ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை

வேதாகமப் பயணம் - ஆதியாகமம் 14
0:00 0:00

நீங்கள் கேட்பவை

டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 14
நிகழ்ச்சி எண்: 0032

வாசியுங்கள்

நேற்றும் இன்றும் என்றும் மாறாத ஜீவன் உள்ள தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் உங்களை அன்புடன் வாழ்த்துகிறோம்.

இன்று நாம் ஆதியாகமம் 14ம அதிகாரத்தை கற்றுக் கொள்ள இருக்கிறோம். இதில் கிழக்கில் உள்ள ராஜாக்கள் சோதோம் கொமோரா பட்டணங்களை கைப்பற்றினார்கள். லோத்துவின் குடும்பம் சிறைபிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் ஆபிரகாம் சென்று அவர்களை விடுதலை செய்தது மட்டுமல்ல அதற்காக தனக்கு எதுவும் வேண்டாம் என்றும் கூறிவிட்டார். என்று பார்க்கிறோம்
ஆதியாகமம் 14 ஆம் அதிகாரத்தில் யுத்தத்தை குறித்த முதல் பதிவை நாம் பார்க்கிறோம். இங்கே ஆபிராம் லோத்தை விடுதலை செய்கிறார். அது மட்டுமல்ல முதல் ஆசாரியனை நாம் இங்கே சந்திக்கிறோம். மெல்கிசேதேக்கால் ஆபிரகாம் ஆசீர்வதிக்கப்படுவதை வாசிக்கிறோம். இதுதான் இங்கே நாம் பார்க்கிற இரண்டு முக்கியமான சம்பவங்கள். சொல்ல போனால் இது குறிப்பிடத்தக்க ஒரு அதிகாரம். அந்த தொடர் கதையோடு கூட இது தொடர்பற்றதாக தெரிகிறது. இதை இந்த இடத்தில் எழுதாமல் சென்றிருக்கலாம் என்று நம்மை நினைக்கத் தூண்டுகிறது. அது இல்லாமல் ஒரு தொடர்ச்சி இருக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால் பிரியமானவகளே இது ஆதியாகம புத்தகத்தில் உள்ள ஒரு முக்கியமான அதிகாரங்களுள் ஒன்று.

வாசிக்கிறேன்.
‭ஆதியாகமம் 14:1-2
[1] சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லா கோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; [2] அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.
……………………
. அருமையானவர்களே, முதலாவதாக இதை ஒரு வரலாற்று ஆவணம் என்று சொல்லலாம். முதல் 11 வசனங்களில் கிழக்கு தேசத்து ராஜாக்கள் சோதம் மற்றும் கொமோரா ராஜாக்களை தோற்கடித்ததாக எழுதப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளாக தீவிரவாத வேதவிமர்சன அறிஞர்கள் இதை நிராகரித்து வந்தார்கள்
இந்த மனிதர்களின் பெயர்கள் ஒரு உலக வரலாற்றில் எங்குமே காணப்படவில்லை என்றும் இது ஒரு கேள்விக்குரிய கதை என்றும் கூறி வந்தார்கள். ஆனால் இந்த ராஜாக்களின் பெயர்கள் நினைவுச் சின்னங்களிலும் களிமண் பலகைகளிலும் கண்டெடுக்கப்பட்டு அவர்கள் உண்மையில் வாழ்ந்தார்கள் என்பது இப்பொழுது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சொல்லப்போனால் அம்ராபெல் என்பவர் உலக வரலாற்றில் அறியப்படும் ஹமுராபிதான் என்பது இப்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. இங்கே நமக்கு கிடைத்துள்ள இந்த பதிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

அங்கே போர் நடந்தது. வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் போர் இதுவே ஆகும். மனித குலம் ஆரம்பகாலத்திலேயே போரிடத் தொடங்கிவிட்டது. இது வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் போராக இருந்தாலும் இதுதான் உலகத்தில் நடந்த முதல் போர் என்று நாம் சொல்ல முடியாது .அப்படி ஒரு எண்ணத்தை கொடுக்க இதை எழுதியவரும் விரும்ப மாட்டார். இந்த போர் இங்கே பதிவு செய்யப்பட்டதற்கு காரணம் ஆபிரகாமின் சகோதரனின் மகனான லோத்து இதிலே தொடர்புள்ளவராய் இருப்பது தான்.
‭ஆதியாகமம் 14:3-4
[3] இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள். [4] இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம் பண்ணினார்கள்.
………………….
ஆம், இந்த கலகமே கிழக்கு தேசத்து ராஜாக்களை சோதோம் மற்றும் கொமோராவிற்கு எதிராக வரவழைத்தது. இந்த ராஜாக்கள் இதற்கு முன்பே போர் செய்து இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால் கிழக்கு தேசத்து ராஜாக்கள், சமவெளி பகுதியில் இந்த நகரங்களை ஏற்கனவே தங்களுக்கு கீழ் அடிபணிய வைத்திருந்திருக்கிறார்கள். ஆனால் அந்த நகரங்கள் இப்பொழுது கலகம் செய்யும் நிலையை எட்டி இருந்தன. ஐந்து முதல் 11 வரையிலான வசனங்களிலே சவக்கடலின் கீழ் பகுதியை சுற்றி ஒன்றிணைந்த ராஜாக்களை கிழக்கு தேசத்து ராஜாக்கள் எவ்வாறு வெற்றி பெற்றார்கள் என்ற விவரத்தை வாசிக்கிறோம்.
வசன 12 பாருங்கள்.
‭ஆதியாகமம் 14:12
[12] ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.
………………
நாம் ஏற்கனவே பார்த்தது போல லோத்து சோதோமில் குடியிருந்தான் இப்பொழுது அவனும் சிறை கைதியாக பிடிக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டான்.‌ இந்த யுத்தத்தை குறித்து வேதத்திலே சொல்லப்பட்டிருப்பதற்கான முக்கிய காரணம் ஆபிரகாம் தனது சகோதரனின் மகனான லோத்துவின் நிமித்தமாக இப்பொழுது செயல்பட போகிறார்.
‭ஆதியாகமம் 14:13
[13] தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும், ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான்.
…………………..
அங்கே யுத்தத்திற்கு வந்த கிழக்கு தேசத்து ராஜாக்கள் சோதோம் மற்றும் கொமோரா பகுதிகளிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவர்களுடன் வெளியேறிய பொழுது அவர்கள் சவக்கடலின் மேற்கு கரை வழியாக வடக்கு நோக்கி சென்றார்கள். இந்தப் பகுதி ஆபிராம் குடியிருந்த ஏபிரோன் மற்றும் மம்ரே ஆகியவற்றிற்கு மிக அருகில் இருந்த ஒரு இடம். அன்று ஆபிராம் நின்று இருந்த இடத்திலேயே இன்றும் நீங்கள் நின்று பார்த்தால் சவக்கடலை நோக்கி நடக்கும் எந்த ஒரு அசைவையும் உங்களால் பார்க்க முடியும். எனவே ஆபிராமுக்கு இந்த செய்தி வந்து சேர்ந்தவுடன் அவர் உடனடியாக வடக்கு நோக்கிச் சென்ற எதிரிகளை பின்தொடர்ந்து விரட்டிச் செல்ல தொடங்கினார்.
இவர்கள் ஆபிராமோடு உடன்படிக்கை செய்திருந்தார்கள். கவனித்தீர்களா? இங்கே ஆபிராமோடு கூட ஒரு கூட்டம் மக்கள் இருக்கிறார்கள். அந்த நாட்களிலே எதிரிகளின் தாக்குதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்க வேண்டியது இருந்தது. ஆம் அவர்கள் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். ஏனென்றால் தனித்தனியாக இருந்தால் அழிந்து போக வாய்ப்பு இருந்தது.
‭ஆதியாகமம் 14:14 , 15
[14] தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர் மட்டும் அவர்களைத் தொடர்ந்து,
‭ஆதியாகமம் 14:15
[15] இராக்காலத்திலே அவனும், அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி,
………………….
இது ஒரு ஆச்சரியமான காரியமாய் இருக்கிறது. மேலும் இது ஆபிராம் இடத்திலிருந்த சொத்துக்களின் அளவை நமக்கு வெளிப்படுத்துகிறது. ஆபிராமுக்கு எத்தனை வேலைக்காரர்கள் இருந்தார்கள் என்பது குறித்த ஒரு புரிந்து கொள்ளுதலை இந்த வேத பகுதியை நமக்கு சொல்லுகிறது. அவருடைய சொந்த வீட்டில் இருந்தவர்களிலேயே 318 பேருக்கு அவரால் ஆயுதம் கொடுக்க முடிந்தது. அப்படி என்றால் ஆயுதம் எடுக்க முடியாத நிலையிலே அவரோடு இன்னும் எத்தனை பேர் இருந்திருப்பார்கள்? யோசித்துப் பாருங்கள். உதாரணமாக அங்கே பெண்கள் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இருந்திருப்பார்கள். இருந்தாலும் அவரால் 318 பேரை ஆயுதம் ஏந்திய வீரர்களாக நிறுத்த முடிந்தது, அந்த அளவிற்கு அதிகமான வேலைக்காரர்களை கொண்டிருந்தார் என்பது – ஆபிராம் ஆடு மாடுகளை வளர்க்கும் ஒரு மிகப்பெரிய தொழிலை செய்து வந்தார் என்பதை நமக்கு சொல்லுகிறது.
கவனியுங்கள் ஆபிராம் தனது வேலைக்காரர்களை பல குழுக்களாக பிரித்தார். ஒரு குழுவினர் அவர்களை பின்தொடர்ந்து சென்று அனேகமாக பின்புறத்தில் இருந்து தாக்குதல் நடத்தினார்கள். மற்றொரு குழுவினர் சுற்றி வளைத்து சென்றார்கள். எதிரிகள் முதல் குழுவினருடன் போரிட திரும்பும் பொழுது இரண்டாம் குழுவினர் அவர்கள் மீது பாய்ந்து தாக்கினார்கள். இதன் விளைவாக ஆபிராமல் வெற்றியைப் பெற முடிந்தது குறைந்தபட்சம் அவர் அவர்களை நாலா புறமும் சிதறடித்தார். இதனால் அவர்கள் தாங்கள் சிறைபிடித்த மக்களையும், கொள்ளையடித்த பொருட்களையும், அப்படியே விட்டுவிட்டு உயிர் தப்பிக்க பாலைவனத்தை கடந்து ஓடிப் போனார்கள்.
‭ஆதியாகமம் 14:16
[16] சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.
………………..
கவனித்தீர்களா அவர்கள் பெண்களையும் மற்ற ஜனங்களையும் அடிமைகளாக கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆபிராம் ஒரு மகத்தான காரியத்தை செய்திருக்கிறார் அதை அவர் தனது சகோதரன் மகனாகிய லோத்துவின் நிமித்தமாகவே செய்தார். இந்த எல்லா காரியங்களும் இங்கே குறிப்பிடப்பட்டிருப்பதற்கான காரணம் இது தான். இது நிச்சயமாகவே ஒரு தேவையற்ற அல்லது சம்பந்தம் இல்லாத அதிகாரம் அல்ல. இது ஆபிரகாமின் வாழ்க்கையின் ஒரு பகுதி என்று நாம் சொல்லலாம். மேலும் இது மிகவும் முக்கியமானது.
‭ஆதியாகமம் 14:17 ‬
[17] அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
…………………….
இப்பொழுது சோதோமின் ராஜா புறப்பட்டு ஆபிராமை சந்திக்கும் படியாய் எதிர்கொண்டு போகிறார். இது மட்டுமல்ல இப்பொழுது மற்றுமொருவர் வந்து ஆபிராமை சந்திக்கப் போகிறார். அவர் அப்படி சந்தித்தது மிகவும் நல்லது. ஏனென்றால் இப்பொழுது சோகோமின் அரசன் ஆபிராமுக்கு ஒரு சோதனையை முன்வைக்க போகிறார்.
‭ஆதியாகமம் 14:18-19
[18] அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, [19] அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக.
…………………..
இந்த வேத பகுதியை வாசிக்கும் பொழுது நமக்குள்ளே பல கேள்விகள் எழும்புகின்றன முதலாவதாக இந்த மெல்கிசிதேக்கு எங்கிருந்து வருகிறார். திடீரென்று இந்த வேத பகுதியிலே அவர் அப்பத்தோடும் திராட்சை ரசத்தோடும் வருகிறார். ஆபிராமை ஆசீர்வதிக்கிறார். பின் இந்த பக்கங்களில் இருந்து அவர் மறைந்து விடுகிறார் அவ்வளவுதான். அவர் எங்கே இருந்து வந்தார்? எங்கே போகிறார்? அவருடைய பணி என்ன? என்பதைக் குறித்து நமக்கு வியப்பாக இருக்கிறது இல்லையா?
அவர் சாலேமின் ராஜா என்றும் அதே சமயம் உன்னதமான தேவனுடைய ஆசாரியர் என்றும் நாம் அறிகிறோம் ஆனால் இப்பொழுது நமக்கு மற்றும் ஒரு கேள்வி வருகிறது. உன்னதமான தேவனைப் பற்றி அவர் எப்படி தெரிந்து கொண்டார்? அவர் எங்கோ ஓரிடத்திலே அதை தெரிந்து கொண்டிருக்கிறார். எல் எலோகிம் என்பது உன்னதமான தேவனை குறிக்கிறது. அவர் வானத்தையும் பூமியையும் படைத்தவர். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் அவர் ஜீவன் உள்ள தேவன். ஆதியாகமத்தின் தேவன் / நோவாவின் தேவன் மற்றும் ஏனோக்கின் தேவன். இவர்தான் அந்த உன்னதமான தேவன் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உரிய தெய்வமல்ல. H.C. லியூ போல்ட் என்பவர், ஆதியாகமத்தை குறித்து எழுதி இருக்கிற அவருடைய புத்தகத்திலே இது முற்றிலும் ஒரு ஏக தேவ கொள்கை என்று குறிப்பிடுகிறார். அதுபோல டாக்டர் சாமுவேல் எம். ஸ்வமர்- மதங்களின் தோற்றம் என்ற அவருடைய புத்தகத்திலே பல தெய்வ வழிபாட்டிற்கு முன்னமே ஏக தெய்வ வழிபாடு இருந்தது என்பதை இது வெளிப்படுத்துவதாக கூறியிருக்கிறார். அதாவது எல்லா மனிதர்களுக்கும் ஜீவன் உள்ள மெய்யான தேவனை பற்றிய அறிவு இருந்தது. இப்பொழுது இந்த இடத்தில் ரோமர் 1: 21-யும் நாம் வாசிக்க வேண்டும். கவனியுங்கள் வாசிக்கிறேன்
‭ரோமர் 1:21
[21] அவர்கள் தேவனை அறிந்தும், அவரை தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.
……………….
ஆம் மனிதர்கள் படைத்தவரை விட படைப்புகளை வழிபடத் தொடங்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து போய்விட்டார்கள் என்று பவுல் எழுதியிருக்கிறார். இருந்தாலும் ஆபிரகாம் காலத்தில் அந்த உலகத்திற்கே ஒரு மகா ஆசாரியராக இங்கே ஒரு மனிதரை நாம் பார்க்கிறோம். அவருக்கு ஜீவன் உள்ள மெய்யான தேவனை பற்றி அறிவு இருக்கிறது, அவர் அந்த மெய்யான தேவனுடைய ஆசாரியராக இருக்கிறார். அவர் ஆபிரகாம் இடம் அப்பத்தையும் திராட்சை ரசத்தையும் கொண்டு வருகிறார். வேதத்திலே நாம் வாசிப்பது போல இந்த அப்பமும் திராட்சை ரசம் கர்த்தருடைய பந்தியின் அடையாளங்களாக இருக்கின்றன. அவர் மனதில் என்ன வைத்திருந்தார் என்று நமக்கு புரியவில்லை
ஆனால் மெல்கிசேதேக்குக்கு எவ்வளவு காரியங்கள் தெரிந்திருக்கிறது என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.

மெல்கிசேதேக் பற்றி வேத புத்தகத்தில் மூன்று இடங்களிலே நாம் வாசிக்கிறோம் ஆதியாகமத்தில் நாம் பார்த்த இந்தப் பகுதி தவிர சங்கீதம் 110:4ல் இவ்விதமாக சொல்லப்பட்டிருக்கிறது.
‭சங்கீதம் 110:4
[4] நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார்.
…………………
மேலும் இவரைக் குறித்து எபிரெயர்க்கு எழுதப்பட்ட நிருபத்தில் பலமுறை நாம் வாசிக்கிறோம். எபிரேயர் நிருபத்தை நாம் வாசித்த பின் ஏன் இவருடைய ஆரம்பத்தை குறித்து ஆதியாகம புத்தகத்தில் எதுவும் சொல்லப்படவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. இவருடைய தகப்பனை குறித்தோ தாயைக் குறித்தோ எதுவும் சொல்லப்படவில்லை. ஏனென்றால் ஆதியாக புத்தகமே குடும்பங்களை குறித்தும் குடும்ப வரலாறுகளை குறித்தும் குறிப்பிடும் ஒரு புத்தகம். எல்லா குடும்பங்களின் ஆரம்பங்களை குறித்தும் அங்கே நாம் வாசிக்கிறோம். எந்த ஒரு முக்கியமான மனிதனைக் குறித்து சொல்லப்படும் பொழுதும் அவனுடைய பெற்றோரை குறித்து சொல்லப்பட்டிருக்கிறது. அவர் இன்னாருடைய மகன் இன்னாருடைய மகன் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த மெல்கி சேதேக்கின் வம்சாவளி பற்றிய குறிப்புகள் எதுவும் நம்மிடத்தில் இல்லை. மெல்கிசேதேக்கின் தாய் அல்லது தந்தை அல்லது அவரது நாட்களின் தொடக்கம் மற்றும் முடிவு பற்றிய எந்த பதிவும் இல்லாததற்கு காரணம் கிறிஸ்துவின் ஆசாரித்துவம் அதன் தொடக்கத்தில் மெல்கி சேதேக்கின் முறைமையின் படி அமைந்திருப்பதே ஆகும் என்று எபிரேயருக்கு எழுதின நிருபத்தின் ஆசிரியர் மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.
ஊழியத்தை பொறுத்தவரையிலும் அதாவது நம்முடைய கர்த்தராகி இயேசு கிறிஸ்து தம்மையே பலியாக கொடுத்ததிலும் / இன்று பரலோகமாக இருக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் அவர் நுழைந்ததிலும் கிறிஸ்துவின் ஆசாரியத்துவம் ஆரோனின் முறையை பின்பற்றுகிறது. ஆனால் அவரைப் பொறுத்தவரையில் நம்முடைய கர்த்தருக்கு நாட்களின் தொடக்கமோ முடிவோ இல்லை. அந்த வகையில் அவருடைய ஆசாரியத்துவம் மெல்கி சேதேக்கின் முறைமையை பின்பற்றுகிறது என்று சொல்லலாம்.
ராஜாதி ராஜாவாக கிறிஸ்து ஆபிராமின் குமாரன். அவர் தாவீதின் குமாரன் இதை மத்தேயு எழுதின சுவிசேஷம் நமக்கு தெளிவாக சொல்லுகிறது ஆனால் யோவான் சுவிசேஷத்தில் நாம் வாசிப்பது என்ன?
யோவான் 1:1 மற்றும் 14 ஆம் வசனங்களை வாசிக்கிறேன்.
ஆதியிலே வார்த்தை இருந்தது அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது அந்த வார்த்தை தேவனாய் இருந்தது.
அந்த வார்த்தை மாம்சமாகி கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய் நமக்குளே வாசம் பண்ணினார் அவருடைய மகிமையை கண்டும் அது பிதாவுக்கு ஒரே பேரானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.
………………..
சிருஷ்டிப்பை பொறுத்தவரையில் அவருக்கு ஆரம்பமும் இல்லை, முடியும் இல்லை .அவர் நித்தியமான தேவன் அவர் பரலோகத்தின் மகிமையிலிருந்து கீழே வந்தார். அந்த வார்த்தை மாம்சமானது நாம் அவருடைய மகிமையை கண்டோம்.
மெல்கிசேதேக்கின் உருவத்தில் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு அற்புதமான சித்திரத்தை ஆதியாகம புத்தகத்திலே நாம் பார்க்கிறோம்.
மெல்கிசேதேக் அப்பமும் திராட்சைரசமும் கொண்டு வந்தார். இப்பொழுது புரிகிறதா ஏன் அவர் அவைகளை கொண்டு வந்தார் என்பது? ஏனென்றால் வேதம் இவ்விதமாய் சொல்லுகிறது.
பாருங்கள் வாசிக்கிறேன்.
‭1 கொரிந்தியர் 11:26
[26] ஆகையால், நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள்.
……………….
சொல்லப்போனால் மெல்கிசேதேக் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை எதிர் நோக்கினவராய் இருக்கிறார்.
அந்த அடிப்படையிலேயே அவர் ஆபிராமை ஆசீர்வதிக்கிறார். வானத்தையும் பூமியையும் உண்டாக்கின உண்டாக்கியவர் ஆகிய உன்னதமான தேவனுடைய ஆசிர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக என்று சொன்னார். அந்த நாட்களில் இந்த மனிதர் உலகிற்கு மகா ஆசாரியராக இருந்தார். இன்று கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கே மகா பிரதான ஆசாரியராக இருக்கிறார். இங்கே விவரிக்கப்பட்டுள்ளபடி இயேசுகிறிஸ்து ஆரோனின் முறைமையின் படி அல்ல மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராயிருக்கிறார். ஆரோன் இஸ்ரவேலருக்காகவும் ஒரு தற்காலிகமான கூடாரத்திற்காகவும் மட்டுமே ஆசாரியாய் இருந்தார் ஆனால் கிறிஸ்து மெல்கி சேதேக்கின் முறைமையின்படியே ஆசாரியராயிருக்கிறார்.
‭ஆதியாகமம் 14:20
[20] உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்.
…………………..
இங்கே ஆபிராம் ஆரம்பத்திலேயே மெல்கி சேதேக்குவுக்கு தசமபாகம் கொடுத்தார். தசமபாகம் கொடுப்பதை பற்றி அவருக்கு எப்படி தெரிந்திருந்தது? மற்ற எத்தனையோ காரியங்களைப் பற்றி தேவனிடத்தில் இருந்து ஆபிராம் அறிந்திருந்தது போல இதைக் குறித்தும் அவர் தேவனிடத்தில் இருந்து ஒரு வெளிப்பாட்டைப் பெற்றிருந்தார் என்பது வெளிப்படையாக நமக்குத் தெரிகிறது.
‭ஆதியாகமம் 14:21
[21] சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான்.
……………….
இது ஆபிராமுக்கு ஏற்பட்ட ஒரு சோதனை. அந்த நாட்களின் ஹமுராபி சட்ட தொகுப்பின்படி, சிறைப் பிடிப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வந்த அந்த பொருட்களையும் மக்களையும் எடுத்துக்கொள்ள ஆபிரகாமுக்கு முழு உரிமையும் இருந்தது. ஆனால் சோதோம் ராஜா மிகவும் தந்திரமானவன். அவன் என்ன சொல்லுகிறான்? ஆட்களை எனக்கு கொடுத்து விடும் பொருட்களை நீரே எடுத்துக் கொள்ளும் அவை உமக்குரியவை என்று சொல்லுகிறான். இது ஆபிரகாமுக்கு ஒரு பெரிய சோதனையாகத்தான் இருந்தது. ஏனென்றால் அதன் பின் எப்பொழுதாவது யாராவது அந்த ஆபிராம் நிச்சயமாக ஒரு செல்வந்தர் தேவன் அவரை ஆசீர்வதித்திருக்கிறார் என்று சொல்லும்பொழுது. சோதோம் ராஜா- -ஆசீர்வாதமாவது மண்ணாவது தேவன் ஒன்றும் அவரை ஆசீர்வதிக்கவில்லை நான் தான் அவருக்கு கொடுத்தேன். நான் தான் அவரை பணக்காரனாக்கினேன் என்று சொல்லக்கூடும். ஆபிராம் அதை நன்கு அறிந்திருந்தார். எனவே தான் இப்பொழுது அவர் என்ன சொல்கிறார் கவனியுங்கள்.
‭ஆதியாகமம் 14:22 ,23
[22] அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து; ஆபிராமை ஐசுவரியவனாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று,
[23] வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
……………….
ஆபிராம் இன்னும் மெல்கி சேதேகை சந்தித்த தாக்கத்திலும் அவருடைய ஆசிர்வாதத்திலும் இருக்கிறார்.
உண்மையாகவே அவர் மெல்கி சேதேக்கை சந்தித்தது ஒரு நல்ல காரியம் ஆயிற்று. அருமையான சகோதரனே சகோதரியே நமக்கு வரக்கூடிய எந்த ஒரு சோதனைக்கும் தேவன் எப்பொழுதும் நம்மை தயார்படுத்துகிறார். நம்மால் தாங்க முடியாத இந்த சோதனையும் நமக்கு வர அவர் அனுமதிக்க மாட்டார் என்றும் வேதம் மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறது.
கவனியுங்கள் வாசிக்கிறேன்.
‭1 கொரிந்தியர் 10:13
[13] மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
………………….
ஆபிராம் போருக்கு செல்லும் பொழுதே தேவனிடத்தில் ஒரு உடன்படிக்கை செய்திருக்க வேண்டும். தேவனே நான் இந்த போரில் கொள்ளை பொருட்களை பெறுவதற்காக ஈடுபடவில்லை. நான் சொத்துக்களுக்கு பின்னால் ஓடவில்லை. என் சகோதரனின் மகனான லோத்தை மீட்கவும் நிலை நிறுத்தவும் நான் விரும்புகிறேன் என்று அவர் சொல்லி இருப்பார். தேவனும் அதைச் செய்ய ஆபிராமை அனுமதித்தார். இப்பொழுது ஆபிராம் இதை சோதோம் ராஜாவுக்கு ஒரு சாட்சியாக கூறுகிறார். ஆபிராம் ஒருவேளை இவ்வாறு சொல்லி இருக்கலாம் . நான் ஜீவன் உள்ள மெய்யான தேவனை வணங்குகிறேன். நான் எதையும் எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று நான் ஆணையிட்டு இருக்கிறேன் உம்மால் என்னை ஐசுவரியவான் ஆக்க முடியாது. ஒரு செருப்பு வாராயோ அல்லது ஒரு நூல் இழையையோயோ கூட உம்மிடத்தில் இருந்து நான் வாங்க மாட்டேன். ஏனென்றால் நீர் அப்படி செய்துவிட்டு செய்துவிட்டு ஊர் முழுவதும் சுற்றி அலைந்து ஆபிராமை நான் தான் ஐஸசுவரரியவனாக்கினேன் என்று சொல்லிக் கொள்வீர். நான் ஐசுவரரியவானாவதாக இருந்தால் அதை தேவனை செய்யட்டும்.
‭ஆதியாகமம் 14:24
[24] வாலிபர் சாப்பிட்டதுபோக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
……………….
இங்கே ஆபிராம் சொல்வது எனன?
என்னோடு வந்த இந்த மனிதர்களுக்கு கொள்ளை பொருட்களில் உரிமை உண்டு. அவர்கள் அதை எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் நான் எதையும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்று சொல்கிறார். அதுமட்டுமல்ல என்னோடு இருக்கும் வாலிபர்கள் சாப்பிட்ட ஆகாரமே அவர்கள் உமக்கு செய்த சேவைக்கும் உம்மை மீட்டெடுத்ததற்கும் அவர்கள்காளுக்குறிய கூலியாகும். ஆனால் என்னை பொருத்தவரை நீர் எனக்கு எதையும் தர முடியாது என்று உறுதியாய் சொல்லி விட்டார்.

இன்று நாம் கற்றுக் கொண்ட வேத பகுதியில் நம் மனதில் வைக்க வேண்டிய சத்தியங்கள் என்ன?
ஆதியாகமம் 14-ஆம் அதிகாரம் என்பது வெறும் யுத்தங்களைப் பற்றிய வரலாறு மட்டுமல்ல, அது ஒரு விசுவாசியின் வாழ்வில் வரும் யுத்தம், ஆசீர்வாதம் மற்றும் சோதனை ஆகிய மூன்றையும் குறித்த ஆழமான பாடமாகும்.
1. அன்பினால் தூண்டப்பட்ட தைரியம்
ஆபிராம் தனது சுயநலத்திற்காக யுத்தம் செய்யவில்லை. லோத்து தன்னை விட்டுப் பிரிந்து சென்றபோதிலும், அவன் ஆபத்தில் இருக்கிறான் என்று அறிந்தவுடன் ஆபிராம் உடனடியாகச் செயல்பட்டார். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து நமக்காகச் செய்த மீட்பின் நிழலாட்டம். நாம் பாவம் மற்றும் சாபத்தின் பிடியில் சிறைப்பட்டிருந்தபோது, நம்மை விடுவிக்க அவர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார்.
ஒரு விசுவாசியின் பலம் அவனுடைய ஆட்களின் எண்ணிக்கையில் இல்லை , அவன் கொண்டுள்ள அன்பிலும் தேவன் மீதுள்ள விசுவாசத்திலுமே இருக்கிறது.
இரண்டாவதாக
ஆபிராம் வெற்றியோடு திரும்பி வரும்போது, மர்மமான முறையில் தோன்றும் மெல்கிசேதேக்கு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஒரு “முன்னடையாளம்” (Type of Christ). அவர் அப்பத்தையும் திராட்சைரசத்தையும் கொண்டு வந்தது, வருங்காலத்தில் கிறிஸ்து சிலுவையில் சிந்தவிருந்த இரத்தம் மற்றும் பிட்கப்படவிருந்த அவருடைய சரீரத்தின் அடையாளமாகும்.
நம்முடைய போராட்டங்களுக்குப் பிறகு, நம்மைத் தேற்றவும், பலப்படுத்தவும், ஆசீர்வதிக்கவும் நம்முடைய மகா பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்து எப்போதும் முன்வருகிறார். எனவே நாம் சந்திக்கும் போராட்டங்களில் நாம் சோர்ந்து போக வேண்டிய அவசியம் இல்லை.
மூன்றாவதாக
வெற்றிக்குப்பின் ஆபிராமுக்கு இரண்டு சந்திப்புகள் நிகழ்ந்தன. ஒன்று மெல்கிசேதேக்கின் ஆசீர்வாதம், மற்றொன்று சோதோம் ராஜாவின் சோதனை. சோதோம் ராஜா “பொருட்களை நீர் எடுத்துக்கொள்ளும்” என்று சொன்னது ஒரு உலகப்பற்றுள்ள கவர்ச்சியாக இருந்தது. ஆனால் ஆபிராம் அதை மறுத்தார்.
ஏன்?? உலகத்தின் செல்வத்தினால் நான் உயர்ந்தேன் என்று யாரும் சொல்லக்கூடாது என்பதில் ஆபிராம் உறுதியாய் இருந்தார். தேவன் தரும் ஆசீர்வாதமே ஒருவனை ஐசுவரியவானாக்கும் (நீதிமொழிகள் 10:22). சோதனையின் நேரத்தில் சோதோம் ராஜாவின் வெகுமதியை விட, மெல்கிசேதேக்கின் ஆசீர்வாதமே மேலானது என்று ஆபிராம் உணர்ந்தார்.
ஆபிராமைப் போல நாமும் நம்முடைய வாழ்க்கைப் போராட்டங்களில் தேவனைச் சார்ந்திருப்போம். வெற்றிகள் கிடைக்கும்போது, பெருமைப்படாமல் உன்னதமான தேவனுக்கு மகிமையைச் செலுத்துவோம் உலகத்தின் சலுகைகளை விட, தேவன் அருளும் நித்திய ஆசீர்வாதங்களே மேலானது என்பதை உறுதியாகப் பற்றிப் பிடிப்போம்.
இந்த சத்தியங்களை நம் வாழ்க்கையில் தொடர்ந்து கடைபிடிக்க கர்த்தர் தாமே நமக்கு கிருபை செய்வாராக ஆமென்.

ஆய்வு வழிகாட்டி

ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்

ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்

எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.

ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.

ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).

முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.

கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.

ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.

I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)

  • A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
    1. வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
    2. பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
    3. மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
      • a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
      • b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
      • c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
      • d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
      • e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
      • f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
      • g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
      • h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
  • B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
    1. பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
    2. பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
  • C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
    1. ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
    2. ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
    3. ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
    4. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
    5. ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
  • D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
    1. இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
    2. பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
  • பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
    • ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
    • ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
    • ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
    • ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
    • ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
    • ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
    • ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
    • ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
    • ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
    • ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)

II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)

  • A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23

    (தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)

    1. ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
    2. ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
    3. முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
    4. தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
    5. சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
    6. தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
    7. சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
    8. தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
    9. சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
    10. ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
    11. ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
    12. சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
  • B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26

    (மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)

    1. ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
    2. ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
    3. தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
  • C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
    1. ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
    2. யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
    3. யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
    4. யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
    5. யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
    6. யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
    7. யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
    8. யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
    9. யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
    10. ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
  • D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
    1. யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
    2. யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
    3. எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
      1. போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
      2. சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
    4. எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
      1. யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
      2. யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
      3. யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
      4. யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
      5. யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
      6. யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
      7. யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
      8. யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
    5. யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
      1. யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
      2. கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50

இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.

ஆதியாகமத்திலிருந்து மேலும்

ஆதியாகமம்

Scroll to Top