ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 12: 1 – 9
நிகழ்ச்சி எண்: 0030
வாசியுங்கள்
அருமையானவர்களே இன்று நாம் ஆதியாகமம் 12 ஆம் அதிகாரம் முதல் 9 வசனங்களை கற்றுக் கொள்ளப் போகிறோம்.
கிராண்ட் கேன்யன் என்பது வடக்கு அரிசொனாவில் உள்ள கொலராடோ நதியால் செதுக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான செங்குத்தான பக்கங்களைக் கொண்ட ஒரு பெரும் பள்ளத்தாக்காகும். இதன் ஒரு பக்கத்திற்கும் மறுபக்கத்திற்கும் இடையில் மிகப்பெரிய வேற்றுமைகள் காணப்படுகின்றன. அதுபோல ஆதியாகமம் முதல் 11 அதிகாரங்களை விட 12ஆம் அதிகாரம் மிக வித்தியாசமான ஒன்றாயிருக்கிறது.
நாம் ஏற்கனவே பார்த்தது போல ஆதியாகமம் ஒன்று முதல் 11 ஆம் அதிகாரம் வரை ஒரு பிரிவாகவும் 12 ஆம் அதிகாரம் முதல் மற்றொரு பிரிவாகவும் ஆரம்பமாகிறது.
இப்பொழுது முக்கியத்துவம் என்பது பிரம்மாண்டமான நிகழ்வுகளில் இருந்து தனி நபர்களை நோக்கி திரும்புகிறது. அவர்கள் அனைவரும் பெரியவர்களாக இல்லாவிட்டாலும் முக்கியமான ஆளுமைகளாக இருந்தார்கள். ஆதியாகமத்தில் இப்படிப்பட்ட நான்கு நபர்கள் இருக்கிறார்கள்.
முதல் 11 அதிகாரங்களில் நான்கு முக்கியமான நிகழ்ச்சிகளை நாம் படித்தோம். ஒன்று சிருஷ்டிப்பு, இரண்டாவது தேவன் மனிதனைப் படைத்த சம்பவம், மூன்றாவது பெரு வெள்ளம், நான்காவதாக பாபேல் கோபுரம். இந்த எல்லா நிகழ்வுகளிலேயும் மனுக்குலம் என்ற கூட்டத்தோடு தேவன் இடைபடுவதை பார்க்கிறோம். ஆதாம் மற்றும் ஆபிரகாம் தவிர தேவன் யாருக்கும் தன்னைக் காண்பித்ததில்லை
தேவன் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் கவனித்து வந்தார் ஆனால் 12 ஆம் அதிகாரத்தில் ஒரு தீவிரமான மாற்றம் ஏற்படுகிறது. அது என்ன? இப்பொழுது நான்கு தனிநபர்கள் நம் முன்னே கொண்டு வரப்படுகிறார்கள். தேவன் இனி நிகழ்வுகளை கையாள போவதில்லை மாறாக ஒரு மனிதனை கையாள போகிறார். அந்த மனிதரிடத்தில் இருந்து அவர் ஒரு தேசத்தை உருவாக்குவார் .
முதல் பகுதியில் விசுவாசத்தின் மனிதனான ஆபிரகாமை பற்றி 12ம் அதிகாரம் முதல் 23ஆம் அதிகாரம் வரைக்கும் பார்க்கிறோம். பின்னர் அவருடைய பிரியமான குமாரனாகிய ஈசாக்கை குறித்து ஆதியாகமம் 24 முதல் 26 ஆம் அதிகாரம் வரைக்கும் வாசிக்கிறோம். அடுத்ததாக தெரிந்து கொள்ளப்பட்டவனும், சிட்சிக்கப்பட்ட குமாரனுமாகிய யாக்கோபை குறித்து ஆதியாகமம் 27 முதல் 36 ஆம் அதிகாரம் வரை பார்க்கிறோம். அதற்குப் பிறகு யோசேப்பின் துன்பத்தையும் மகிமையையும் ஆதியாகமம் 37 முதல் 50 வரை வாசிக்கிறோம். தேவனுடைய வார்த்தையை புரிந்து கொள்வதற்கு இந்த நான்கு கோத்திர பிதாக்களும் மிகவும் முக்கியமானவர்கள். ஆதியாகத்தின் மீதி உள்ள பகுதியிலே இவர்களுடைய வரலாற்றை நாம் விரிவாக பார்ப்போம்.
தேவன் இனி ஒட்டுமொத்த மனித இனத்தையும் நேரடியாக கையாளப்போவதில்லை. ஏதேன் தோட்டத்தில் மனிதன் பாவம் செய்த பின், காயீனின் பெரிய பாவத்தையும் நாம் பார்க்கிறோம். அவனுடைய பெரிய பாவம் என்ன? அதுதான் பெருமை. அவன் தேவனுக்கு முன் கொண்டு வந்த காணிக்கையை குறித்து அவனுடைய இருதயத்தின் ஆழத்தில் பெருமை கொண்டிருந்தான். அவனுடைய காணிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது அவனது சகோதரனுடைய காணிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை கண்டு அவன் தன் சகோதரனை வெறுக்க ஆரம்பித்தான். பின்னர் அந்த வெறுப்பு அவனை கொலை செய்யுவும் வழி நடத்தி விட்டது. இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் பெருமை.
சாத்தானுடைய பாவமும் பெருமைதான் என்பதை நான் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். பெருமை என்பது மனதின் பாவம்.
இதற்குப் பின் பெரு வெள்ளம் வந்த காலத்தில் மாம்சத்தின் இச்சையே மக்கள் மத்தியில் இருந்த பெரிய பாவம். மனிதனுடைய செயல்கள் மட்டுமல்ல அவனுடைய கற்பனைகளும் கூட மாம்சத்தை திருப்தி படுத்துவதற்காகவே இருந்தன என்பதை நாம் பார்த்தோம்.
தேவன் சரியான நேரத்தில் பெருவெள்ளத்தை கொண்டு வந்து மனிதனை நியாயம் தீர்க்க வேண்டியது இருந்தது. ஏனென்றால் அப்பொழுது நோவா என்ற ஒரே ஒரு விசுவாசி மட்டுமே எஞ்சியிருந்தார். தேவன் இன்னும் ஒரு தலைமுறை வரை காத்திருந்தால் கூட அவர் ஒட்டுமொத்த மனித இனத்தையுமே இழந்திருப்பார். தேவன் நிச்சயமாக இந்த உலகத்திடம் மிகுந்த பொறுமையுடன் இருந்தார். அவர் மெத்துசலாவின் முழு ஆயுள் காலமான 969 ஆண்டுகள் வரை காத்திருந்தார். யார் வேண்டுமென்றாலும் தங்கள் மனதை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு அளிக்க 969 ஆண்டுகள் என்பது போதுமான காலம் என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஆனால் மக்கள் தேவனிடம் திரும்புவதற்கு பதிலாக அவருக்கு எதிராக தங்கள் சொந்த விருப்பங்களை கொண்டவர்களாய் பகிரங்கமான கலகத்திலே ஈடுபட்டார்கள். பெருவெள்ளத்தை தொடர்ந்து நடந்த பாபேல் கோபுர நிகழ்வு – தேவனை தேடுகிறவன் ஒருவனும் இல்லை என்பதை வெளிப்படுத்தியது.
பாபேல் கோபுர சம்பவத்திற்கு பிறகு தேவன் ஒட்டுமொத்த மனித இனத்தில் இருந்தும் விலகி ஒரு தனி மனிதனை நோக்கி திரும்புகிறார். அந்த ஒரு தனி மனிதனிடத்திலிருந்து அவர் ஒரு தேசத்தை உருவாக்கப் போகிறார். அந்த தேசத்திற்கு அவர் தனது வெளிப்பாடுகளை வழங்கப் போகிறார். மேலும் அந்த தேசத்திலிருந்து அவர் ஒரு ரட்சகனையும் இந்த உலகத்திற்கு வரவழைக்கப் போகிறார். வெளிப்படையாக பார்த்தால் தேவன் செய்யக்கூடிய ஒரே வழி இதுதான் அல்லது இதை செய்ய வேறு வழிகள் இருந்திருந்தாலும் இதுவே அவருக்கு மிகச்சிறந்த வழியாக இருந்திருக்கும். எது மிகச் சிறந்ததோ அதையே எப்பொழுதும் தேவன் செய்வார் என்று நாம் உறுதியாய் அவரை நம்பலாம்.
தேவன் ஆபிரகாமை தேர்நதெடுத்த பொழுது அவர் ஒரு விசுவாசமுள்ள மனிதனையே தெரிந்தெடுத்தார்.
யாருடைய அளவுகோலால் அளந்து பார்த்தாலும் ஆபிரகாம் உண்மையிலேயே ஒரு மாபெரும் மனிதர். இந்த பூமியிலே வாழ்ந்த மனிதர்களிலேயே மிகச் சிறந்தவர்களில் அவரும் ஒருவர். இந்த காலத்திலும் கூட ஒரு மனிதரின் சிறப்பை நீங்கள் எப்படி அளவிட முடியும்? முதலில் அவர் புகழ் பெற்றவர் ஆக இருக்க வேண்டும். அந்த வகையில் ஆபிரகாம் நிச்சயமாக அதற்கு பொருத்தமானவர். அவர் அநேகமாக உலகின் மிகவும் புகழ்பெற்ற மனிதராக இருக்கலாம். வானொலி , தொலைக்காட்சி , youtube, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், whatsapp என்றுபெருகி உள்ள இந்த காலத்திலும் கூட மற்ற யாரை விடவும் ஆபிராமை பற்றி தான் அதிகமான மக்கள் கேள்விப்பட்டு இருப்பார்கள். உலகத்தின் மூன்று பெரும் சமயங்கள் ஆபிரகாமிடத்தில் இருந்தே தொடங்கி இருக்கின்றன. யூத மதம் / இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவம்.. இன்று ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் நம் நாட்டு தலைப்புச் செய்திகளிலே இடம்பெறுகிறவர்களை பற்றி தெரியாத ஆனால் ஆபிரகாமை பற்றி தெரிந்த கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஒரு மாபெரும் மனிதருக்கான அடையாளங்களில் ஒன்று புகழ். அந்த வகையில் ஆபிரகாம் நிச்சயமாக ஒரு மாபெரும் மனிதர்.
இரண்டாவதாக ஒரு மாபெரும் மனிதருக்கான மற்றொரு அடையாளம் அவர் உயர்ந்த குணநலன்களையும் தாராள மனப்பான்மையையும் கொண்டவராய் இருக்க வேண்டும். ஆபிராமை விட தாராள மனப்பான்மை கொண்ட ஒருவரை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?? அவர் செய்ததை செய்யக்கூடிய ஒரு மனிதர் இன்று உயிரோடு இருப்பாரா என்பது சந்தேகம்தான். அவரும் அவருடைய சகோதரன் மகனான லோத்துவும் பாலஸ்தீன தேசத்திற்கு திரும்பி வந்த பொழுது, லோத்துவிடம் அவனுக்கு தேவையான எந்த பகுதியை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படியாக ஆபிரகாம் கூறினார். மீதி இருப்பதை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று ஆபிரகாம் சொன்னார். இன்றைய காலகட்டத்தில் ஒரு வியாபார ஒப்பந்தத்தில் ஏதேனும் ஒரு மனிதன் இப்படி செய்வான் என்று நீங்கள் நினைத்துப் பார்க்க முடிகிறதா?? அருமையான சகோதரனே, சகோதரியே இன்று சபைகளுக்குள்ளும் கூட விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் இல்லை. அப்படி இருக்கும் பொழுது கடினமான இந்த வியாபார உலகத்திலே அப்படி யாராவது செய்வார்களா? ஆனால் ஆபிரகாம் ஒரு தாராள குணம் உள்ள மனிதராய் இருந்தார். சோதோம் மற்றும் கொமோரா ராஜாவிடத்திலே அவர் எவ்வளவு தாராளமாக நடந்து கொண்டார் என்பதை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா??
? தேவன் ஒருவரை மட்டும் எதிர்நோக்கி இருந்ததால் அவர்களிடத்திலிருந்து ஒரு காலணிக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு வாரைக்கு கூட கொள்ளைப் பொருளாக பெறமாட்டேன் என்று அவர் கூறினார்.
மூன்றாவதாக, ஒரு சிறந்த மனிதர் ஒரு முக்கியமான காலகட்டத்தில் வாழ வேண்டும். நெப்போலியன் கூறியது போல, அவர் விதியின் மனிதராக (a man of destiny) இருக்க வேண்டும். அதாவது அந்த மனிதரும், சரியான நேரமும் வாழ்க்கையின் சந்திப்பில் ஒன்றாக இணைய வேண்டும். இது நிச்சயமாக ஆபிரகாமின் விஷயத்தில் உண்மையாக இருந்தது.”
நாம் பார்த்த மூன்று காரியங்களை குறித்து உலகமும் ஏற்றுக்கொள்ளும், ஆனால் நான்காவது நான் சொல்லப் போகும் ஒரு காரியத்தை உலகம் ஒத்துக் கொள்ளாது. ஒரு மாபெரும் மனிதனுக்கு இருக்க வேண்டிய நான்காவது அத்தியாவசியமான ஒரு தகுதி அவர் ஒரு விசுவாசமுள்ள மனிதராக இருக்க வேண்டும். நீங்கள் கவனித்து பார்த்தால் எல்லா மாபெரும் மனிதர்களும் அவர்கள் கிறிஸ்தவர்களாக இல்லாத பொழுதும் கூட ஏதோ ஒன்றின் மேலே நம்பிக்கை வைத்திருப்பர்கள். ஆபிரகாம் ஒரு விசுவாசம் உள்ள மனிதன் என்று தேவன் கூறினார். வேதாகத்திலே ஆபிரகாமை பற்றி சொல்லப்பட்டிருக்கும் மிக உன்னதமான ஒரு காரியம் என்னவென்றால் அவர் தேவனை நம்பினார் என்பதே.
பவுல் என்ன எழுதுகிறார் பாருங்கள்.
ரோமர் 4:3
[3] வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது.
……………….
ஆதியாகமத்தின் இந்த அதிகாரங்களை நாம் படிக்கும் பொழுது இந்த மனிதனின் வாழ்க்கையிலே விசுவாசத்தை வளர்ப்பதற்காக தேவன் அவருக்கு ஏழு முறை காட்சியளிப்பதை நாம் பார்க்கிறோம். இதன் பொருள் என்ன?? அவர் ஒரு குறையற்ற மனிதன் என்பது அல்ல. உண்மையில் அவர் பலமுறை தோல்வி அடைந்தார். தேவன் அவருக்கு நான்கு சோதனைகளை கொடுத்தார். அந்த நான்கிலும் அவர் முகம் குப்புற விழுந்து தோல்வியடைந்தார் என்று சொல்லலாம். ஆனால் சீமோன் பேதுருவை போலவே அவரும் எழுந்து தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு மீண்டும் பயணத்தை தொடங்கினார். பிரியமானவர்களே, தேவன் உங்கள் இருதயத்தையும் உங்கள் வாழ்க்கையையும் தொட்டிருந்தால் நீங்களும் ஒருவேளை விழுந்து போயிருக்கலாம் ஆனால் நீங்கள் நிச்சயமாக எழுந்து மீண்டும் பயணத்தை தொடங்குவீர்கள் என்று உறுதியாக நான் சொல்ல விரும்புகிறேன். நமக்கு முன்னால் உள்ள இந்த அதிகாரத்தை படிக்கும் பொழுது ஆபிரகாமின் வாழ்க்கையில இது நடப்பதை நாம் பார்க்க போகிறோம்.
தொடர்ந்து ஆபிரகாமை தேவன் அழைத்ததை குறித்தும் ஆபிராமுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்தும் நாம் பார்ப்போம்.
ஆதியாகமம் 12 ஆம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களிலேயும் தேவன் ஆபிராமுக்கு கொடுக்கிற மூன்று வாக்குறுதிகளை நாம் பார்க்கிறோம் இது வேத புத்தகத்தில் மிக முக்கியமான ஒரு பகுதி இந்த வாக்குறுதிகளை விவரமாக சொல்வது தான் வேத புத்தகத்தின் மற்ற பகுதிகள்.
கவனியுங்கள் வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 12:1-3
[1] கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. [2] நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். [3] உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
…………………..
இங்கே தேவன் ஆபிரகாமுக்கு கொடுக்கும் வாக்குறுதி மூன்று அம்சங்களைக் கொண்டது. இதன் முதல் பகுதி தேசம் அல்லது நிலத்தை சார்ந்ததாகும். தேவன் நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ அதை உனக்கு தருவேன் என்று கூறுகிறார். வாக்குறுதியின் இரண்டாம் பகுதி ஜனம் அல்லது நாடு ஆகும். நான் உன்னை பெரிய ஜாதி ஆக்கி உன்னை ஆசீர்வதித்து உன் பேரை பெருமைப்படுத்துவேன் என்று சொல்கிறார். மேலும் தேவன் ஆபிரகாமை பார்த்து உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன் உன்னை சபிக்கிறவனை சபிப்பேன் என்றும் வாக்குறுதி கொடுக்கிறார். மேலும் இந்த வாக்குறுதியின் மூன்றாம் பகுதி அவரை ஒரு ஆசீர்வாதமாக மாற்றுவதாகும். பூமியில் உள்ள வம்சங்கள் எல்லாம் உனக்குள் ஆசிர்வதிக்கப்படும். ஆம் இதுதான் தேவன் ஆபிராமுக்கு கொடுத்த மும்மடங்கு வாக்குறுதி ஆகும்.
இப்பொழுது நமக்கு ஒரு கேள்வி எழும்புகிறது. அது என்ன?? ஆபிராமுக்கு அளித்த வாக்குறுதிகளை தேவன் நிறைவேற்றினாரா? தேவன் நிச்சயமாக ஆபிராமிடத்தில் இருந்து ஒரு பெரிய ஜனத்தை உருவாக்கினார். மேலும் இந்த பூமியில் மற்ற எந்த ஜனத்தையும் விட மிக நீண்ட காலம் ஒரு தேசமாக நிலைத்திருக்கின்ற பெருமை அவர்களுக்கு மட்டும்தான் உண்டு. இந்த மக்கள் கூட்டத்திற்கு இணையாக வேறு யாரும் நிற்க முடியாது.
இரண்டாவது வாக்குறுதியை பற்றி என்ன?? ஆபிரகாம் மனித குலம் முழுமைக்கும் ஆசிர்வாதமாக இருந்தாரா?? ஆம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் அவர் உலகம் முழுவதற்கும் இன்றும் ஆசீர்வாதமாக இருக்கிறார். மேலும் தேவனுடைய முழுமையான வார்த்தைகளும் அதாவது வேத புத்தகமும் ஆபிரகாம் மூலமாக நமக்கு கிடைத்திருக்கிறது என்று கூறலாம்.
ஆபிரகாமுக்கு தேவன் கொடுத்த வாக்குறுதிகளிலே முதல் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தையும் அவர் நிறைவேற்றி இருக்கிறார். தேவன் ஆபிரகாமை அந்த தேசத்தை நான் உனக்கு தருவேன் என்று கூறியிருந்தார். ஆனால் நம்முடைய காலத்தில் அங்கு என்ன நடக்கிறது? அவர்கள் அந்த தேசத்தை மிக கடினமாக பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். தேவன் அந்த ஜனத்திற்கு அந்த தேசத்தை கொடுக்கும் பொழுது இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருப்பது போல எப்பொழுதுமே தங்கள் பாதுகாவலை குறித்து அவர்கள் சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த தேசம் முழுமையாக இன்னமும் தேவனால் அவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இந்த காரணத்தினாலே தேவன் ஆபிரகமுக்கு கொடுத்த வாக்குறுதியை சரியாக நிறைவேற்றவில்லை என்று சொல்லலாம்
அருமையான சகோதரனே சகோதரியே, நாம் அப்படி சொல்ல தேவையில்லை. வாக்குறுதியின் மூன்றில் இரண்டு பங்கு மிகத்துல்லியமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் தான் கீழ்படியாமலும் தேவனை விட்டு தூரமாகவும் சென்றால் அவர்களை அந்த தேசத்திலே இருக்க விடமாட்டேன் என்று தேவன் சொல்லி யிருக்கிறார். இன்று அவர்கள் அவரை விட்டு தூரமாய் இருக்கிறார்கள். இதன் விளைவாகவே அவர்கள் அங்கே பெரும் போராட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதையெல்லாம் நான் கூறும் பொழுது தேவன் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று நீங்கள் சொல்ல வேண்டாம் சொல்லப்போனால் தேவன் எதைச் செய்வேன் என்று சொன்னாரோ அதைத்தான் சரியாக செய்து கொண்டிருக்கிறார். இஸ்ரவேல் ஜனங்களை தேவன் மீண்டும் அந்த தேசத்தில் குடியேற வைக்கும் ஒரு நாள் வரும். அப்பொழுது அவர்கள் ஒரு சிறிய பகுதியை மட்டும் கொண்டிருப்பவர்களாய் இருக்க மாட்டார்கள். “அவர்களுக்குக் கிழக்கே யூப்ரடீஸ் நதி வரையிலும், வடக்கே இத்திய (Hittite) தேசம் இருந்த எல்லை வரையிலும், தெற்கே அரேபியப் பாலைவனத்தில் உள்ள ஒரு சிறிய நதியான எகிப்திய நதி வரையிலும் நிலம் இருக்கும்.
(Picture)
தேவன் அவர்களுக்கு என்று கொடுத்த நிலத்தை அவர்கள் இதுவரை முழுமையாக ஆக்கிரமித்ததே இல்லை. அவர்கள் அதிகாரத்தின் உச்ச கட்டத்திலிருந்த பொழுது கூட அவர்கள் 30,000 சதுர மைல் பரப்பளவை மட்டுமே கொண்டிருந்தார்கள். ஆனால் தேவன் அவர்களுக்கு கொடுத்திருப்பது மூன்று லட்சம் சதுர மைல்களாகும் அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியது இருக்காது. ஆனால் தேவன் விதித்த நிபந்தனைகளின் படியும் அவர் குறித்த காலத்திலுமே அதை அவர்கள் பெற்றுக் கொள்ளப் போகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையாலோ அல்லது அமெரிக்காவாலோ அல்லது ரஷ்யாவாலோ அவர்களின் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது.
அனுதினமும் செய்தித்தாள்களிலும் youtube செய்திகளிலும் இஸ்ரவேல் தேசத்தை குறித்து வரும் காரியங்களை குறித்து நாம் கவலைப்படாமல் அமர்ந்திருக்க முடியும். கடவுள்தான் அனைத்தையும் இயக்குகிறார் என்ற நிலைக்கு நாம் வரும்பொழுது மட்டுமே அந்த சமாதானம் நமக்கு கிடைக்கும். உலகத்தில் நடக்கிறதுகளை கண்டு கலங்காமலும் நாம் நிம்மதியாக இருக்க முடியும். ஏனென்றால் தேவனே அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தன்னுடைய வழியிலே செய்து முடிப்பார்.
தேவன் ஆபிராமுக்கு கொடுத்த மூன்று வாக்குறுதிகளின் அடிப்படையில் ஆபிரகாம் என்ன செய்தார்?
ஆதியாகமம் 12 ஆம் அதிகாரம் முதல் வசனத்தில் நாம் வாசிப்பது என்ன? கர்த்தர் ஆபிராமை நோக்கி உன் தேசத்தையும் உன் ஜனத்தையும் உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டு புறப்பட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்துக்கு போ என்று சொன்னார். கல்தேயர் உடைய ஊர் என்ற தேசத்தில் ஆபிராம் வாழ்ந்த போது தேவன் அவரை அழைத்தார் என்பதை தெளிவாக அறிகிறோம். மேலும்
ஸ்தேவான், ஆலோசனை சங்கத்தின் முன் நிறுத்தப்பட்ட பொழுது என்ன சொன்னான்?? கவனியுங்கள்.
அப்போஸ்தலர் 7:2-4
[2] அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: [3] நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். [4] அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார்.
……………………
ஆபிரகாம், தன்வீடு, தன் தொழில், மற்றும் ஊர் நகரத்தின் உயர்ந்த நாகரிகத்தை விட்டு வெளியேறியதின் மூலமாக தேவனுக்கு கீழ்ப்படிந்தார். அவர் தான் எங்கே போகிறோம் என்று தெரியாமலேயே புறப்பட்டார். இருந்தாலும் அது முழுமையான ஒரு கீழ்படிதல் அல்ல. ஏனென்றால் அவர் தனது குடும்பத்தினர் சிலரை தன்னோடு கூட அழைத்துச் சென்றார் என்று வாசிக்கிறோம். அவர் தனது தந்தை தேராகை தன்னுடன் அழைத்துச் சென்றார். ஆனால் தேவன் அவரை அழைத்துச் செல்ல வேண்டாம் என்று சொல்லி இருந்தார். தேவன் அவரை ஏன் அந்த தேசத்தில் இருந்தும், அவருடைய உறவினர்களிடத்திலிருந்தும் வெளியேற்ற விரும்பினார்?? அதற்கான பதிலை யோசுவாவின் புத்தகத்தில் நாம் பார்க்கிறோம். கவனியுங்கள் வாசிக்கிறேன்
யோசுவா 24:2
[2] அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.
…………………..
கவனித்தீர்களா?? அவர்கள் அந்நிய தேவர்களை சேவித்தார்கள். ஆம் ஆபிரகாம் ஒரு விக்கிரக ஆராதனைக்காரராக இருந்தார். அக்காலத்தில் உலகம் மிகவும் சீர்கெட்ட நிலையில் இருந்தது. தேவன் மனுக்குலத்தை காப்பாற்ற விரும்பியதால், இப்படித்தான் செயல்பட வேண்டியதிருந்தது. அவருக்கு இருந்த மற்றுமொரு வழி அவர்கள் அனைவரையும் அழித்துவிட்டு, மீண்டும் புதிதாக தொடங்குவதுதான். அவர் அப்படி செய்யாததை குறித்து நாம் மகிழ்ச்சி அடைய வேண்டும். அவர் அப்படி செய்திருந்தால் நாம் இங்கே இருக்க மாட்டோம். ஏனென்றால் நாம் பாவியாகவே இந்த உலகத்திற்கு வந்தோம். உண்மையிலே எல்லா பாவிகளும் துடைத்தெறியப்பட்டு இருப்பார்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அவர் இரக்கமும் கிருபையும் உள்ள தேவன். அவர் பாவிகளை இரட்சிக்கிறார்.
தொடர்ந்து வரும் வசனங்களை நீங்கள் கவனிப்பீர்கள் என்றால் 17 ஆம் அதிகாரம் வரை
ஆபிராம் என்று தான் அழைக்கப்பட்டார். அதன் பின் தேவன் அவர் பெயரை ஆபிரகாம் என்று மாற்றுகிறார்.
ஆதியாகமம் 12:4
[4] கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான்.
………. …….. .
கவனித்தீர்களா? இப்பொழுது கர்த்தர் ஆபிராமுக்கு சொன்னபடியே அவன் புறப்பட்டு போனார். இப்பொழுது தேவனுடைய வழி நடத்துதல் என்பது அவரை பின்பற்றி கானான் தேசத்திற்கு உள்ளே செல்கிறார்.
இந்த வசனம் மற்றும் ஒரு செய்தியையும் நமக்குச் சொல்கிறது லோத்தும் ஆபிராமோடே கூட போனான்.
சொல்லப்போனால் இப்பொழுதும் முழுமையான கீழ்படிதல் இல்லை. ஏனென்றால் ஆபிராம் லோத்தை தன்னோடு கூட்டிக் கொண்டு செல்கிறார்.
என்னை கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதரனை சகோதரியே நம்மில் சிலரையும் ஆண்டவர் சில நேரங்களிலே குறிப்பிட்ட பணிகளுக்கு நாம் அவருடைய துணையோடு மட்டும் தனித்து செல்ல வேண்டும் என்று விரும்புகிறார். ஆனால் நாம் பல நேரங்களிலே நமக்கு உதவி கரங்களை உலகத்திலே தேடுகிறோம் ஆனால் பின்னால் அப்படிப்பட்டவர்களாலேயே நாம் பாடுகளையும் சந்திக்கிறோம்.
அடுத்த வசனம் பாருங்கள்.
ஆதியாகமம் 12:5
[5] ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள்.
………………..
இந்த வசனத்தில் நான் பார்ப்பது போல ஆபிராம் தன் மனைவியாகிய சாராயை தன்னுடன் அழைத்துச் சென்றார். அது நிச்சயமாக சரியான ஒரு காரியம் தான். இப்பொழுது ஆபிராம் தன் சகோதரனுடைய குமாரனாகிய எல்லோத்தையும் அவர்கள் சம்பாதித்து இருந்த தங்கள் எல்லா சம்பவத்தையும் ஆரானில் தாங்கள் சம்பாதித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டு போகிறார்கள். சொல்லப்போனால் ஆபிராம் ஆரானில் செலவழித்த காலம் என்பது வெறும் நேரத்தை கடத்திய காலமாகவும் தேவனுடைய ஆசிர்வாதத்தை தாமதப்படுத்திய காலமாகவும் இருந்தது. ஆபிராம் கானான் தேசத்திற்குள் நுழையும் வரை குறைந்தபட்சம் தனது நெருங்கிய உறவினர்களிடத்திலிருந்து பிரிந்து லோத்தை மட்டும் தன்னுடன் அழைத்து வரும் வரை தேவன் மீண்டும் அவருக்கு தரிசனமாகவே இல்லை. இப்பொழுது அவர்கள் புறப்பட்டு போய் காணான் தேசத்தில் சேர்ந்தார்கள் என்று பார்க்கிறோம்.
அடுத்த வசனம் பாருங்கள்.
ஆதியாகமம் 12:6
[6] ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.
…………………
கானானியர்கள் காமின் குமாரனாகிய கானானின் சந்ததியினர் என்பதற்கான பதிவு இங்கே நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் மிக முக்கியமான ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். ஆபிராம் என்ற ஒரு பயங்கரமான இடத்தை விட்டு விட்டு தானியமும் திராட்சரசமும் நிறைந்த பாலும் தேனும் ஓடுகிற, எல்லாம் அழகாக இருந்த ஒரு தேசத்திற்கு வந்தார் என்று பலர் நினைக்கிறார்கள்.
இந்த தேசத்திற்கு வந்ததன் மூலம் ஆபிராம் தனது வாழ்க்கை நிலையை உண்மையிலேயே மேம்படுத்திக் கொண்டார் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் வேத புத்தகம் அப்படி நமக்குச் சொல்லவில்லை.
தொல்பொருள் ஆராய்ச்சி மூலமாக அந்த காலத்தில் கல்தேயருடைய– ஊர் மிக உயர்ந்த நாகரிகத்தைக் கொண்டிருந்தது என்பதை நாம் அறிய முடிகிறது. ஆபிராம் மற்றும் சாராயின் வீட்டில் ஒரு குளியல் தொட்டி கூட இருந்திருக்கலாம். ஊர் என்கிற அந்த நகரம் ஒரு பெரிய மற்றும் செழிப்பான நகரமாக இருந்திருக்கிறது. ஆபிராம் அதை எல்லாம் விட்டுவிட்டு கானான் தேசத்திற்கு வந்தார். அந்த காலத்தில் காணானியன் அந்த தேசத்தில் இருந்தான். அவன் ஒரு காட்டுமிராண்டியாக மற்றும் அஞ்ஞானியாக அவன் இருந்தான். ஆபிராம் கானானுக்கு வந்ததின் நோக்கம் நிச்சயமாக தனது வசதிகளை மேம்படுத்திக் கொள்வதற்காக அல்ல. அவர் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்துதான் இங்கே வந்தார். இப்பொழுது அவர் கீழ்ப்படிந்து விட்டார். அடுத்ததாக என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
ஆதியாகமம் 12:7
[7] கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
…………………….
தேவன் ஆபிரகாமுக்கு இரண்டாம் முறையாக தரிசனமான போது இப்பொழுது அவன் கர்த்தருக்கென்று ஒரு பலி பீடத்தை கட்டுகிறார். தாமதத்தின் இடமாகிய ஆரானில் அவர் இருந்த பொழுது தேவன் அவருக்கு தரிசனமாகவே இல்லை. – கவனித்தீர்களா?
நீங்களும் நானும் வேத புத்தகத்தை வாசிக்கும் பொழுது எப்பொழுதும் ஆசீர்வதிக்கப்படாமல் இருப்பதற்கு ஒரு காரணம் வேதாகமம் நம்மை தண்டித்து கண்டிக்கிறது. தேவன் ஏற்கனவே நமக்கு கொடுத்த வெளிச்சத்தின் படி நாம் வாழ்வதில்லை நம் தேவனுக்கு கீழ்ப்படிந்தால் இன்னும் அதிகமான ஆசீர்வாதங்களை கர்த்தர் நிச்சயம் நமக்கு தருவார். ஆபிராமின் அனுபவத்தில் அவர் புறப்பட்டு சென்று தனக்கு இருந்த வெளிச்சத்தின் படி தேவனுக்கு கீழ்ப்படிய தொடங்கிய பின்னர்தான் தேவன் மீண்டும் ஆபிராமுக்கு தரிசனமானார் என்பதை நாம் பார்க்கிறோம். இப்பொழுது தேவன் மீண்டும் தரிசனமாகி ஆபிராமோடு பேசுகிறார்.
தொடர்ந்து வரும் அதிகாரங்களில் ஆபிராமை ஒரு பலிபீடம் கட்டும் மனிதனாக நாம் பார்க்க போகிறோம்.
அடுத்த வசனம் பாருங்கள்.
ஆதியாகமம் 12:8
[8] பின்பு அவன் அவ்விடம்விட்டுப்பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
…………………..
கவனியுங்கள், ஆபிராம் இந்த தேசத்திற்குள் வந்தவுடன் இரண்டு காரியங்களை செய்கிறார் முதலாவது தனது கூடாரத்தை போடுகிறார். இது ஒரு புதிய வீடு வாங்கி அதிலே குடியிருப்பது போன்றது. அவர் கூடாரத்தில் தான் குடியிருந்தார். அதுவே அவர் வாழ்ந்த இடமாய் இருந்தது. அதன் பின் அங்கே ஒரு பலிபீடத்தை கட்டினார் என்று வாசிக்கிறோம். அது தேவனுக்கு அவர் கொடுத்த சாட்சியாக இருந்தது. ஆபிராம் சென்ற இடமெல்லாம் தேவனுக்காக ஒரு சாட்சியை விட்டுச் சென்றார்.
என் சத்தத்தை கவனித்துக் கொண்டிருக்கிற எனக்கு அருமையான சகோதரனே சகோதரியே உங்களுடைய சாட்சி எப்படிப்பட்டதாக இருக்கிறது? நாம் ஒரு சாட்சியாக இருப்பதற்காக நம் வீட்டின் முன்னால் துண்டு பிரசுரங்களை வைத்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லது நம்முடைய வாகனத்தில் இயேசு இரட்சிக்கிறார் என்ற ஸ்டிக்கரை ஒட்ட வேண்டிய அவசியம் இல்லை. சிலர் அப்படிப்பட்ட வாசகங்களை தங்கள் வாகனத்தில் ஒட்டிக்கொண்டு அரசாங்கத்தின் சாலை விதிகளை மீறி நடக்கிறார்கள். அது ஒரு சாட்சி அல்ல. ஆபிராம் அமைதியாக தேவனை தொழுது கொண்டார். எனவே சுற்றி இருந்த கானானியர்களும் இவர் தேவனை தொழுது கொள்ளுகிற மனிதன் என்பதை அறிந்து கொண்டார்கள். நம்முடைய வீடுகளிலே பாடல்களை பாடி குடும்ப ஜெபம் செய்யும் பொழுது தெருவில் செல்கிறவர்கள் இவர்கள் கர்த்தரை தொழுதுகொள்ளுகிறவர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று நம்முடைய வீட்டை கடந்து யாராவது சென்றால் உள்ளே இருந்து வருகிற பாடல் சத்தம் எதுவாக இருக்கிறது?? தெருவிலே நம்முடைய உறவுகள், சாட்சி உள்ளதாய் இருக்கிறதா?
ஒன்பதாம் வசனம் வாசிக்கிறேன்.
ஆதியாகமம் 12:9
[9] அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
…………………….
வெப்பமான கால நிலையை நோக்கிச் செல்ல வேண்டும் என்றால் தெற்கு திசை நோக்கி தான் செல்ல வேண்டும். அதுதான் சரியான திசை எனவே ஆபிராம் தெற்கு நோக்கி நகர்கிறார் அவருக்கு ஒரு இடத்தில நிலைத்திருக்க முடியாத ஒரு சுபாவம். அவர் ஒரு நாடோடியாக இருந்தார். @@@
பிரியமானவர்களே, ஆபிராமின் வாழ்க்கையை கற்றுக் கொண்ட நாம், நம்முடைய கீழ்ப்படிதல் எப்படி இருக்கிறது என்பதை சற்று யோசித்துப் பார்ப்போம். ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கான பதில் வரவில்லை என்று கவலையோடு இருக்கிறீர்களா ?? கர்த்தர் கற்றுக் கொடுத்த காரியங்களுக்கு நாம் கீழ்ப்படிந்து நடக்கும் பொழுது தொடர்ந்து அவர் நம்மை நிச்சயமாய் நடத்துவார். ஆபிரகாமை வழிநடத்தின கர்த்தர் உங்களையும் வழிநடத்தி ஆசீர்வதிப்பாராக ஆமென்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
