ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் ‘வேதாகமத்தின் வழியே’ (Thru the Bible)
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 10:1 – 11:3
நிகழ்ச்சி எண்: 0028
வாசியுங்கள்
அருமையானவர்களே, வேத சத்தியங்களை முறையாக அறிந்து கொள்ள தொடர்ந்து எங்களோடு இணைந்து கொள்ளும் உங்களுக்காக கர்த்தரை துதிக்கிறோம். இவ்வாறு நீங்கள் எங்களோடு இணைந்து கொள்ளும் ஒவ்வொரு மணித்துளியும் உங்கள் வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து ஜெபிக்கிறோம். கர்த்தர் உங்கள் வாழ்க்கையிலும் பெரிய காரியங்களை செய்வாராக. இந்த தொடர் நிகழ்ச்சி மூலமாக நீங்கள் ஆசிர்வதிக்கப்படுவதை அறிந்து கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்.
இன்று நாம் ஆதியாகமம் 10: 1 முதல் 11: 3 வரை சிந்திக்கப் போகிறோம்.
இந்த பத்தாம் அதிகாரம் வம்ச வரலாறுகள் மற்றும் குடும்பங்களை பற்றிய ஒரு அதிகாரம். இவர்களே உலகத்தின் நாடுகளின் தோற்றமாக இருக்கிறார்கள். இந்த அதிகாரத்திற்கு நாம் கொடுக்கும் ஒரு இடத்தை விட இது மிக முக்கியமானது. நீங்கள் மானிட இனவியல் அதாவது Ethnolog மானிடவியல் அதாவது anthropology மற்றும் பூமியில் மனித குலத்தின் வரலாறு ஆகியவற்றிலே ஆர்வம் கொண்டவர் என்றால் இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறதை விட இன்னும் ஆழமான ஆய்வை நீங்கள் விரும்பலாம்.
மானிட இனவியல் முதுகலை பட்டம் பெற்ற H.S. மில்லர் என்பவர் நோவாவின் மூன்று குமாரர்களான ,சேம், காம் மற்றும் யாப்பேத்து ஆகியோரின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மனித குடும்பத்தின் மும்மடங்கு பிரிவை அடிப்படையாகக் கொண்டு ஆதியாகமம் பத்தாம் அதிகாரத்தை பயன்படுத்தி நாடுகளின் தோற்றத்தை வரைபடம் ஆக்கியிருக்கிறார். சொல்லப் போனால்
யாப்பேத்தின் குமாரர்களோ அல்லது காமின் குமாரர்களோ – சிலர் இஸ்ரவேலின் காணாமல் போன 10 கோத்திரங்கள் என்று அழைக்கும் அந்த பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல என்பதை மானிட இனவியல் தெளிவாகக் கூறுகிறது.
இங்கே பத்தாம் அதிகாரத்தில் நோவாவின் மூன்று குமாரர்களுடைய வம்ச வரலாற்றை நாம் பார்க்கிறோம்.
ஆதியாகமம் 10:1
[1] நோவாவின் குமாரராகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.
………………..
யாப்பேத்தின் குமாரரை குறித்து இரண்டு முதல் ஐந்தாம் வசனம் வரையில் நாம் பார்க்கிறோம். காமுடைய குமாரரை குறித்து ஆறாம் வசனம் முதல் 20 வசனம் வரை வாசிக்கிறோம். சேம் உடைய சந்ததியை குறித்து 21 முதல் 32 ஆம் வசனம் வரை நாம் பார்க்கிறோம். வேதாகமம் முழுவதிலும் தேவன் இதே முறையை பின்பற்றுவதை நீங்கள் பார்க்கலாம். முதலில் புறக்கணிக்கப்பட்ட வம்சங்களை குறித்த விபரங்களை கொடுத்து அவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் கூறுகிறார். பின்னர் அதை முழுமையாக விட்டு விடுகிறார். அதை மீண்டும் ஒரு பொழுதும் கொண்டு வருகிறது இல்லை. இறுதியாக அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வம்ச வழியைக் குறித்து
தொடர்ந்து விபரமாக சொல்லுகிறார். அதுவே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கி நம்மை எடுத்துச் செல்லும் வழியாக இருக்கிறது.
ஆதியாகமம் 10:2
[2] யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
……………….
H .S. மில்லர் என்பவரின் வரைபடத்தின்படி, சித்தியர்கள் (Scythians), சிலாவியர்கள் (Slavs), ரஷ்யர்கள், பல்கேரியர்கள், போஹிமியர்கள் (Bohemians), போலந்து நாட்டவர் (Poles), ஸ்லோவாக்கியர்கள், மற்றும் குரோஷியர்கள் ஆகியோர் ‘மாகோகு’ (Magog) வம்சத்திலிருந்து வந்தவர்கள். இந்தியர்களும், ஈரானிய இனங்களான மேதியர்கள், பெர்சியர்கள், ஆப்கானியர்கள், மற்றும் குர்து இனத்தவர்கள் ஆகியோர் ‘மாதாய்’ (Madai) வம்சத்திலிருந்து வந்தவர்கள். ‘யாவான்’ (Javan) வம்சத்திலிருந்து கிரேக்கர்கள், ரோமானியர்கள் மற்றும் பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசியம், இத்தாலியன் போன்ற ரொமான்ஸ் (Romance) மொழி பேசும் தேசத்தினர் உருவானார்கள்.
‘தீராஸ்’ (Tiras) வம்சத்திலிருந்து திரேசியர்கள் (Thracians), டியூட்டன்கள் (Teutons), மற்றும் ஜெர்மானியர்கள் வந்தனர்; அதிலிருந்து கிழக்கு ஜெர்மானிய மற்றும் ஐரோப்பிய இனங்கள், வட ஜெர்மானிய அல்லது ஸ்காண்டிநேவியர்கள் மற்றும் மேற்கு ஜெர்மானியர்கள் உருவானார்கள். இந்த மேற்கு ஜெர்மானிய பிரிவிலிருந்தே ஹை ஜெர்மன் (High German), லோ ஜெர்மன் (Low German) மற்றும் ஆங்கிள்ஸ், சாக்சன்ஸ், ஜூட்ஸ் (Angles, Saxons, Jutes) ஆகிய ஆங்கிலோ-சாக்சன் இனமும், ஆங்கில மக்களும் தோன்றினர்கள். என்று விவரமாக கூறியிருக்கிறார்.
இந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் அமெரிக்கா நாட்டிலும் வாழ்கிறார்கள்.
வசனம் ஆறு பாருங்கள்.
ஆதியாகமம் 10:6
[6] காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
……………………
அருமையானவர்களே இங்கே நாம் பார்ப்பது போல காமுக்கு மற்ற மகன்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால் சாபம் கானான் மீது மட்டுமே இருந்தது. அது ஏன் மற்றவர் மீது இல்லை என்பதை பற்றி நமக்கு தெரியவில்லை. கானானியர்களிடமிருந்துதான் பெனிக்கியர்கள்/ இத்தியர்கள் / எபூசியர்கள் / எமோரியர்கள் / கிர்காசியர்கள் / ஏவியர்கள் போன்றவர்கள் வந்தார்கள்.
மேலும் காமின் மகனான கூஷிடம் இருந்து ஆப்பிரிக்கர்கள் /எத்தியோப்பியர்கள் / எகிப்தியர்கள் / லிபியர்கள் போன்றவர்கள் வந்தார்கள். இந்த இனங்கள் அனைத்தும் காமிய வம்சத்தை சேர்ந்தவை. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் கூஷினுடைய ஒரு மகனை பற்றிய சில விவரங்களை பார்க்க போகிறோம்.
ஆதியாகமம் 10:8-9
[8] கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். [9] இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று.
………………..
இவன் பூமியிலே பராக்கிரமசாலியாய் இருந்தான் என்று சொல்லும் பொழுது அன்றைய உலகத்தின் ஆளுநராக முயற்சி செய்தான் என்று சொல்லலாம். மேலும் இவன் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாக இருந்தான் என்று வாசிக்கிறோம். இப்படி சொல்வதுனாலே ஆப்பிரிக்க காடுகளிலே சிறப்பாக இவன் வேட்டையாடினான் என்பது பொருள் அல்ல. பொதுவாக வாலிபர்கள் துப்பாக்கி அல்லது வேறு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வேட்டைக்கு செல்லும் பொழுது ஒரு சின்ன சிட்டுக்குருவியை அடித்துவிட்டால் கூட நிம்ரோத்தை போல இவன் பெரிய வீரன் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அவன் அப்படி அல்ல. பிரியமானவர்களே நிம்ரோத் ஆட்களை ஆதாயம் செய்கிறவனாய் இருந்திருக்க வேண்டும். இதைக் குறித்து தான் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது என்று ஒரு வேத அறிஞர் கூறியிருக்கிறார்.
அடுத்த வசனம் பாருங்கள்.
ஆதியாகமம் 10:10
[10] சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள்.
…………………
கவனித்தீர்களா? சினையார் தேசத்தில் உள்ள அந்த பட்டணங்களை / மாபெரும் நகரங்களை நிறுவியது இந்த நிமிரோத் தான். நிம்ரோத்தை பற்றி பல கதைகள் இருக்கின்றன. அவைகளை நீங்கள் மதச்சார்பற்ற வரலாற்றில் இருந்தும் அறிந்து கொள்ளலாம். அலெக்சாண்டர் ஹிஸ் லாப் என்பவர் The Two Babylons என்ற புத்தகத்தில் நிம்ரோத்தின் பின்னணியை கொடுத்திருக்கிறார். அந்த விபரங்களை நாம் பார்க்கப்போவதில்லை. ஆனால் பாபேல் கோபுரத்தை கட்டுவதற்கு நிம்ரோத் எப்படி காரணமாக இருந்தான் என்பது ஒரு சுவாரஸ்யமான கதையாகும். பெருவெள்ளத்திற்கு பிறகு மனித இனத்தை ஒன்றிணைத்துதான் ஒரு மாபெரும் உலக ஆட்சியாளராக மாறக்கூடிய ஒரு தேசமாக அவர்களை உருவாக்க முயற்சி செய்தான். அவன் ஒரு கலகக்காரன் . பாபேலை நிறுவியவன் அவன்தான். அவன் மனித ஆத்துமாக்களை வேட்டையாடுபவன். அவன் சட்டத்திற்கு புறமானவன். மேலும் அவன் இனிமேலும் தோன்றப் போகும் கடைசி உலக ஆட்சியாளரான அந்தி கிறிஸ்துவுக்கு ஒரு நிழலாக அல்லது முன் உதாரணமாய் இருக்கிறான் என்று சொல்லலாம்.
எனவே முதல் மாபெரும் நகரம் காமின் குமாரர்களிடத்திலிருந்து உருவானது இதை நாம் அங்கீகரிக்க வேண்டும். சரி இப்பொழுது கருப்பு இன மக்கள் தங்கள் இனத்தைப் பற்றிய கூடுதல் ஆய்வுகளை விரும்புகிறார்கள். நான் அவர்களை குறை கூறக் கூடாது. கடந்த பல நூறு ஆண்டுகளில் அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. கருப்பு இன மக்களின் ஆரம்ப கால வரலாறு என்னவென்றால் இந்த பூமியில் தோன்றிய முதல் இரண்டு மாபெரும் நாகரிகங்களுக்கு அவர்களே தலைமை தாங்கினார்கள். அவை காமின் குமாரர்களிடத்தில் இருந்து வந்தவை. நிம்ரோத் காமின் ஒரு குமாரனாவான்.
இதைக் குறித்து நாம் மேலும் விபரமாக படிக்கப் போவதில்லை பரிசுத்த ஆவியானவர் ஏற்படுத்திய ஒரு முறையைத்தான் நாமும் இங்கே பின்பற்றுகிறோம் அதாவது நிராகரிக்கப்பட்ட வம்சங்களை முதலிலே சொல்லிவிட்டு பிறகு அதை அவர் விட்டுவிடுவார். இப்பொழுது நாம் ஆபிரகாமுக்கும் அதன் பிறகு இஸ்ரவேல் தேசத்திற்கும் இறுதியாக இந்த உலகத்திற்கு கிறிஸ்துவின் வருகைக்கும் வழி வகுக்கும் வம்சாவளியை தொடர்ந்து பார்க்க போகிறோம். பழைய ஏற்பாடு முழுவதும் நாம் இந்த வம்சாவளியை பின்பற்றலாம். தேவன் தற்போதைக்கு மற்ற மனித குலத்திற்கு விடை கொடுத்து வட்டார். ஆனால் அவர் பின்னர் மீண்டும் அவர்களிடம் வருவார்.
Saphir என்பவர் எழுதிய The divine unity of scripture என்ற புத்தகத்தில் இருந்து ஒரு மேற்கோள் நான் உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.
கவனியுங்கள் வாசிக்கிறேன்.
ஆதியாகமம் பத்தாம் அதிகாரம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு அதிகாரமாகும். தேவன் மற்ற தேசங்களை அவற்றின் போக்கிலேயே விட்டுவிட்டு, ஆபிரகாம் முதல் தமக்கு தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமான இஸ்ரவேலர்களுடன் இடைபடத் தொடங்குவதற்கு முன்பாக பூமியின் மற்ற அனைத்து தேசங்களிலும் இருந்தும் ஒரு அன்பான விடை பெறுதலை மேற்கொள்கிறார். அது – நான் சிறிது காலம் உங்களை விட்டுப் பிரியப் போகிறேன். ஆனால் நான் உங்கள் மேல் அன்பு வைத்திருக்கிறேன். நானே உங்களை படைத்தேன். உங்கள் எதிர்காலம் அனைத்தையும் நானே ஒழுங்கு படுத்தினேன் என்று கூறுவது போல இருக்கிறது. மேலும் அவற்றின் பல்வேறு வம்சா வழிகளும் இங்கே வரிசைப்படுத்தப்படுகின்றன
ஆதியாகமம் 10 ஆம் அதிகாரத்தில் 70 தேசங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றில் 14 தேசங்கள் யாபேத்திடமிருந்து வந்தவை 30 தேசங்கள் காமிடமிருந்து வந்தவை இதை நாம் மறந்து போகக்கூடாது. இது கருப்பு இன மக்களின் தொடக்கத்தை பற்றிய ஒரு மாறுபட்ட கருத்தை உங்களுக்கு வழங்கலாம். மேலும் 26 தேசங்கள் சேமிடமிருந்து வந்தவை ஆக மொத்தம் இந்த வம்ச வழியில் வந்தவர்கள் 70 தேசங்களாக பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
உலக நாடுகளைக் கொண்டு தேவன் என்ன செய்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு காட்டுகிறார் என்று நாம் நினைக்கலாம். நம்முடைய காலத்தில் வெள்ளை இனத்தவர் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளனர்? அதற்கான காரணத்தை நாம் கவனிக்க வேண்டும் ஏனென்றால் ஆரம்ப காலத்தில் கருப்பு இன மக்களும் ஏனைய வண்ண இனத்தவருமே முக்கியத்துவம் வாய்ந்தவர்களக இருந்தார்கள். அதன் பின் தாவீது மற்றும் சாலமோனின் காலத்தில் சேமின் குமாரர்கள் இந்த உலகில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். மேலும் சேமிடமிருந்து சீரியர்கள் லீதியர்கள் மற்றும் ஆர்மீனியர்கள் போன்றவர்களும் , அதேபோல் யோக்தானிடமிருந்து (Joktan)
அரேபியர்களும் வந்ததை நீங்கள் கவனிக்கலாம். இந்த மாபெரும் தேசங்கள் அடுத்தடுத்து உருவாகின. தற்போது நாம் இருக்கும் காலம் வெள்ளை எனத்தவர் முன்னிலைக்கு வந்துள்ள ஒரு காலப் பகுதியாக தெரிகிறது .காமின் குமாரனாக இருந்தாலும் அல்லது யாப்பேத்தின் குமாரனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் அவர்களால் இந்த உலகத்தை ஆள முடியாது என்பதை இம்மூன்று தரப்பினரும் நிரூபித்துக் கொண்டிருப்பதாகவே நமக்கு தோன்றுகிறது. தேவன் இதை நமக்கு மெய்ப்பித்து மெய்ப்பித்துக் காட்டுகிறார் என்று சொல்லலாம் இதை புரிந்து கொள்வது ஒரு மகத்தான காரியம்.
ஆதியாகமம் 10:25
[25] ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
………………
பூமி பகுக்கப்பட்டது என்பதற்கு பலவிதமான விசித்திரமான விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது. அதாவது இது பூமியில் ஏற்பட்ட ஒரு பௌதீக பிரிவினை என்றும் பூமி ஏதோ ஒரு மிகப்பெரிய இயற்கை பேரழிவிற்கு உள்ளாயிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அருமையானவர்களே மோசே இங்கே செய்வது என்ன? பாபேல் கோபுரத்தை பற்றிய வரலாற்றை சொல்லும் முன் அடுத்த அதிகாரத்தை பற்றி ஒரு முன் அறிவிப்பை இங்கே நமக்கு தருகிறார் அந்த நேரத்தில் தான் பூமி பகுக்கப்பட்டது அதாவது மக்கள் பிரிக்கப்பட்டார்கள் என்று கூறப்பட்டுளது. பெரும்பாலமான மக்கள் தவற விடும் எளிமையான விளக்கம் தான் இது.
ஆதியாகமம் 10:32
[32] தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.
………………….
இந்த அதிகாரத்திற்கு மிக குறைந்த இடத்தையே நாம் ஒதுக்கி இருந்தாலும் இது வேதாகமத்தின் மிகச்சிறந்த அதிகாரங்களில் ஒன்று என்பதை நினைவு படுத்த விரும்புகிறேன் மனுக்குலத்தை பற்றிய ஒரு சரியான மதிப்பீட்டைப் பெற விரும்பும் யாரும் இது எவ்வளவு ஆழமான ஆய்வுக்குரிய ஒரு பகுதி என்பதை நிச்சயமாக பார்க்க முடியும். ஒரு சிறந்த நோக்கத்திற்காக பலர் இந்த குறிப்பிடத்தக்க அதிகாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
தொடர்ந்து 11-ம் அதிகாரத்திலிருந்தும் சில வசனங்களை பார்ப்போம்
ஆதியாகமம் 11:1
‘
1பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. ‘
……………………..
“அந்தக் காலத்தில் மக்கள் என்ன மொழி பேசினார்கள் என்றுநமக்கு தெரியாது..தங்கள் மொழியை குறித்த பெருமை உள்ள சில, அந்நாட்களிலே பாதையில் கோபுரம் கட்டப்படும் பொழுது தங்கள் மொழியைத்தான் எல்லாரும் பேசினார்கள் என்று வேடிக்கையாகவும் சற்று பெருமையாகவும் பேசிக்கொள்வார்கள். ஆனால் அது என்ன மொழி என்பது நமக்குத் தெரியாது. அந்த மொழி எதுவாக இருந்தாலும், பரலோகத்தில் பேசப்படப்போகும் மொழியும் அதுவாகத்தான் இருக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் அது நாம் இன்று பேசும் மொழிகளை விடச் சிறந்ததாகவும், இன்னும் தெளிவான பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள், வினையுரிச்சொற்கள் கொண்டதாக இருந்திருக்கும்.
இரண்டாம் வசனம் பாருங்கள்.
ஆதியாகமம் 11:2
‘2ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். ‘
……………………
அவர்கள் கிழக்கிலிருந்து பிரயாணம்பண்ணுகையில் ‘—இங்கே கிழக்கிலிருந்து என்று சொல்லப்பட்டு இருப்பதை கவனியுங்கள். அப்படி என்றால் மனிதகுலம் அநேகமாக மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ‘அவர்கள் சிநெயார் தேசத்திலே ஒரு சமவெளியைக் கண்டார்கள்’, இது டைகிரிஸ்-யூப்ரடீஸ் (Tigris-Euphrates) பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.”
ஆதியாகமம் 11:3
‘3அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. ‘
…………………
அந்தப் பகுதியில் கற்கள் ஏதுமில்லை, அதனால் அவர்கள் செங்கற்களை உருவாக்கினார்கள். அதுவே அவர்களுடைய கட்டிடங்களின் உறுதியான தன்மையைப் பற்றி ஏதோ ஒன்றை வெளிப்படுத்துகிறது. இன்றும் கூட செங்கல் ஒரு பிரபலமான கட்டிடப் பொருளாக இருக்கிறது. இருப்பினும், அங்கே அவர்களுக்கு கற்கள் கிடைக்காததால் செங்கல் அதன் நடைமுறை பயன்பாட்டிற்காக அங்கே பயன்படுத்தப்பட்டது;
அந்தப் பகுதியில் இயற்கை கற்கள் கிடைக்காததால், மனிதர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி செங்கற்களை உருவாக்கினார்கள். அவைகளை வெயிலில் காயவைக்காமல், அவற்றை “நெருப்பிலே சுட்டார்கள்” என்று வாசிக்கிறோம் (Burn them thoroughly). இது கட்டிடங்கள் மிக உறுதியாக இருக்க வேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தைக் காட்டுகிறது.
இந்த வசனங்களிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய பாட்ங்களை பார்ப்போம்:
முதலாவதாக மனிதனின் பெருமை: “நமக்கு ஒரு பேரையும் உண்டாக்குவோம்” என்று அவர்கள் எண்ணியது, கடவுளைச் சார்ந்திருக்காமல் தங்கள் சொந்த பலத்தில் தங்களை நிலைநிறுத்த முயன்றதைக் காட்டுகிறது.
வேதாகமத்தின்படி, “பெருமை” (Pride) என்பது வெறும் ஒரு குணம் மட்டுமல்ல, அது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவைத் துண்டிக்கும் ஒரு மிகப்பெரிய தடையாகக் கருதப்படுகிறது.
நீதிமொழிகள் 16:18 என்ன சொல்கிறது பாருங்கள்.
அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
……………………………
வேத வல்லுநர்கள் பெருமையை மூன்று முக்கிய நிலைகளாகப் பிரிக்கிறார்கள்:
முதலாவதாக ஆவிக்குரிய பெருமை: @@@@@@@@@இந்த பெருமை உள்ள ஒருவர் தான் மற்றவர்களை விட அதிக நீதிமான் அல்லது அதிக பக்தி உள்ளவன் என்று நினைப்பார்கள். இதற்கு உதாரணம் ஒன்றை சொல்வதென்றால் லூக்கா 18:9-14 இயேசு கூறிய : பரிசேயன் மற்றும் வரி வசூலிப்பவன் உவமையை கூறலாம்.
இரண்டாவதாக அறிவுசார் பெருமை:@@@@@@ அதாவது தனது புத்திசாலித்தனம் மற்றும் திறமையால் தான் எல்லாம் நடக்கிறது என்று எண்ணுவது. நேபுகாத்நேச்சார்”இது என் வல்லமையால் கட்டப்பட்ட பாபிலோன் அல்லவா?” என்ற மேட்டிமை கொண்டான். இதன் விளைவாக புத்தியை இழந்து 7 ஆண்டுகள் மிருகத்தைப் போல் வாழ்ந்தான்.
மூன்றாவதாக உலகப்பிரகாரமான பெருமை:@@@@@@@ செல்வம், அதிகாரம் மற்றும் அந்தஸ்தைக் கண்டு பெருமை கொள்வது.
அப்போஸ்தலர் 12: 22,23
2அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.
23அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான்.
இந்த வேத பகுதி நமக்கு கற்றுக் கொடுக்கும் மற்றும் ஒரு பாடம் என்னவென்றால்: “பூமியை நிரப்புங்கள்” என்ற கடவுளின் கட்டளைக்கு மாறாக, அவர்கள் ஓரிடத்தில் குவிய விரும்பினார்கள். இயற்கையாகவே மனிதன் தேவனுடைய கட்டளையை மீறுபவனாய் இருக்கிறான். வேத வசனங்களை முறையாக கற்றுக் கொள்ளும் பொழுது, தேவன் நம் இருதயத்தில் கொடுக்கும் பல திட்டவட்டமான கட்டளைகளை நாம் அறிந்திருக்கிறோம். அவைகளுக்கு நாம் கவனமாய் கீழ்ப்படுகிறோமா? அல்லது தவறு என்று தெரிந்தாலும் தேவனுடைய கட்டளையை மீறி நடக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தேவன் எந்த ஒரு கட்டளையை நமக்கு கொடுத்தாலும் அதை குறித்து திட்டவட்டமான உன்னதமான ஒரு நோக்கத்தை வைத்திருப்பார். எனவேதான் தேவனுடைய கட்டளைகளை நாம் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் அவருக்கு முழுமையாய் கீழ்ப்படிய வேண்டியது நம்முடைய பிரதானமான கடமையாக இருக்கிறது.
மேலும் இந்த வேத பகுதி நமக்கு கற்றுக் கொடுக்கும் இன்னுமொரு சத்தியம்
உலகம் முழுவதும் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரே மூலத்திலிருந்து அதாவது நோவாவின் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. இந்த பூமியின் வெவ்வேறு பகுதிகளில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், வெவ்வேறு நிறம் உள்ளவர்களாக காணப்பட்டாலும், வெவ்வேறு மொழி பேசுபவர்களாக இருந்தாலும் நாம் யாவரும் நோவாவின் சந்ததியாய் இருக்கிறோம்.
நம்முடைய பலவிதமான வேறுபாடுகள் இருந்தாலும் , தேவனுடைய சமூகத்தில் நான் பாவிகளாய் இருக்கிறோம். என்றாலும் மனக்குலம் அனைத்தின் பாவங்களுக்காகவும் பரிகாரியான இயேசு கிறிஸ்து சிலுவையில் நம் தண்டனைகளை ஏற்றுக் கொண்டார். இந்த உண்மையை உள்ளத்தின் ஆழத்திலே விசுவாசிக்கும் ஒவ்வொருவருக்கும் தேவருடைய பிள்ளைகளாகும் அதிகாரத்தை கொடுத்திருக்கிறார்.
எனவே தான் யோவான் ஒன்று பன்னிரண்டில் வாசிக்கிறோம்
’12அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். ‘
யோவான் மூன்று 16ிலும் எவனோ என்ற வார்த்தை உலகத்தின் எந்த மனிதனுக்கும் பொருத்தமானது. தேவன் படைத்த மனிதன் அவரை விட்டு எவ்வளவு தூரம் போனாலும் அவனைக் குறித்து கரிசனை உள்ள கர்த்தர் நிச்சயமாய் அவன் தன்னோடு வாழ ஒரு மாபெரும் திட்டத்தை வகுத்திருக்கிறார் இதைத்தான் யோவான் 3 16 இல் வாசிக்கிறோம்
’16தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். ‘
இந்த மாபெரும் அன்பை புரிந்து கொண்டு நாமும் உண்மையான மனதோடு அவரின் அன்பு கூறுவோமா?
ஜெபம் செய்வோம்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
