TTB பற்றி

Thru the Bible (TTB) ஒரு அன்பின் காவியம் – மனிதகுலத்திற்காக தேவனுடைய சொந்த அன்பின் கதை, இது பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் 66 புத்தகங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

THRU the BIBLE ஊழியத்தின் மையத்தில் இருப்பது ஒரு அன்பின் கதை: மனிதகுலத்திற்காக தேவனுடைய சொந்த அன்பின் கதை, பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் 66 புத்தகங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. ஒவ்வொரு வார்த்தையும் உண்மையாக இருப்பதால், நாம் கேட்கும் ஒவ்வொரு முறையும் இன்னும் சிறப்பாகத் தோன்றும் கதை இது.

வேதாகமப் பேருந்தின் தனித்தன்மை, முழு வேதாகமத்தையும் நாங்கள் ஒழுங்கமைந்த முறையில் படிப்பதே.

ஆதியாகமத்தில் (பழைய ஏற்பாடு) தொடங்கி, பின்னர் மத்தேயு புத்தகத்திற்கு (புதிய ஏற்பாடு) சென்று, மீண்டும் பழைய ஏற்பாட்டிற்குத் திரும்புகிறோம். இவ்வாறு வரிசைக்கிரமமாக, வேதாகமத்தின் 66 புத்தகங்கள் அனைத்திலும் பயணிக்கிறோம்.

எந்த நிறுத்தத்திலும் வேதாகமப் பேருந்தில் ஏறி,

நீங்கள் விரும்பும் வரை பயணிக்கலாம்.

THRU the BIBLE திங்கள் முதல் வெள்ளி வரை பல்வேறு ஊடகங்களில் தேவனுடைய வார்த்தையைப் போதிக்கிறது; மக்களைத் தேவனுடைய வார்த்தையின் வழியே பயணிக்க அழைக்கிறது.

எங்கள் வளங்கள் பல மொழிகளில் கிடைக்கின்றன. நீங்கள் பேசும் மொழியைத் தேர்ந்தெடுத்து, வேதாகமப் போதனைகளை உங்களுக்கு மிக நன்றாகப் புரியும் விதத்தில் கண்டறியுங்கள்.

வேதாகமப் பேருந்து உங்களுக்கு எப்படி உதவும்?
தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தை அறிய நீங்கள் ஆவலாக இருந்தால் (மாற்கு 4:23-ஐப் பார்க்கவும்), நீங்கள்:

  • தேவன் தம்முடைய வார்த்தையில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும், அது உங்களுக்கு என்ன அர்த்தம் தருகிறது என்பதையும் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள். சங்கீதம் 119:105
  • சுவிசேஷத்தின் அற்புதங்களையும், தேவனைப் பற்றி நீங்கள் விசுவாசிப்பதையும் பகிர்ந்துகொள்ள முடிந்தவர்களாவீர்கள். 1 பேதுரு 3:15
  • சத்தியத்தையும் தவறையும் இன்னும் நன்றாகப் பகுத்தறிவீர்கள். 2 தீமோத்தேயு 2:15
  • ஆறுதல் பெறுவீர்கள், பாவம் குறித்து உணர்த்தப்படுவீர்கள், விசுவாசத்தில் பலப்படுவீர்கள், தேவனோடு வாழ்நாள் முழுவதும் சஞ்சரிப்பதற்கு இன்னும் சிறப்பாகத் தயாராவீர்கள். 2 தீமோத்தேயு 3:16,17
உங்கள் வேதாகமப் பயணத்தை முழுமையாகப் பயன்படுத்துங்கள்

வேதாகமத்தைப் படிப்பது தேவனிடம் நெருங்கி வரவும், அவருடைய வார்த்தை உங்கள் வாழ்க்கையை மாற்றவும் உதவுகிறது.

  • இருதயத்தை ஆயத்தப்படுத்துங்கள்: தேவனுடைய வார்த்தையுடன் உறவாட நேரம் ஒதுக்குங்கள்.
  • வேதவாக்கியங்களை வாசியுங்கள்: ஒவ்வொரு ஆய்விலும் கொடுக்கப்பட்டுள்ள வேதாகமப் பகுதிகளை வாசியுங்கள்.
  • புரிந்துகொள்ள ஜெபியுங்கள்: படிக்கும்போது ஞானத்தையும் புரிதலையும் தரும்படி தேவனிடம் கேளுங்கள்.
  • சிந்தித்துச் செயல்படுங்கள்: கற்றுக்கொண்டவற்றை உங்கள் அன்றாட வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் எனச் சிந்தியுங்கள்.பயணத்தைப் பகிர்ந்துகொள்ளுங்கள்: கற்றுக்கொண்டவற்றைப் பகிர்ந்து, உங்களுடன் வேதாகமத்தைப் படிக்க மற்றவர்களை அழைத்து ஊக்கப்படுத்துங்கள்.
எங்களுடன் வேதாகமப் பேருந்தில் பயணியுங்கள்.
நீங்கள் முதன்முறையாக வேதாகமத்தை ஆராய்ந்தாலும், ஆழமாகப் புரிந்துகொள்ள மீண்டும் படித்தாலும், வேதாகமப் பேருந்துப் பயணத்தில் உங்களுக்கும் இடமுண்டு.
உங்கள் மொழியைத் தேர்ந்தெடுத்து, இன்றே தேவனுடைய வார்த்தையில் உங்கள் பயணத்தைத் தொடங்குங்கள்.
Scroll to Top