடியுமா? என்று கேட்கும் சிரிப்புதான் இது. – இன்று நம்மில் பலருக்கு இது போன்ற அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஒரு குறிப்பிட்ட நேரத்திலே தேவன் நமக்கு மிகவும் நன்மைகளைச் செய்யும்போது நாம் மெய்சிலிர்த்து சிரித்திருப்போம். இது உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு மிக அற்புதமாக இருக்கிறதே என்று சொல்லும் விதமாக ஏதோ ஒன்று நடக்கும் பொழுது நாமும் இவ்வாறு தான் நம்மை மறந்து சிரித்திருப்போம். அன்று சாராளும் அப்படித்தான் சரித்தாள் இது நடப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் இது எனக்கு நடக்கவே முடியாது என்று தன் அவள் சொல்கிறாள்.
ஆதியாகமம் 18:13-15
[13] அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? [14] கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். [15] சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
………………….
இங்கே கர்த்தருடைய கேள்வியால் சாராள் பயந்து போகிறாள். அதிலிருந்து தப்பிக் கொள்ளவும் முயற்சி செய்கிறாள். ஆனால் அவளால் உண்மையை தவிர்க்க முடியவில்லை.
ஆதியாகமம் 18:16
[16] பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான்.
…………………..
ஆபிரகாமுக்கு முன்பக்க வாசல் என்று எதுவும் இல்லை எனவே அவர் அவர்களுக்கு விடை கொடுப்பதற்காக சற்று தூரம் அவர்களுடனே நடந்து சென்றார். ஆபிரகாம் வசித்த இடத்திலிருந்து அவர்கள் வெளியே நடந்து சென்ற பொழுது கீழே சோதோம் மற்றும் கொமோரா பட்டணங்களை அவர்களால் பார்க்க முடிந்தது. அந்த தேசத்திற்கு சென்று பார்த்த சிலர் சொல்வது இதுதான். ஒரு தெளிவான நாளிலே எவ்வளவு தூரம் வரை பார்க்க முடியும் என்பது ஆச்சரியமான ஒன்று என்று சொல்லுகிறார்கள். ஏனென்றால் எருசலேமில் இருந்து பெத்தலகேமை பார்க்க முடிகிறது. பழைய சமாரியாவின் இடுப்பாடுகளில் இருந்து எருசலேமையும் மத்தியதரை கடலையும், கலிலேயா கடலையும் பார்க்க முடிகிறது. எர்மோன் மலையை கிட்டத்தட்ட எல்லா இடங்களிலிருந்தும் பார்க்க முடிகிறது. அது மிகவும் பிரம்மாண்டமானது…..
ஆபிரகாம் இந்த விருந்தினர்களுடன் சிறிது தூரம் நடந்து சென்றார் அங்கே கீழே அவர்கள் சோதோம் மற்றும் கொமோராவை பார்த்தார்கள். அவை அக்காலத்தில் மிகச்சிறந்த சுற்றுலா தளங்களாக இருந்திருக்கின்றன. மேலும் அவை தங்குவதற்கு மிகவும் ரம்மியமான மற்றும் அழகான இடங்கள் ஆகவும் இருந்திருக்க வேண்டும்.
ஆதியாகமம் 18:17,18
[17] அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
[18] நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
…………………..
சோதோம் மற்றும் கொமோரா பட்டணங்களுக்கு தான் என்ன செய்யப் போறேன் என்பதை இந்த நேரம் வரை கர்த்தர் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தவில்லை. இப்பொழுது அவர் அந்த பட்டணங்களை அழிக்கப் போகிறார். மேலும் இப்பொழுது தான் செய்யப் போகிறதை ஆபிராமுக்கு மறைப்பேனோ? என்று கேட்கிறார். ஏன் ஆபிரகாமுக்கு அதை மறைக்க மாட்டார்? வரும் நாட்களில் ஆபிரகாம் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும் ஒருவராக போகிறார். அவர் பலத்த ஜாதியாக போவதாலும் ஏராளமான ஜனங்கள் அவருடைய சந்ததியிலே வரப்போதாலும் தேவன் அதை மறைக்க விரும்பவில்லை. இது எத்தனை உண்மை இல்லையா? இதை கற்றுக் கொள்கிற நாம் வாழும் இந்த காலத்திலும் ஆபிரகாம் உலகத்தில் பலருடைய வாழ்க்கையிலே ஏற்படுத்தி இருக்கிற தாக்கத்தை மறுக்க முடியாது.
ஆதியாகமம் 18:19
[19] கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
………………..
தேவன் இங்கே கூறுவதென்ன? நான் ஆபிரகாம் இடமிருந்து இதை மறைக்காமல் இருப்பதுதான் நல்லது – இல்லை என்றால், அவர் என்னைப் பற்றி தவறான எண்ணம் கொள்ளக்கூடும் என்று கூறுவது போல் இருக்கிறது. அது மட்டுமல்ல, ஆபிரகாம் தனது குடும்பத்தில் ஒரு கட்டுப்பாட்டை அல்லது ஒரு ஒழுக்கத்தை வைத்திருந்தார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இது எப்படி நமக்குத் தெரியும்? கர்த்தர் சொன்னதை மீண்டும் கூறுகிறேன்.
என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
………………..

அருமை நண்பர்களே இன்றைக்கு நம்மில் எத்தனை பெற்றோர் தங்கள் பிள்ளைகள், தங்களுடைய பேரப்பிள்ளைகள் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தோடு வாழ வேண்டும்- கர்த்தரை நேசிப்பவர்களாக வாழ வேண்டும் -கர்த்தருடைய ஊழியங்களிலே ஈடுபாடு கொண்டுள்ளாய் வாழ வேண்டும் -என்று வஞ்சிக்கிறோம்?? அனேகர் தன்னுடைய பிள்ளைகள் உலகத்தில் பெயர் எடுக்க வேண்டும் / பணம் சம்பாதிக்க வேண்டும் /உயர்ந்த பதவியில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுகிறார்கள்.
ஆனால் எல்லாவற்றையும் விட நம்முடைய பிள்ளைகள் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்திலும் கர்த்தரை நேசிக்கிற அன்பிலும் வளர்வதே சிறந்த ஒரு காரியம்.
ஆதியாகமம் 18:20-21
[20] பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், [21] நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார்.
……………………
வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் தேவன் ஆபிரகாம் இடத்திலே அங்குள்ள நிலையை நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் நான் நேரில் சென்று ஆராயப் போகிறேன் என்று கூறுகிறார். தேவன் எதையும் அவசர அவசரமாகவோ அல்லது பதட்டத்துடனும் செய்வதில்லை. தேவன் இந்த நகரங்களை அழிக்கப் போகிறார் என்பதை ஆபிரகாம் இடத்தில் சொன்னது ஒரு நல்ல காரியம் தான். இல்லையென்றால் ஆபிரகாம் தேவனை பற்றிய தவறான எண்ணம் கொண்டிருப்பார். தேவன் ஒரு சர்வாதிகாரியாகவோ? அல்லது பழி வாங்கும் குணம் கொண்டவறோ? என்றும். தமக்கு சொந்தமானவர்கள் மீதும் அவர் எவ்வித இரக்கமும் அக்கறையும் காட்டுவதில்லை என்றும் ஆபிரகாம் நினைக்கக்கூடும். ஆபிரகாம் தேவனைப் பற்றி ஒரு சிதைந்த மற்றும் தவறான கண்ணோட்டத்தை பெற்றிருப்பார், எனவேதான் தேவன் தான் என்ன செய்யப் போகிறேன் என்பதை ஆபிரகாமுக்கு தெளிவாக எடுத்துச் சொல்கிறார்.
இப்பொழுது ஆபிரகாமுக்கு இதை தனது மனதில் சிந்தித்துப் பார்க்க நேரமில்லை தேவன் அவரிடம் இதைச் சொன்னது மற்றும் ஒரு விதத்தில் நல்லது. ஏனென்றால் ஆபிராமுக்கு தேவனை பற்றியும் சோதோம் மற்றும் கொமோராவை பற்றியும் தவறான கருத்து இருந்தது. அவர் பல விஷயங்களில் தவறாக இருந்தார். இதற்காகத்தான் தேவன் தம்மால் இயன்ற அளவு பல விஷயங்களை நமக்கு தெரிவிக்கிறார். தேவன் நம்மிடத்திலே சொல்லாத பல காரியங்கள் இருந்தாலும், ஒரு மனிதன் பேதையாகவோ அல்லது வழிப்போக்கனாகவோ இருந்தாலும் அவன் தடுமாறாமல் இருப்பதற்கு தேவையான அளவு விஷயங்களை அவர் நமக்கு தெளிவுபடுத்தி இருக்கிறார். எனவே எந்த ஒரு மனிதனும் தனது வாழ்க்கையில் எனக்கு கடவுளை தெரியாது – என்னை படைத்தவரை நான் அறியவில்லை என்று சொல்ல முடியாது.
ஆதியாகமம் 18:22
[22] அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான்.
………………..
அந்த மனிதர்கள் ஆபிரகாமை விட்டு புறப்பட்டு போனாலும் ஆபிரகாமோ கர்த்தருக்கு முன் நின்று கொண்டிருக்கிறார்.
ஆதியாகமம் 18:23
[23] அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
…………………..
கவனித்தீர்களா?? ஆபிரகாம் சமீபமாய் சேர்ந்து./ / நமக்கு மிகவும் நெருக்கமானவர்களிடத்தில் தான் நாம் அருகில் போய் நின்று பேசுவோம். அல்லது முக்கியமான காரியங்களைதான் மற்றும் ஒருவர் அருகில் சென்று பேசுவோம். ஆபிரகாம் இப்பொழுது சமீபமாய் செல்கிறார். இப்பொழுது ஆபிரகாமின் மனதில் முதலில் தோன்றிய விஷயம் என்ன? அவரது மனதிலே முதலில் வருவது நிச்சயமாக லோத்துதான். அவர் ஒரு முறை லோத்தை மீட்டெடுத்தார். இப்பொழுது லோத்து மீண்டும் அங்கே ஆபத்தில் இருக்கிறார். லோத்தை பற்றியும், அவருக்கும் தேவனுக்கும் இருந்த உறவைப் பற்றியும் ஆபிரகாம் பலமுறை யோசித்து இருப்பார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் லோத்து குறைந்தபட்சம் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதன் என்று அவர் நம்புகிறார். எனவே அவர் தேவனிடம், நீதிமான்களின் கதி என்ன? என்று கேட்கிறார். சோதம் நகரத்தில் இரட்சிக்கப்பட்ட மக்கள் பலர் இருந்திருப்பார்கள் என்று ஆபிரகாம் நினைத்திருப்பார் என்று நாம் யோசிக்கலாம். எனவே தான் துன்மார்க்கர்களோடு சேர்ந்து நீதிமான்களையும் தேவன் ஏன் அழிக்க வேண்டும் என்பதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த காட்சியை தான் நாம் இங்கே பார்க்கிறோம்.
ஆதியாகமம் 18:24
[24] பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?
…………………..
ஆபிரகாம் ஐம்பதிலிருந்து ஆரம்பிக்கிறார் ஆண்டவரே ஐம்பது நீதிமான்கள் மட்டும் இருந்தால் அந்த பட்டணத்தில் நீர் அழித்து விடுவீரோ? என்று கேட்கிறார்.
ஆதியாகமம் 18:25-26
[25] துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். [26] அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார்.
……………………
அருமையான சகோதரனை சகோதரியே இன்றும் அநேகர் கேட்கிற கேள்வி இதுதான். உலகத்தின் நீதிபதியானவர் சரியானதை செய்யாமல் இருப்பாரோ? அதற்கான ஒரு விடையும் இருக்கிறது. வேதத்தின் மீதி பகுதிகள் சர்வலோக நீதிபதி எப்பொழுதுமே நீதி செய்வார் என்பதை காட்டுகிறது. ஆம் தேவன் எதை செய்தாலும் அது சரியானதே. அவர் செய்வது சரியல்ல என்று நீங்கள் நினைத்தால் அந்த பிரச்சனை தேவனிடத்தில் இல்லை பிரச்சனை உங்களிடத்திலும் உங்கள் சிந்தனையில் தான் இருக்கிறது. நீங்கள் தவறாக யோசிக்கிறீர்கள். உங்களிடம் எல்லா உண்மைகளும் இல்லை. உங்களுக்கு எல்லா விபரங்களும் தெரியாது. உங்களுக்கு அவை அனைத்தும் தெரிந்திருந்தால் பூமிக்கெல்லாம் நீதிபதியாக இருக்கிறவர் நீதியை செய்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள் நாம் தவறானவர்களாக இருக்கலாம் ஆனால் அவர் எப்பொழுதும் சரியானவராகவே இருக்கிறார்.
ஆதியாகமம் 18:27-28
[27] அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். [28] ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
……,…………….
வேறு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் ஒருவேளை அங்கே 45 நீதிமான்கள் இருந்தால் பட்டணத்தை அளிக்காமல் இருக்கலாம் அல்லவா என்றுஆபிரகாம் கேட்கிறார்.
கர்த்தரும் அங்கே 45 நீதிமான்கள் இருந்தால் அளிக்க மாட்டேன் என்று சொல்லுகிறார்.
கர்த்தருடைய இந்த பதில் ஆபிரகாமுக்கு இன்னும் கொஞ்சம் துணிச்சலை கொடுக்கிறது. மீண்டும் அங்கே 40 நீதிமான்கள் இருந்தால்?? என்று கேட்கிறார். மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் தேவன் அந்த 40 பேருக்காக நான் அதை அழிக்க மாட்டேன் என்று சொல்கிறார். ஆபிரகாம் அந்த எண்ணிக்கையை தொடர்ந்து குறைத்துக் கொண்டே வருகிறார் அவர் 30 நீதிமான்கள் இருந்தால் எப்படி? என்று கேட்கிறார். அதற்கும் கர்த்தர் அங்கே 30 நீதிமான்கள் இருந்தாலும் நான் அதை அழிக்க மாட்டேன் என்று சொல்லுகிறார். ஆபிரகாம் ஒருவேளை அங்கே 25 பேர் இருந்தால்?? என்று கேட்ட பொழுதும் தேவன் நான் அதை அழிக்க மாட்டேன் என்றார். இப்பொழுது ஆபிரகாம் மிக நெகிழ்ந்து போய் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்.
ஆதியாகமம் 18:32
[32] அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
…………………
இப்பொழுது இங்கே நமக்கு ஒரு கேள்வி எழும்புகிறது 10 எண்ணிக்கைக்கு கீழே ஏன் ஆபிரகாம் கேட்கவில்லை ஏனென்றால் லோத்துவும் கூட கர்த்தரை விட்டு தூரமாய் போய் இருப்பானோ என்ற பயம் இப்பொழுது ஆபிராமுக்குள்ளே வந்திருக்கும். இது அவருடைய இருதயத்தை அதிகமாக ஒலுக்கி இருக்கும். எனவே அதற்கு கீழே எண்ணிக்கையை குறைத்து கேட்க அவரால் முடியவில்லை.
ஒருவேளை ஆண்டவரே ஒரே ஒரு நீதிமான் இருந்தால் நகரத்தை அழிப்பீரோ என்று கேட்டிருந்தாலும் தேவன் என்ன சொல்லி இருப்பார் தெரியுமா? ஒரே ஒரு நீதிமான் இருந்தால் அவனை அந்த நகரத்தை விட்டு நான் வெளியே அழைத்த பிறகுதான் நகரத்தை அழிப்பேன் ஏனென்றால் நான் அந்த ஒரு நீதிமானையும் அந்த நகரத்தோடு அளிக்க மாட்டேன் என்றுதான் கூறியிருப்பார்.
இது எப்படி உங்களுக்கு தெரியும்? என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம் ஆனால் அருமையானவர்களே தேவன் அவ்வாறுதான் செய்ததை இங்கே நாம் வேதத்தில் வாசிக்கிறோம். அங்கே ஒரே ஒரு நீதிமான்தான் காணப்படுகிறான். ஆபிரகாமால் அதை நம்ப முடியவில்லை. ஆனால் தேவனுக்கு அது தெரியும். எனவே தான் லோத்து வை பார்த்து பட்டணத்தை விட்டு வெளியே போ. நீ வெளியே போகும் வரை நான் இதை அழிக்க முடியாது என்று கூறுவதை நாம் பார்க்கிறோம்.
அருமையான சகோதரனை சகோதர்களே இந்த நேரத்திலே மற்றுமொரு உண்மையை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் திருச்சபையானது உலகத்தை விட்டு எடுக்கப்படும் முன்னதாக மகா உபத்திரவகாலம் வராது. திருச்சபை மகா உபத்திரவ காலத்திற்குள்ளே கடந்து செல்ல முடியாது. ஏனென்றால் ஆண்டவராக இயேசு கிறிஸ்து நம்முடைய தண்டனையை அனுபவித்து விட்டார். மகா உத்தரவு காலம் தேவனுடைய நியாய தீர்ப்பின் ஒரு பகுதியாகும் எனவேதான் திருச்சபை அதாவது விசுவாசிகளின் கூட்டம் அந்த பாடுகளின் வழியாக செல்லாது. இந்த பெரிய சத்தியத்தை வெளிப்படுத்தும் ஒரு உண்மைதான் இந்த சோதோம் கொமோரா சம்பவம்.

சோதோம் கொமோரா உலகத்தை நமக்கு காண்பிக்கும் ஒரு படம். இந்த உலகம் எப்படி பாவத்திலே சீரழிந்து கொண்டிருக்கிறதோ அதேபோலத்தான் அன்று அந்த நகரம் இருந்தது. இப்படி கூறுவதாலே தேவன் நாளைக்கே வர முடியாது என்று நான் கூறவில்லை.
அவர் இன்றைக்கும் வரலாம். நாளைக்கு வரலாம். ஆனால் இந்த பகுதியில் நாம் பார்ப்பது போல விசுவாசிகளை மத்திய வானில் அவர் தன்னோடு அழைத்த பின்னர் தான் மகா உத்தரவு காலம் – நியாயத்தீர்ப்பு உலகத்தில் ஆரம்பம் ஆகும். மத்திய வண்ணத்தில் அவரை சந்திப்பதற்கு நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா?? அதற்கான தகுதியை நாம் எப்படி பெற்று கொள்கிறோம் நம்முடைய பாவத்திற்கான தண்டனையை இயேசு சிலுவையில் சுமந்து தீர்த்தார் என்பதை நீங்கள் விசுவாசிக்க வேண்டும் அவருடைய நீதியினாலே நாம் நீதிமான்களாக படுகிறோம் என்பதை விசுவாசித்து ஏற்றுக் கொள்கிறவர்கள் கிறிஸ்துவின் வருகையிலே பங்கடைவார்கள்..
தொடர்ந்து 19 ஆம் அதிகாரத்தில் இருந்தும் சில வசனங்களை நாம் பார்ப்போம்.
ஆதிகாமம் பதினெட்டாம் அதிகாரத்தில் தேவனோடு நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு ஆசீர்வாதமான உறவை குறித்து நாம் பார்த்தோம். இப்பொழுது அங்கே காட்சி மாறுகிறது. ஆபிரகாம் தங்கியிருந்த மம்ரேயின் சமவெளியில் உள்ள எபிரோனை விட்டு லோத்து வசித்த சோகம் பட்டணத்திற்கு போகிறோம். இந்த அதிகாரத்தில் நாம் பார்க்கிறது போல லோத்து தனது மனைவியுடனும் இரண்டு பிள்ளைகளுடனும் சோதோமை விட்டு வெளியே வருகிறான். அப்பொழுது சோதோம் கொமோரா அழிக்கப்படுகிறது. ஆனால் லோத்தின் மனைவி திரும்பிப் பார்த்து உப்பு தூணாகிறாள். பின்னர் லோத்து தன் குமாரத்திகளோடு செய்த பாவத்தை குறித்தும் நாம் எங்கே வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 19 ஆம் அதிகாரத்தில் ஒரு உடைந்து நொறுங்கிப் போன வாழ்க்கையை பார்க்கிறோம். அருமையானவர்களே இந்த லோத்து ஒரு நீதிமானான் தான். இதை நாம் மறந்து போகக்கூடாது. ஆதியாகம புத்தகத்தில் உள்ள இந்த சம்பவத்தை மட்டும் நாம் வாசிப்போம் என்று சொன்னால் அவன் நீதிமான் என்பதை நாம் நம்ப முடியாது. ஆனால் இரண்டு பேதுரு இரண்டாம் அதிகாரம் எட்டாம் வசனத்தில் பேதுரு கூறி இருக்கிற சத்தியம் லோத்தை குறித்து நமக்கு ஒரு உண்மையை தெளிவு படுத்துகிறது கவனியுங்கள் வாசிக்கிறேன்.
2 பேதுரு 2:9
[9] கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.
……………………
லோத்து சோதோமில் வசித்தது உண்மைதான். ஆனால் அங்கே அவன் மகிழ்ச்சியாக இல்லை. அந்தப் பட்டணத்திற்கு உள்ளே அவன் புறப்பட்டு போன நாள் உண்மையாகவே ஒரு மிகப்பெரிய பரிதாபமான நாள் என்று சொல்லலாம். ஏனென்றால் லோத்து தனது குடும்பத்தை இழந்து போனான். அந்த முழு சம்பவத்தை நீங்கள் வாசிக்கும் பொழுது எப்படி முழு குடும்பத்தை இழந்து போனான் இன்ற பரிதாபமான நிகழ்ச்சியை நீங்கள் கவனிக்கலாம்.
அருமையானவர்களே, இன்று கூட அநேக தனி மனிதர்கள் இரட்சிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்கள் வாழ்க்கை தரத்தின் நிலையினாலோ அல்லது அவர்கள் வசிக்கும் இடத்தினாலேயோ அவர்களுடைய குடும்பத்தை அவர்கள் இழந்து போகிறார்கள். ஒரு நீதிமானாக தங்கள் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய தாக்கத்தை இழந்து போகிறார்கள். ஏன்? இறுதியாக சாட்சியையுமே இழந்து போகிறவர்களாக இருக்கிறார்கள்.
திருச்சபையிலே போதகராய் இருந்ததனாலே இப்படிப்பட்ட அனேக கிறிஸ்தவர்களுடைய வாழ்க்கையை நான் பார்த்திருக்கிறேன்.
ஒருமுறை ஒரு வாலிபன் தனது போதகரிடத்தில் வந்து ஐயா இந்த கிறிஸ்துவ சமயமே வெறும் போலியானது என்னுடைய தகப்பனாருடைய மரணத்திற்கு பின் நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட போகிறோம் என்று கூறினானாம். ஒருவேளை அவன் தனது குடும்பத்தை குறித்து கூறினாலும் அவனுடைய தகப்பனார் எவ்வளவு பெலவீனமான ஒரு கிறிஸ்துவ வாழ்க்கையை அவர்களுக்கு முன் வைத்திருக்கிறார் என்பது புரிந்து கொள்ளக் கூடியதாய் இருக்கிறது.
அருமையானவர்களே நாம் பார்க்கிறது போல அந்த குடும்பத்தின் தலைவன் கர்த்தரை அறிந்த ஒருவனாய் இருந்தாலும் தனது மகனை இழந்து போனார் மற்ற இடங்களிலேயும் அவர் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை இழந்து போனார். ஆனால் பிரியமானவளே அந்த தகப்பனாருடைய இரட்சிப்பை குறித்து கேள்வி கேட்க முடியாது. அந்த மனிதர் ஆண்டவராக இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற ஒருவர் தான் ஆனால் அதை அவருடைய வாழ்க்கையில் அவர் வெளிப்படுத்தவில்லை.
அதேபோலத்தான் லோத்தினுடைய வாழ்க்கையில் அவன் நீதிமானாக இருந்தாலும் அவருடைய குடும்பத்தை அவனால் இரட்சிப்பிற்குள் வழிநடத்த முடியவில்லை. ஒருவேளை சோதோம் பட்டணத்திற்கு உள்ளே செல்லாதவனாய் இருந்திருந்தால் அவனுடைய வாழ்க்கை வித்தியாசமானதாய் இருந்திருக்கும்.

ஆம் அருமையான சகோதரனை சகோதரியே நாம் எங்கே வசிக்கிறோம் யாரோடு அதிகமாய் பழகுகிறோம் நம்முடைய பிள்ளைகளுடைய பழக்க வழக்கங்கள் யாருடன் அதிகமாக இருக்கிறது என்பது எல்லாவற்றையும் நாம் கவனிக்க வேண்டும். இல்லை என்றால் நாம் இரட்சிக்கப்பட்டு இருந்தாலும் நம்முடைய குடும்பத்திலே நம்முடைய மனைவியை மற்றும் நம்முடைய பிள்ளைகளை நாம் விசுவாச வாழ்க்கையை விட்டு இழுந்து போவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆதியாகமம் 19:1
[1] அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள். லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து:
……………………
தேவனுடைய நியாய தீர்ப்பை அறிவிப்பதற்காக இந்த இரண்டு தூதர்களும் சோதாமில் உள்ள லோத்தை பார்க்க செல்கிறார்கள். இப்பொழுது லோத்து சோதோம் நகரத்தின் வாசலில் உட்கார்ந்து இருக்கிறான். அந்த காலங்களில் ஒரு நகரத்தின் வாசலில் அமர்ந்திருப்பவர்கள் அந்த நகரத்தின் நீதிபதிகள் என்ற உண்மை உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நம்புகிறேன்.
ஆதியாகமம் 19:2
[2] ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
…………………….
அந்த இரண்டு மனிதர்களுடைய பாதங்களும் நிச்சயம் அழுக்காக இருந்திருக்க வேண்டும். மம்ரே சமவெளியில் இருந்து சோதோம் வரை வெறும் காலணிகள் மட்டும் அணிந்து கொண்டு வந்திருந்தால் உங்கள் கால்களையும் கூட கழுவ வேண்டியதிருக்கும். அந்நாட்களிலே அன்னியர்களுக்கு விருந்தோம்பல் செய்தவர்கள் பின்பற்றிய இந்த வழக்கத்தை குறித்து நாம் மீண்டும் சிந்திக்க வேண்டும்.
லோத்து ஒரு விருந்தோம்பல் குணம் கொண்டவர். இந்த அந்நியர்கள் வந்த பொழுது அவர்களை தன் வீட்டிற்கு வரும்படி அவர் அழைத்துச் சென்றார். அவர்களும் உள்ளே வந்தார்கள். இருந்தாலும் ஆரம்பத்தில் அவர்கள் கொஞ்சம் தயக்கம் காட்டினார்கள்
என்ன சொன்னார்கள் பாருங்கள். அதற்கு அவர்கள் அப்படி அல்ல வீதியிலே இரா தங்குவோம் என்று சொல்லுகிறார்கள். அதாவது நாங்கள் வெளியிலேயே தாங்கிக் கொள்கிறோம் உங்களுக்கு எந்த இடையூறும் செய்ய நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்கள். நிச்சயமாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே இப்படி கூறினார்கள்.
ஆதியாகமம் 19:3
[3] அவன் அவர்களை மிகவும் வருந்திக்கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்து பண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
……………………..
லோத்துவின் வீட்டிற்கு வந்தவர்களுக்கு இப்பொழுது மற்றும் ஒரு விருந்து கிடைக்கிறது. அவர்கள் ஏற்கனவே ஆபிரகாமுடன் ஒரு விருந்து சாப்பிட்டார்கள் இப்பொழுது லோத்தோடு ஒரு விருந்து சாப்பிடுகிறார்கள்.
நாங்கள் வீதியிலே தங்கி பூங்காவிலேயே தூங்கிக் கொள்கிறோம் என்று சொன்னது போல அவர்கள் கூறிய பொழுது, லோத்து அவர்களிடத்தில் சோடோமில் நீங்கள் எப்படி செய்ய முடியாது, அது ஆபத்தானது, நீங்கள் அப்படி செய்தால் உங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று கூறுகிறார். இங்கே ஒரு காரியததை நாம் கவனிக்க வேண்டும்
இன்று உலகத்தில் பல பட்டணங்கள் தங்கள் பெயரை சோகம் என்று மாற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறதே. அப்படி அவர்கள் தூங்குவது பாதுகாப்பானது அல்ல.‌ பல பட்டணங்களிலே தனியாய் இருக்கும் பெண்கள் இரவிலே தேவனுடைய ஆலயத்திற்கு வரக்கூட பயப்படுகிறார்கள். சிலர் தங்கள் ஊர்களிலே இரவு ஆன உடன் வீட்டை பூட்டி விடுகிறார்கள். மறுநாள் விடியும் வரை அதைத்திறக்கிறது இல்லை.
.‌ சில பட்டினங்களின் சில பகுதிகளில் இரவிலே தெருவிலே நடப்பது கூட பாதுகாப்பானது அல்ல.
சொல்லப்போனால் சோதும் மற்றும் கொமோராவின் நாட்கள் மீண்டும் வந்து விட்டன நடைமுறையில் அதே காரணங்களுக்காக தான் லோத்து
இல்லை இல்லை நீங்கள் வீதியில் தங்க வேண்டாம் அது உங்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்று கூறினார் அவர் அவர்களை மிகவும் வருந்தி கேட்டுக் கொண்ட பொழுது தான் அவர்கள் உள்ளே வந்தார்கள்.

ஆதியாகமம் 18 மற்றும் 19-ஆம் அதிகாரங்களில் நாம் காணும் ஆபிரகாம் மற்றும் லோத்து ஆகிய இருவரின் வாழ்க்கை முறை, இன்று நம் ஒவ்வொருவருக்கும் ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாகவும் பாடமாகவும் இருக்கிறது. நிகழ்ச்சியை நிறைவு செய்யும் இந்த கற்றுக்கொண்ட சத்தியங்களை ஒருவருக்கு கூட நாம் மனதில் கொண்டு வருவோமா?
ஆபிரகாம் தேவனோடு ஒரு நண்பனைப் போல சஞ்சரித்தார். அவர் காட்டிய அன்பான உபசரிப்பு, அவர் அறியாமலேயே தேவதூதர்களையும் கர்த்தரையும் உபசரிக்க வைத்தது.
மேலும்: ஒரு மனிதன் தேவனோடு நெருக்கமாய் இருக்கும்போது, தேவன் தான் செய்யப்போகிற காரியங்களை அவனுக்கு மறைப்பதில்லை. “ஆபிரகாமுக்கு நான் மறைப்பேனோ?” என்று கர்த்தர் கேட்ட வார்த்தை, ஆபிரகாம் தேவன் மேல் வைத்திருந்த விசுவாசத்திற்கும், அவர் தன் குடும்பத்தை நடத்தும் விதம் தேவன் அறிந்திருந்ததற்கும் சான்றாக இருக்கிறது.
அது மட்டுமல்ல ஆபிரகாம் ஒரு சுயநலவாதி அல்ல. பட்டணத்தின் அழிவைக் கேட்டவுடன், அங்குள்ள நீதிமான்களுக்காகவும், தன் உறவினருக்காகவும் இறைவனிடம் பரிந்து பேசுகிறார். நம்முடைய ஜெப ஜீவியம் மற்றவர்களுக்காகப் பரிந்து பேசும் வல்லமை கொண்டதாக இருக்கிறதா??.
லோத்து ஒரு நீதிமானாக இருந்தும், அவர் சோதோம் என்ற பாவ பட்டணத்தின் வாசலில் (நீதிபதியாக) அமர்ந்திருந்தது, அவர் உலகத்தோடு கொண்டிருந்த நெருக்கத்தைக் காட்டுகிறது.
லோத்து தன் தனிப்பட்ட வாழ்வில் நீதிமானாக இருக்கலாம், ஆனால் தன் குடும்பத்தினரிடத்தில் ஆன்மீக தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டார்.
இந்த வேத பகுதி நமக்கு மற்றும் ஒரு எச்சரிப்பையும் தருகிறது : நாம் எங்கே வசிக்கிறோம், யாரோடு பழகுகிறோம் என்பது நம்முடைய ஆத்துமாவை மட்டுமல்ல, நம் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறது. லோத்துவைப்போல “இரட்சிக்கப்பட்டும், சாட்சியற்ற” வாழ்க்கை வாழ்வது ஒரு கிறிஸ்தவனுக்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.
இன்று நான் கற்றுக் கொண்ட சத்தியங்களை நம்முடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து சரி செய்ய வேண்டிய காரியங்களை சரி செய்ய திட்டமிடுவோமா?

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top